உங்கள் கருத்து: ‘தாஜுடின் தீர்வில் எல்லாம் ஒரே மர்மம்’

“நல்ல ஆளுமை என்றால் எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும். அதுவும் 500 மில்லியன் ரிங்கிட் வராத கணக்கில் எழுதப்படும் போது

டாக்டர் மகாதீர்: தாஜுடின் ஜிஎல்சி தீர்வில் அதிகார அத்துமீறல் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவதை நிரூபியுங்கள்

லிம் சொங் லியோங்: தாஜுடின் ராம்லி தீர்வு கறை படைந்தது என்பதை நாம் மெய்பிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.

பலப் பல ஆண்டுகள் தலைவராக இருந்துள்ள அவருக்கு நல்ல ஆளுமை என்றால் எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். இரகசியம் என்ற போர்வையில் எதனையும் மறைக்கக் கூடாது. அதுவும் 500 மில்லியன் ரிங்கிட்டும் அதற்கான வட்டியும் வராத கணக்கில் எழுதப்படும் போது.

தீர்வு விவரங்கள் என்ன ? அதன் விவரங்கள் யாருக்கும் தெரியாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக  தங்கள் வழக்குரைஞராக ஹாபாரிஸாம் ஹருணை நியமிக்குமாறு எல்லாத் தரப்புக்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.

அந்த ஹாபாரிஸாம் இப்போது நாட்டின் மிகப் பெரிய கட்டுமானத் திட்டங்கள் ஒன்றின் உரிமையாளர். அவருடன் அந்தத் தொழிலில் இணை சேர்ந்திருப்பது அம்னோவுடன் தொடர்புடைய சர்ச்சைக்குரிய முன்னாள் தலைமை நீதிபதியின் மனைவி ஆவார்.

யார் எதனை நிரூபிக்க வேண்டும். தாங்கள் கறை படியாதவர்கள் என்பதை அம்னோ தலைவர்கள் மெய்பிக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் வேறு யாருக்காவதி வாக்களித்து விடுவோம்.

அர்மெகடோன்: தேசிய சொத்து மறு சீரமைப்பு நிறுவனமான டானாஹர்த்தாவுக்கு 589 மில்லியன் ரிங்கிட் கொடுக்குமாறு உயர் நீதிமன்றம் தாஜுடினுக்கு உத்தரவிட்டது. ஆனால் அந்த வழக்கு இப்போது நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்க்கப்பட்டு விட்டது. அவர் ஒரு சென் கூட கொடுத்தாரா என்பது ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.

ஏதோ கோளாறு நிகழ்கிறது. அதில் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் (ஜிஎல்சி) குடிமக்கள் என்ற முறையில் மறைமுகமாக நாங்கள் அவற்றுக்குச் சொந்தக்காரர்கள். எனவே தாஜுடின் -டானாஹர்த்தா-ஜிஎல்சி-க்கள் சம்பந்தப்பட்ட தீர்வு விவரங்களை நாங்கள் அறிந்து கொள்வது அவசியமாகும்.

கேஎஸ்என்: எம்ஏஎஸ் பங்கு விலை சந்தையில் 4 ரிங்கிட்டாக இருந்த போது அரசாங்கம் பொது நிதிகளைப் பயன்படுத்தி அதனை 8 ரிங்கிட்டுக்கு வாங்கியது என்பதை மகாதீர் விளக்க வேண்டும். 

ரகசியமாக செய்து கொள்ளப்பட்ட வெட்கக்கேடான அந்த தீர்வு குறித்து தனது நேர்மையை நிரூபிப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

அது அனைத்துலக வெளிப்படை அமைப்பு, ஜைட் இப்ராஹிம் அல்லது வேறு எந்த மூன்றாம் தரப்பின் வேலை அல்ல. பொது நிதிகள் பெருமளவு சம்பந்தப்பட்டுள்ளன.

நீங்கள் பல ஆண்டுகள் பிரதமராக இருந்துள்ளீர்கள். பொறுப்பு என்றால் என்ன என்பதே உங்களுக்குத் தெரியவில்லை.

ஆபெங் கோர்: எம்ஏஎஸ் வழக்கை அறிந்த யாருக்கும் எம்ஏஎஸ் பங்குகளை திரும்ப வாங்கிக் கொள்வதற்கு மகாதீர் நிர்வாகம் உத்தரவாதம் அளித்திருக்க வேண்டும் என்பது நிச்சயமாகத் தெரியும்.

அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தால் தாம் அனைத்தையும் சொல்லி விடப் போவதாக தாஜுடின் மருட்டியிருக்க வேண்டும்.

ஹிஷாம்: அன்வார் என் தொகுதியில் தாக்கப்படவில்லை

செஞ்சுரியன்: ஹிஷாமுடின் ஹுசேன் உள்துறை அமைச்சர் என்பதால் மலேசியா முழுவதும் உங்கள்  தொகுதி என நான் எண்ணியிருந்தேன். அது தவறா ? செம்புரோங் என்ற அவரது சொந்தத் தொகுதிக்கு மட்டும் தான் அவர் பொறுப்பா ?

சந்திரன் சிவா: அது மட்டும் அம்னோ தலைவர்களான நஜிப் ரசாக், முஹைடின் யாசின், ஷாரிஸாட் அப்துல் ஜலில் ஆகியோருக்கு மட்டும் நிகழ்ந்திருக்க வேண்டும். குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முழுப் போலீஸ் படையும் முடுக்கி விடப்பட்டிருக்கும்.

போலீசார் முன்னிலையில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கார் தாக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வரை யார் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை. அதன் அர்த்தம் என்ன ?  போலீசார் அம்னோவுக்கு அடிமைகள் என்பதே அதுவாகும்.

போலீசார் இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அனைவருக்கும் சமமாக சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வ்ருப்பு வெறுப்பின்றி செயல்பட வேண்டும் என்றும் மக்கள் விரும்புகின்றனர்.

சிப்முங்: நீங்கள் உள்துறை அமைச்சர் என்ற முறையில் உங்கள் தொகுதியில் அந்தச் சம்பவம் நிகழவில்லை என அறிக்கை விட்டிருக்கக் கூடாது. அத்தகைய சம்பவம் மலேசியாவில்  ஏன் நிகழ்ந்தது என நீங்கள் கேட்க வேண்டும்.

உங்களை தற்காத்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டு மக்களை (எதிர்க்கட்சிகளை ஆதரிப்பவர்கள்) உட்பட பாதுகாக்கத் தொடங்குங்கள்.  உள்துறை அமைச்சர் என்னும் உங்கள் பொறுப்புக்களை நீங்கள் மறந்து விடுகின்றீர்கள். உங்கள் வேலை உங்களுக்குப் பொறுப்புக்களை கொடுத்துள்ளது.

ஜுகுவான்: அந்தச் சம்பவம் குற்றமல்ல என்பது அதன் அர்த்தமா ?

ஜஸ்டிஸ்பாவ்: ஹிஷாம் அவர்களே என் அண்டை வீட்டுக்காரர்கள் கொள்ளயிடப்படும் போது அது என் வீட்டில் நிகழவில்லை என்பதால் நான் கண்களை மூடிக் கொண்டிருக்க வேண்டும் எனச் சொல்லலாமா ?

நீங்கள் என்ன அம்னோவுக்கு மட்டும் தான் உள்துறை அமைச்சரா ?

TAGS: