“நகரத்தில் வாழும் அகமட், ஆ சொங்குடனும் முத்துவுடனும் மற்றவர்களுடனும் இணைந்து வேலை செய்கிறார். இன வேறுபாடின்றி அவர்கள் தங்களது தலைக்கு உயரே ஒரு கூரையை நிர்மாணிக்க போராடுவதை அவர் அறிந்துள்ளார்.”
‘பெல்டா குடியேற்றக்காரர்கள் பக்காத்தானை ஆதரிக்க அச்சத்தைப் போக்க வேண்டியுள்ளது
ஸ்விபெண்டர்: அம்னோ இப்போது பெல்டா குடியேற்றக்காரர்களிடம் திருடுவதற்கு முனைந்துள்ளது. காரணம் திருப்திப்படுத்த முடியாத தங்களது பேராசைக்குத் தீனி போட சுரண்டுவதற்கு மகுடத்தில் எஞ்சியிருக்கும் ஒரே ஆபரணம் பெல்டாவாகும்.
தங்களது அவலத்துக்கும் இக்கட்டான சூழ்நிலைக்கும் மற்றவர்கள் மீது பழி போடுவதின் மூலம் தங்களை வளப்படுத்திக் கொள்வதற்கு அம்னோபுத்ராக்கள் தங்களது அறியாமையை எப்படி பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதை உழைக்கும் வர்க்கமும் வசதி குறைந்த மலாய்க்காரர்களும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கியுள்ளனர்.
நகரப்புற மலாய்க்காரர்கள் அதனை ஏற்கனவே அறிந்து கொண்டு விட்டனர். நகரத்தில் வாழும் அகமட், ஆ சொங்குடனும் முத்துவுடனும் மற்றவர்களுடனும் இணைந்து வேலை செய்கிறார். இன வேறுபாடின்றி அவர்கள் தங்களது தலைக்கு உயரே ஒரு கூரையை நிர்மாணிக்கவும் தங்கள் குடும்பங்களுக்கு உணவு அளிக்கவும் கார்களுக்கு தவணைப் பணம் கட்டவும் டோல் கட்டணங்களைச் செலுத்தவும் போராடுவதை அவர் அறிந்துள்ளார்
ஊழல் நிறைந்த அம்னோபுத்ராக்களும் பிஎன்புத்ராக்களும் ஆடம்பரமாக வாழ்வதை அவர்கள் காண்கின்றனர். அத்தகைய வாழ்க்கை முறை குறித்து அவர்கள் கனவு காண மட்டுமே முடியும். இருந்தும் நாடு நொடித்துப் போவதைத் தடுக்க வயிற்றைக் கட்டுமாறு அவர்களுக்கு அம்னோபுத்ராக்களும் பிஎன்புத்ராக்களும் துணிச்சலாகச் சொல்கின்றனர்.
அம்னோ/பிஎன் அடிக்கடி போதிக்கும் சமூக நீதி எங்கே போனது?
பிளே பாய்: ஆரூடங்கள் என்பது வெறும் ஆரூடங்களே. பெரும்பான்மையோர் எப்போதும் மௌனமாக இருக்கின்றனர். சிறுபான்மை மக்களே அதிகமாக சத்தம் போடுகின்றனர்.
அனாக் குடியேற்றக்காரர்களுடைய குரல் அல்ல. இருந்தும் தாங்கள் குடியேற்றக்காரர்களைப் பிரதிநிதிப்பதாகக் கூறிக் கொள்கின்றனர். அதுதான் வேறுபாடு. அந்த அமைப்பு குடியேற்றக்காரர்களுக்கு எதனையும் வழங்க முன் வரவில்லை. அதே வேளையில் Felda Global Ventures Holdings Bhd பங்குப் பட்டியலில் சேர்க்கப்படுவதால் கிடைக்கும் வருமானமும் மற்ற நன்மைகளும் குடியேற்றக்காரர்களுக்கு கிடைக்காமல் செய்ய அது முயலுகிறது.
குடியேற்றக்காரர்களைப் பற்றித் தனக்குத் தெரியும் என அது எப்படிக் கூறிக் கொள்ள முடியும்?
ஒங்: 112,635 குடியேற்றக்காரர்கள் செலுத்தும் வாக்குகள் நான்கு மாநில அரசுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அதே வேளையில் சிலாங்கூர் காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தம் 112,224 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் 2008 பொதுத் தேர்தலில் ஒரே ஒரு எம்பி-யை மட்டுமே தேர்வு செய்தனர். எல்லாம் வினோதமாக இருக்கிறது.
முழுக் குப்பை: ஜப்பானிலும் மற்ற நாடுகளிலும் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட இரு மடங்கு அல்லது அதற்குக் கூடுதலாக ஒரு பகுதியில் வாக்காளர் எண்ணிக்கை இருந்தால் அது பல தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விடும்.
மலேசியாவில் குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்களுக்கு எதிராக நிறையப் பாகுபாடு காட்டப்படுகிறது. ஒரு கிராமப்புற வாக்கு 20 அல்லது அதற்கு மேற்பட்ட நகர்ப்புற வாக்குகளுக்குச் சமமானதாகும்.
நியாயமானவர்: கழுகுகள் தங்களது சொந்த ஆதரவாளர்களைச் சுரண்ட முயலும் போது அவற்றுக்கு முடிவு நெருங்கி விட்டது என அர்த்தம். ஊழல் நிறைந்த அம்னோ ஆட்சியின் இறுதி வீழ்ச்சிக்கு அது வழி வகுக்கும் என நம்புவோம்.