“சபாவில் தங்களது உண்மையான எஜமானர்கள் அம்னோக்காரர்கள் என்பது ஒங்கிலி-க்கும் டொம்போக்-கிற்கும் தெரிந்திருக்க வேண்டும். காரணம் அந்த அடையாளக் கார்டு மோசடியில் முக்கியமாக நன்மை அடைந்தது அம்னோக்காரர்கள்.”
அடையாள அட்டை திட்டம் மீது ஆர்சிஐ பற்றி ஏதும் தெரிவிக்காமல் நஜிப் சபாவிலிருந்து புறப்பட்டார்
ஹலோ: சபா பிஎன் -னில் உள்ள உறுப்புக் கட்சிகளுடைய உணர்வுகளைச் சாந்தப்படுத்துவதே அடையாளக் கார்டு திட்டம் மீது ஆர்சிஐ-யை ( அரச விசாரணை ஆணையம்) அமைக்கும் யோசனையின் நோக்கம் ஆகும்.
அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்ட போதிலும் அதனை அறிவிப்பதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் துணிச்சல் இல்லை. ஏனெனில் அந்த அடையாளக் கார்டு திட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ள பல அம்னோ உறுப்பினர்களுக்கு இன்று அந்தக் கட்சியில் மிகுந்த செல்வாக்கு உள்ளது.
அது ஏன் சில வேளைகளில் எம் திட்டம் என அழைக்கப்படுவது பற்றி யாராவது யோசித்தீர்களா?
அலன் கோ: நஜிப் தமது இரண்டு நாள் சபா பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட போது ஆர்சிஐ பற்றி அறிவிக்காதது பிபிஎஸ் என்ற Parti Bersatu Sabah துணைத் தலைவர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி-க்கும் உப்கோ என்ற United PasokMomogun KadazanDusun Murut Organisation அமைப்பின் தலைவர் பெர்னார்ட் டொம்போக்-கிற்கும் பெருத்த தர்மசங்கடமாக போயிருக்க வேண்டும்.
அந்த அடையாளக் கார்டு திட்டம் டாக்டர் மகாதீர் முகமட்-டின் மூளையில் உதித்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் அது எம் திட்டம் என அழைக்கப்படுகிறது.
ஆர்சிஐ-யைப் பற்றிப் பேசுவது எளிது. காரணம் அது அம்னோ/பிஎன் பாணி. ஆனால் சொன்னதைச் செய்வது என்பது மிகவும் சிரமம்.
சபா மக்கள் 55 ஆண்டு கால அம்னோ/பிஎன் அத்துமீறல்கள், ஊழல், மலிவான பேச்சுக்கள் ஆகியவற்றிலிருந்து விழித்து கொள்ள வேண்டும். உங்கள் தலைவிதியை நீங்கள்தான் நிர்ணயிக்க வேண்டும். பிஎன் -னுடைய நிரந்தர வைப்புத் தொகையாக தொடர்ந்து இருக்க வேண்டாம். இல்லை என்றால் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள்.
அபாஸிர்: தாங்கள் ஒரங்கட்டப்பட்ட பிரிவுகளின் பெயரளவுக்கான பேராளர்கள் என்பது இன்னேரம் ஒங்கிலி-க்கும் டொம்போக்-கிற்கும் தெரிந்திருக்க வேண்டும். அவர்கள் வெறும் அலங்காரப் பொம்மைகள். வேறு ஒன்றுமில்லை.
சபாவில் தங்களது உண்மையான எஜமானர்கள் அம்னோக்காரர்கள் என்பது ஒங்கிலி-க்கும் டொம்போக்-கிற்கும் தெரிந்திருக்க வேண்டும். காரணம் அந்த அடையாளக் கார்டு மோசடியில் முக்கியமாக நன்மை அடைந்தது அம்னோக்காரர்கள். அந்தத் திட்டத்தை தயாரித்து அமலாக்கியது அவர்களே.
ஆகவே அம்னோ ஏன் அடையாளக் கார்டு திட்டம் மீதான ஆர்சிஐ-யை ஆதரிக்க வேண்டும்?
அடையாளம் இல்லாதவன்: அது எதிர்பாராத திருப்பம் இல்லை என்றாலும் சபா தலைவர்கள் சொந்த ஆதாயத்துக்காக சபா மக்களை விற்று விட்டனர் என்பதுதான் வருத்தமளிக்கும் உண்மை.
அதனால் நடப்பு, எதிர்கால சபா தலைமுறையினருக்கு ஏற்பட்டுள்ள அல்லது ஏற்படப் போகும் சிரமங்களுக்காக ஆழ்ந்த அனுதாபங்கள்.
எரிக்12: ஆட்சியில் நிலைத்திருக்க தீய நோக்கம் கொண்டவர்கள் வகுத்த பிரமாதமான யோசனையே அந்த அடையாளக் கார்டு திட்டம். அதனை அறிந்து கொள்வதற்கு அப்பாவி சபா மக்களுக்கு 20 ஆண்டுகள் பிடித்ததுதான் வினோதம்.
ஆனால் இப்போது பிரச்னையைத் தீர்ப்பதற்குக் காலம் கடந்து விட்டது. நமது உள்ளூர் ‘ஹீரோக்களால்’ எதுவும் செய்ய முடியாது. பேச மட்டுமே முடியும்.
அல்பி: ஆர்சிஐ பற்றி அறிவிக்காமல் நஜிப் சபாவிலிருந்து புறப்பட்டதில் ஆச்சரியமில்லை. காரணம் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் வடிவத்தில் பெரிய வாக்கு வங்கி அவருக்கு காத்திருக்கிறது.
வழிப்போக்கன்: அடையாளக் கார்டு திட்டம் மீது ஆர்சிஐ-யை அமைக்க ஆணையிடுமாறு நஜிப்பைக் கேட்டுக் கொள்வது சீன முதுமொழியான “உங்கள் சீப்பை இரவல் தருமாறு பிக்கு ஒருவரைக் கேட்டுக் கொள்வதற்கு ஒப்பாகும்”.
அவர் விரும்பினாலும் அவர் அதனைச் செய்ய முடியாது. காரணம் அவருக்கு முழு அதிகாரம் கிடைக்கவில்லை.