உயர் நீதிமன்றம்: HRP-ஐ ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது நிராகரியுங்கள்

பதிவு செய்யப்படுவதற்கு மனித உரிமைக் கட்சி சமர்பித்த விண்ணப்பத்தை உள்துறை அமைச்சர்  ஏற்றுக் கொள்கிறாரா அல்லது நிராகரிக்கிறாரா  என்பதை அவர் 14 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

அந்த முடிவை நீதிபதி ரோஹானா யூசோப் அறிவித்தார். நீதிமன்ற ஆணை கிடைத்த பின்னர் குறிப்பிடப்பட்ட காலத்துக்குள் அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.

2009ம் ஆண்டு மனித உரிமைக் கட்சி விண்ணப்பத்தை சமர்பித்தது. ஆனால் அந்த விண்ணப்பத்தின் நிலை என்ன என்பது அதற்கு இது வரை தெரியவில்லை. காரணம்  சங்கப் பதிவதிகாரியிடமிருந்து அந்த விண்ணப்பம் தொடர்பில் அதற்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. தொடர்பும் இல்லை.

மனித உரிமைக் கட்சி சார்பில் அதன் வழக்குரைஞர் பி உதயகுமார் ஆஜரான வேளையில் முதுநிலை கூட்டரசு வழக்குரைஞர் எபெண்டி லாஸி லாடென் உள்துறை அமைச்சைப் பிரதிநிதித்தார்.

TAGS: