இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரிம200 மில்லியன் என்னவாயிற்று?

கடந்த 2011  ஆம் ஆண்டு  அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் நிதி அமைச்சரும் மலேசிய பிரதமருமாகிய நஜிப் துன் ரசாக் தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்கு ரிம100  மில்லியன் ஒதுக்குவதாக அறிவித்திருந்தார்.

ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட் தாக்குதலின்  போதும் இப்படி பல மில்லியன் ரிங்கிட் ஒதுக்படுவதாக அறிவிப்பதும் அதனைத் தொடர்ந்து மலேசிய இந்தியர்களின் மீது அக்கறை கொள்வதை இது பிரதிபலிப்பதாக நாடு முழுதும் பிரச்சாரம் மேற்கொள்வதும் நாம் வெகு சுலபமாக ஏற்றுக்கொண்டுவிட்ட சம்பிரதயாகமாகவே  ஆகிவிட்டது என்று கூறுகிரார் இண்ட்ராப் மக்கள் சக்தியின் வி. சம்புலிங்கம்.

இனியும் மலேசிய இந்தியர்கள்  வெறும் அறிவிப்புகளால் மட்டுமே திருப்தி அடைந்தவர்களாக  இருந்துவிட முடியாது. அறிவிப்புகள்  செயல் திட்டங்களாக அமல்படுத்தபடுவதை உறுதிப்படுத்தும் வகையில் ஆக்ககரமான நெருக்குதல்களை ஏற்படுத்துவதோடு தொடர்ந்து திருப்தியளிக்கும் வகையில் திட்டங்கள் மக்களைச் சென்றடயவேண்டியதை உறுதியும் செய்யவேண்டியுள்ளது.

இவ்வாறு செய்யத் தவறினால் அறிவிப்புகள் அடுத்த பட்ஜெட் தாக்குதலுக்குள் காற்றில் கறைந்து வெறுமையில் சங்கமித்து இந்திய  சமூகம் 55  ஆவது  முறையாக ஏமாளிகளாய் வாய் திறந்து நிற்க வேண்டியிருக்கும்.

அந்த வகையில் 2012 ஆண்டு துவங்கி ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையில்,  தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்கென்று ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் வெள்ளியில் இதுவரை எந்தெந்த தமிழ் பள்ளிகளுக்கு, எத்தகைய நோக்கத்திற்காக, எவ்வளவு பணத்தை, யாரிடம் வழங்கியுள்ளர்கள் என்ற விவரங்கள் வெளிப்டையாக அறிவிக்கப்பட வேண்டும்.

ஒரு வேளை இதுவரை அத்தகைய ஒதிக்கீடுகள் செய்யபடாமல் இருந்தால் எப்போது, எந்த பள்ளிகளுக்கு, என்ன காரணங்களுகாக எவ்வளவு பணம், யாரிடம் வழங்கப்படும் என்ற திட்ட அறிக்கைகளையாவது உடனடியாக அறிவிக்க வேண்டும்.

2012 பட்ஜெட் அறிவிக்கும்போது 13வது தேர்தலுக்கு பின்னர் இந்த நிதி ஒதுக்கப்படும் என்று பிரதமர் கூறவில்லை. பாரிசான் அரசு மீது நம்பிக்கை வையுங்கள். அப்போதுதான் இந்த  அறிவிப்பு அமலுக்கும் வரும் என்றும் அறிவிக்கப்படவில்லை.

அணைத்து இன சமூகத்திற்கும் பிரதமாரான ஒருவரால், மக்களின் வரிபணத்தை மக்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டின் நோக்கம் செயல்வடிவு பெறுவதை நாம் காண விரும்புகிறோம்.

எனவே, தமிழ் பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 100  மில்லியன் வெள்ளியும் எவ்வாறு செயல் வடிவம் பெரும் என்பதை நிதி அமைச்சர் என்ற முறையில் பிரதமரோ அல்லது கல்வி அமைச்சருமான  துணை பிரதமர் முகைதின் யாசினோ மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் உடனடியாக இது சம்பந்தமாக தெளிவுபடுத்த  வேண்டும்.

இது போலவே, இந்திய வணிகர்களுகாக அறிவிக்கப்பட்ட 100  மில்லியன் ரிங்கிட்டின் விவரமும் பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு வரப் பட வேண்டும்.

பிரதமரோ, துணை பிரதமரோ இது குறித்து மௌனம் சாதிக்கும் தருணத்தில் இந்தியர்களை பிரதிநிதிப்பதாக கூறிகொள்பவர்களோ,     பல்லின சமூக மேம்பாட்டிற்காக குரல் கொடுப்போர் என்று நாடாளுமன்ற உறுப்பினராக சம்பளம் பெருபவர்களோ   நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பி மக்களுக்கு உண்மை நிலையை அறிவிக்க வேண்டும் என்று இண்ட்ராப் மக்கள் சக்தி தேசிய ஒருங்கிணைப்பாளர் வி. சம்புலிங்கம் அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.

TAGS: