குப்பைத்தொட்டிக்குச் செல்ல வேண்டியது அம்னோதானே தவிர புக்கு ஜிங்கா அல்ல

உங்கள் கருத்து: “பண்பாடற்ற இந்தத் துணை அமைச்சர் ‘புக்கு ஜிங்கா’வைத் தொட்டியில் போட்டார்.அச்செயல் பரிதாபத்துக்குரிய அவரது பண்பைக் காண்பிக்கிறது.”

பெல்டா குறித்துக் கருத்துரைக்கும் புக்கு ஜிங்காவைக் குப்பை என்றார் துணை அமைச்சர்

பிரளயம்: பிரதமர்துறை துணை அமைச்சர் அஹமட் மஸ்லான், மற்றார் கருத்துக்கும் மதிப்பளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு புத்தகத்தைக் குப்பைத் தொட்டியில் போடும் அளவுக்கு திமிர் பிடித்து அலையக்கூடாது.

முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் கீர் தோயோ செய்த தவற்றைச் செய்யாதீர்கள். அவர் மூத்த அரசு அதிகாரி ஒருவரிடம் துடைப்பத்தைக் கொடுத்தார். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார்.

ஜிம்மி: பண்பாடற்ற இந்தத் துணை அமைச்சர் புக்கு ஜிங்காவைத் தொட்டியில் போட்டார். அச்செயல் பரிதாபத்துக்குரிய அவரது பண்பை (அல்லது பண்பின்மையை)த் தெளிவாக காண்பிக்கிறது.

படித்த அமைச்சராக (படித்தவர் அல்லர் என்பது தெரிகிறது) இருந்தால் பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் ஹோல்டிங் (FGVB) பங்குச் சந்தையில் இடம்பெறுவது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ள  குறைகூறல்கள் ஒவ்வொன்றுக்கும் தெளிவாக விளக்கம் அளித்திருக்க வேண்டும்.

ஆனால் பிஎன் அமைச்சர் அல்லவா. அவரால் விளக்கம் சொல்ல இயலாது. அதனால், பண்பாடற்ற செயலைக் கடைப்பிடித்திருக்கிறார்.

சரவாக்டாயாக்: அம்னோ தலைவர்கள் அப்படித்தான் நடந்துகொள்வார்கள். அவர்களால் மாற்றுக் கருத்துகளை ஏற்றுக்கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ முடியாது.

ஒஎம்ஜி: ஒரு புத்தகம் என்றால் அதற்கு மரியாதை கொடுக்க வேண்டும்.என் மகனுக்கு இரண்டு வயதிலேயே மரியாதை என்றால் என்னவென்பதைக் கற்றுக்கொடுத்தேன்.ஆனால், இங்கோ ஒரு  துணை அமைச்சர் எவ்வளவு மட்டமான முன்மாதிரியை நம் பிள்ளைகளுக்குக் கற்றுத் தருகிறார், பாருங்கள்.

கேஎஸ்கே: என் மகன் என்ன கேட்டான் என்றால், “இவ்வளவு மரியாதைக்குறைவாக நடந்துகொள்கிறாரே அவரின் தந்தை கோபித்துக்கொள்ள மாட்டாரா?”, என்று கேட்டான். அவனுக்கு வயது ஐந்து.

நெருப்பு:  புத்தகம் அல்லது செய்தித்தாளை மிதித்தால்கூட என் பெற்றோர் ஆத்திரம் அடைவார்கள். அடிக்கவும் செய்வார்கள்.

என் பாட்டி, எல்லா நூல்களையும் புனிதமானவையாக போற்ற வேண்டும் என்பார். ஆனால்,  இந்தத் துணை அமைச்சரோ…….ஒரு துணை அமைச்சர் செய்யத்தக்க செயலா இது?

ஜார்ஜ்: சொற்பொழிவு மேடையில் குப்பைத் தொட்டி இருப்பதை நான் பார்த்ததில்லை. எல்லாம் திட்டம் போட்டுச்  செய்திருக்கிறார்கள்.

எல்லாருக்கும் மலேசியாகினி: மேடையில்  நானும் இவ்வளவு பெரிய குப்பைத் தொட்டியைப் பார்த்ததில்லை.மேடையில் சுத்தமான பொருள் ஒன்று இருந்தது என்றால் அது அந்தக் குப்பைத்தொட்டிதான்.

TAGS: