“அம்னோ- அடாவடித்தனம் இப்போது உன் பெயராகி வருகிறது”

“அம்னோ விளங்க வைப்பதற்கு பதில் மிரட்டத் தொடங்கியிருக்கிறது. நாட்டின் சட்டத்தைப் பின்பற்றுவதற்குப் பதில் அம்னோ காட்டுத் தர்பாரைப் பின்பற்றுகிறது.”

அம்னோ ஆதரவாளர்கள் அன்வார் கார் மீது கற்களை எறிந்தனர்

ஹோல்டன்: மாட் ரெம்பிட்களா அல்லது அம்னோ இளைஞர்களா?  செம்பெரோங்கில் போலீசாரல் ஒன்றும் செய்ய முடியவில்லை சரிதானே?

காரணம் கௌரவமாக வாழப் போராடும்  மெக்கானிக் எஸ் மோகன் போன்ற அப்பாவி மக்களை நாடு முழுவதும் போலீஸ் நிலையங்களில் பிடித்து வைத்து அவர்களை உதைப்பதில் மிகத் தீவிரமாக போலீசார் ஈடுபட்டுள்ளனரா?

தமது அமலாக்க அமைப்புக்களுடைய சட்ட ஒழுங்கற்ற நடவடிக்கைகளுக்கு விளக்கம் அளிப்பாரா?

கைரோஸ்: அடுத்த பொதுத் தேர்தலில் சபா, சரவாக், ஜோகூர் ஆகியவற்றின் முடிவுகள் மிக முக்கியமானவை. அது அன்வாருக்கு நன்கு தெரியும். அதனால்தான் அன்வார் சிரமங்கள் இருந்தாலும் ஜோகூர் உட்பகுதிகளில் கவனம் செலுத்துகிறார். மாற்றத்திற்கான காலம் கனிந்து விட்டது என மலாய்க்காரர்களுக்குப் புரிய வைப்பதே அவரது நோக்கம்.

அதுதான் தூய்மையான நேர்மையான அரசியல். அதனை முதிர்ச்சி அடைந்த வழிகளில் எதிர்கொள்ளாமல் அன்வார் பயணத்தைச் சீர்குலைக்க அம்னோ குண்டர்களைக் கூலிக்கு அமர்த்துகிறது.

அம்னோ விளங்க வைப்பதற்கு பதில் மிரட்டத் தொடங்கியிருக்கிறது. நாட்டின் சட்டத்தைப் பின்பற்றுவதற்குப் பதில் அம்னோ காட்டுத் தர்பாரை நடத்துகிறது.

வெறுப்படைந்தவன்: பக்காத்தான் ராக்யாட் கோட்டைகளுக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் செல்கிறார். அங்கு பக்காத்தான், பிரதமர் என்னும் முறையில் அவருக்கு உரிய மரியாதை கொடுக்கிறது. எந்த இடையூறும் செய்வது இல்லை.

ஆனால் பக்காத்தான் தலைவர்கள் பிஎன் கோட்டைகளுக்குப் போகும் போது அம்னோக்காரர்கள் நாய்களைப் போன்று செயல்பட்டு பக்காத்தான் மக்களுக்கு எல்லா வகையான தொந்தரவுகளையும் தருகின்றனர். நிச்சயமாக போலீசார் ஒரு கண்ணை மட்டும் மூடிக் கொண்டிருக்கவில்லை. இரண்டு கண்களையும் மூடிக் கொண்டிருக்கின்றனர்.

விளையாட்டு வேண்டாம்: காரணம் இல்லாமல் எதிர்த்தரப்புத் தலைவருக்கு எதிர்ப்பு காட்டியிருக்க முடியாது. மலாய் முஸ்லிம்களுக்கு ஆத்திரமூட்டும் எதனையாவது அவர் சொல்லியிருக்க வேண்டும். அதனால் அவர்களால் தங்கள் சினத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“இஸ்ரேலுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எல்லா முயற்சிகளையும் நான் ஆதரிக்கிறேன்” என அன்வார் ஏசியா வால் ஸ்டீரிட் சஞ்சிகைக்கு அளித்த பேட்டி அவர்களுக்கு ஆத்திரத்தை மூட்டியிருக்க வேண்டும்.

பாலஸ்தீன இளைஞர்கள் இஸ்ரேலியப் படைகள் மீதும் கற்களையும் இதர பொருட்களையும் வீசினர். அன்வாருக்கும் அவருடைய முட்டாள்தனமான நிலைக்காக அதே போன்ற வரவேற்பு கிடைத்துள்ளது.

ஏசிஆர்: விளையாட வேண்டாம் என்பவர் சொல்லிய போல இருந்தால் அதிகம் கவலைப்பட வேண்டாம்.

ஆனால் அன்வாருக்கு அதனைச் செய்த 15 வயது முதல் 18 வயது வரையிலான மாட் ரெம்பிட்-களுக்கு இஸ்ரேலிய பாலஸ்தீன அரசியல் பற்றி ஒன்றுமே தெரியாது. அவர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்ட ரௌடிகள். அம்னோ தொடர்ந்து நிலைத்திருப்பதை உறுதி செய்ய அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வர்.

பிடிஎன்: எல்லாம் வெட்ட வெளிச்சமாகி விட்டது. அந்த அம்னோ ஆதரவாளர்கள் “படிப்பறிவு இல்லாதவர்கள்”, “மரியாதை தெரியாதவர்கள்”. நாம் அரசியலில் மாறுபாடான கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதோ காயத்தை ஏற்படுத்துவதோ ஏற்றுக் கொள்ளப்பட முடியாத வன்முறையாகும்.

மனித உரிமைகள், மரியாதை பற்றி அந்த அம்னோ ஆதரவாளர்களுக்கு தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. தாங்கள் எதற்காகப் போராட்டுகிறோம் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.

அப்பும்: “அம்னோ- அடாவடித்தனம் இப்போது உன் பெயராகி வருகிறது”. அம்னோவால் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் நாகரீகமாக விவாதம் நடத்த முடியும் என நீங்கள் நினைக்கின்றீர்களா?

அதன் ஆதரவாளர்கள் ஒலிபெருக்கிகளில் கூச்சல் போடுவர். தங்கள் எதிரிகள் தலைகளில்  நாற்காலிகளைப் போட்டு உடைப்பார்கள். ஏன் தெரியுமா? அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி வன்முறைதான்.

அது எதனை நிரூபிக்கிறது ? மோசமான தலைமைத்துவம்.

சரியானவன்: அந்தத் திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்கின்றன. அவை அதிகாரத்தை பிஎன் தொடர்ந்து வைத்திருப்பதற்கு அவசர காலத்தைப் பிரகடனம் செய்வதில்தான் போய் முடியும்.

TAGS: