“ஆமாம் ரோஸ்மா அவர்களே, நாங்கள் உண்மையில் உங்களைப் பார்த்துப் பொறாமைப்படுகிறோம்”

“அழகான ஆடைகள், ஆபரணங்கள், கைப்பைகள் வாங்குவதிலும் அமெரிக்காவில் வாழ்த்துத் தெரிவிக்கும் விளம்பரத்தை பெறுவதிலும் நீங்கள் படைத்துள்ள சாதனைகளைக் கண்டு நான் பொறாமைப்படுகிறேன்.”

ரோஸ்மா: என்னைக் குறை கூறுகின்றவர்கள் விரக்தி அடைந்துள்ளனர், பொறாமைப்படுகின்றனர்.

பெண்டர்: ரோஸ்மா மான்சோர் அவர்களே, உங்களைக் கண்டு பொறாமைப்படுகிறோமா? நிச்சயம் நான் பொறாமைப்படுகிறேன். யாருக்குத்தான் பொறாமை வராது? உங்களுடைய பெர்மாத்தா திட்டத்துக்காக உங்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

எந்த விதமான உழைப்பும் இல்லாமல் என்னுடைய கணவரிடமிருந்து சில மில்லியன் ரிங்கிட்டை நான் பெற முடிந்திருந்தால் எனக்கும் டாக்டர் பட்டம் கிடைத்திருக்கும். நான் சொல்வது சரிதானே?

உங்களுக்குக் கிடைத்த கணவரைப் (பிரதமர் நஜிப் ரசாக்) போன்ற கணவர் எனக்கு இல்லை. எனது சொந்த பெர்மாத்தாவை நடத்துவதற்கு என்னிடம் சில மில்லியன் ரிங்கிட் கிடையாது. அதனால் எனக்கு டாக்டர் பட்டமும் கிடைக்கவில்லை. நான் பொறாமைப்படவில்லை என்றால் நான் கிறுக்காகத்தான் இருக்க வேண்டும்.

ஆனால் நான் அதற்காக பெரிதும் கவலைப்படப் போவதில்லை. காரணம் நான் நீங்களாக இருந்தால் அந்த டாக்டர் பட்டத்துக்கு மதிப்பே இல்லை. அது வெறும் பொய் என்பது நாடு முழுமைக்கும் தெரியும். 

உண்மையில் நான் நீங்களாக இல்லாதது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஏழையாகவும் கௌரவ டாக்டர் பட்டம் ஏதும் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நான் நீங்களாக இல்லை. அதற்காக இறைவனுக்கு நன்றி.

கோர்டோன் செக்கோ: அன்புள்ள ரோஸ்மா அவர்களே, நான் பொறாமைப்படுகிறேன். காரணம் என் மனைவிக்கு அவரது பிறந்த நாளில் பிர்க்கின் மாதிரி கைப்பையை வாங்கிக் கொடுக்க முடியவில்லை.

சிட்னிக்குச் செல்ல ஏர் ஏசியா x டிக்கெட்டுக்களை வாங்குவதற்கு நான் கடுமையாக உழைத்து சேமிக்க வேண்டியுள்ளது. மலிவாக காலம் தாழ்த்திய மாதிரிப் பொருட்களை வாங்க நான் ஒவ்வொரு வார இறுதியிலும் கிடங்கு விற்பனைக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆஸ்திரேலியாவில் மேற்கல்வி பெற என் பெற்றோர்கள் ஆதரவு அளித்தனர் (நல்ல வேளை அது கேர்ட்டின் பல்கலைக்கழகம் அல்ல).

இறுதியாக வரி செலுத்துகின்றவர் என்னும் முறையில் நான் விரக்தி அடைந்துள்ளேன். காரணம் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை நாளை என ஒன்று இல்லாததைப் போல நீங்கள் செலவு செய்து கொண்டிருக்கிறீர்கள்.

எச்ஒய்எல்: ரோஸ்மா அவர்களே, உங்கள் பல “சாதனைகளைக் கண்டு நான் பொறாமைப்படுகிறேன். விரக்தி அடைந்துள்ளேன்.

அழகான ஆடைகள், ஆபரணங்கள், கைப்பைகள் வாங்குவதிலும் அமெரிக்காவில் வாழ்த்துத் தெரிவிக்கும் விளம்பரத்தை பெறுவதிலும் நீங்கள் படைத்துள்ள சாதனைகளைக் கண்டு நான் பொறாமைப்படுகிறேன்.

ஆனால் அந்தச் சாதனைகள் கௌரவமாக கஷ்டப்பட்டு உழைக்கும் மலேசியர்களினால் வந்ததால் நான் விரக்தி அடைந்துள்ளேன்.

மாற்றம்: கேர்ட்டின் பல்கலைக்கழகத் துறை ஒன்றின் தலைவர் பெமாத்தா திட்டத்தை மேலும் அறிந்து கொள்ள மலேசியாவுக்கு வர ஆர்வமாக இருப்பதாக ரோஸ்மா கூறியுள்ளார்.

இது உண்மையில் அபத்தமானது. அந்த பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்குவதற்கு  முன்னரே அதனை முழுமையாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

இரண்டு சென்: எதிரிகள் உங்களைக் களங்கப்படுத்துவதற்கு பொறாமையே காரணம் எனச் சொல்லியதின் வழி நீங்கள் குளவிக் கூட்டைக் கலைத்து விட்டீர்கள். அவர்களது கருத்துக்களைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தாலும் அந்தத் தாக்குதல்களுக்கு பொறாமை காரணமல்ல என நான் நினைக்கிறேன்.

இந்த நிலையை நீங்களே ஏற்படுத்திக் கொண்டீர்கள். நீங்கள் ஒன்றும் சொல்லாமல் இருப்பதே சாலச் சிறந்தது.

TAGS: