செல்வாக்கு சரிகிறது: அப்கோவையும் எப்பிசியையும் பிரதமர் தலை முழுக வேண்டும்

“ஆறு புள்ளி என்பது பெரிய விஷயமல்ல. 59 விழுக்காடு ஆதரவுடன் அவர் இன்னும் செல்வாக்காகவே இருக்கிறார். அவரது நிர்வாகத்தை இன்னும் ஆதரிக்கும் 59 விழுக்காட்டினருக்கு என்ன கோளாறு?”

 

 

 

நஜிப்பின் செல்வாக்கு 6 புள்ளிகள் சரிந்து 59 விழுக்காடாகியது

ஜிஎச் கோக்: உண்மையில் அந்தக் கருத்துக் கணிப்பு மக்கள் நேரடியாக அதிபரைத் தெரிவு செய்யும் அதிபர் ஆட்சி முறைக்கே பொருந்தும். எடுத்துக்காட்டுக்கு அமெரிக்காவைச் சொல்லலாம்.

அந்த முறையின் கீழ் அதிபரை மக்கள் நேரடியாத் தேர்வு செய்கின்றனர். முழு அமைச்சரவையையும் அவர் நியமிக்கிறார். அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவது இல்லை. அதனால் அதிபருடைய செல்வாக்கு விகிதம் அவருடைய அரசாங்கத்துக்கான ஆதரவைக் குறிக்கிறது.

நாம் பின்பற்றுகின்ற நாடாளுமன்ற முறையில் அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். (சிலர் மட்டும் கொல்லைப் புறம் வழியாக செனட்டர்களாக நியமிக்கப்பட்டு அமைச்சர்களாகியுள்ளனர்)

ஆகவே நாடாளுமன்ற முறையில் பிரதமர் என்பவர் “சம நிலையில் உள்ளவர்களில் முதல்வர்” எனக் கூறலாம். அங்கு பிரதமர் அமைச்சர்களுடன் மிகவும் சம நிலையாக அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கிறார். அதிபர் முறையில் அமைச்சரவையில் எல்லா முடிவுகளையும் அதிபர் எடுக்கிறார். ஏனெனில் அமைச்சரவையில் அவர் மட்டுமே மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்.

எனவே நாடாளுமன்ற முறையில் பிரதமருடைய செல்வாக்கிற்குப் பதில் ஒவ்வொரு அமைச்சரின் செல்வாக்கு பற்றியும் (முழு அமைச்சரவையையும் ) ஆய்வு நடத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கும்.

மலேசிய இனம்: அப்கோ, எப்பிசி போன்ற பொது உறவு நிறுவனங்களுக்குப் பிரதமர் பணம் கொடுக்கவில்லை. அல்லது அவை தங்கள் வேலைகளை ஒழுங்காகச் செய்யவில்லை.

அவரது 59 விழுக்காடு செல்வாக்கு அண்மைய காலம் வரை முவாமார் கடாபி லிபிய மக்களிடையே 100 விழுக்காடு செல்வாக்கு பெற்றிருந்ததாகக் கூறப்பட்டதை விடக் குறைவுதான்.

அதனால் அந்த இரண்டு பொது நிறுவனங்களும் இன்னும் திறமையாக செயல்பட்டு லிபிய மக்கள் கடாபியை பூஜித்தது போல நஜிப்பை மலேசியர்கள் புகழுமாறு செய்ய வேண்டும்.

20121221 பேரிடர்: மெர்தேகா மையம் நடத்திய ஆய்வை உண்மையானதாக எடுத்து கொள்ள முடியாது. ஏனெனில் இணையத்தில் செய்திகளைப் படிப்பவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகும்.

அதனால் இணையத்தில் வெளியாகும் முக்கியமான செய்திகளை நண்பர்களுக்கு அனுப்புங்கள். படித்து விட்டு கருத்துக் கூறுவதோடு நிற்க வேண்டாம். தயவு செய்திகளைப் பரப்புங்கள்.

அடையாளம் இல்லாதவன்1: 59 விழுக்காடு என்பது மோசமானது அல்ல. அமெரிக்க அதிபருடைய இப்போதைய செல்வாக்கு விகிதம் 46 விழுக்காடு ஆகும். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமருனின் செல்வாக்கு 42 விழுக்காடு. உலகம் முழுவதும் தலைவர்களுடைய செல்வாக்கு சரிகிறது. அதற்கு “பொருளாதாரமே காரணம் முட்டாளே”.

கீ துவா சாய்: ஆறு புள்ளி என்பது பெரிய விஷயமல்ல. 59 விழுக்காடு ஆதரவுடன் அவர் இன்னும் செல்வாக்காகவே இருக்கிறார். அவரது நிர்வாகத்தை இன்னும் ஆதரிக்கும் 59 விழுக்காட்டினருக்கு என்ன கோளாறு?

கருத்துக் கணிப்பு: 88 விழுக்காடு மலேசியர்கள் பெர்சே கோரிக்கைகளை ஆதரிக்கின்றனர்

குவிக்னோபாண்ட்: அமைதியாக இருக்கும் பெரும்பான்மை மக்கள் பெர்சே 2.0ஐ ஏற்றுக் கொள்கின்றனர். மெர்தேகா மைய ஆய்வில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என பிஎன் அமைச்சர்கள் சொல்வார்களா? அவ்வாறு சொன்னால் நஜிப் செல்வாக்கு 70 விழுக்காடாக இருந்ததாக அந்த மையம் சொன்னதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

பெர்சே கோரிக்கைகளை சரியான மன நிலையில் உள்ள யாரும் ஏற்றுக் கொள்வர். அது நியாயமானது. எளிதாக அமலாக்க முடியும்? அதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும்.

நடப்புத் தேர்தல் ஆணையம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையும் அது காட்டுகிறது. தூய்மையான சுதந்திரமான தேர்தல்களை நடத்துவதற்கு நிபுணர்களை நியமிக்குமாறு பிரதமர் அகோங்கிற்கு யோசனை கூற வேண்டும். 

கேகன்: பெர்சே பேரணியை அரசாங்கம் எதிர்கொண்ட விதத்தை 37 விழுக்காடு மலாய்க்காரரகள் மட்டும் தானா ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தக் கருத்துக் கணிப்பு, தீவிர அம்னோ மலாய்க்காரர்களிடம் நடத்தப்பட்டதா?

TAGS: