இன்று காலையில் நடந்த பசுமைப் பேரணிக்கு மக்கள் அளித்த பெரும் ஆதரவால் ஊக்கமடைந்துள்ள பசுமைப் பேரணி 2.00 (ஹிம்புனான் ஹிஜாவ்) ஏற்பாட்டாளர்கள் லினாஸ் அரிய மண் தொழிற்கூடத்தை 24 மணி நேரத்திற்குள் மூட வேண்டும் என்று மத்திய அரசாங்கத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோரிக்கையை அரசாங்கம் ஏற்று செயல்படவில்லை என்றால், தாமும் தமது ஆதரவாளர்களும் இதனைவிடப் பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்வோம் என்று ஹிம்புனான் ஹிஜாவ் 2.0 வழிகாட்டி குழு தலைவர் வோங் டேக் கூறினார்.
“அந்தத் தொழிற்கூடத்தை மூடுவதற்கு நாங்கள் அரசாங்கத்திற்கு 24 மணி நேரம் தருகிறோம், இல்லையென்றால் நாங்கள் இதனைவிடப் பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்வோம்.
“லினாஸ்சை அகற்றுங்கள், இல்லையேல் நாங்கள் உங்களை அகற்றுவோம், நீங்களே முடிவு செய்யுங்கள்” என்று கூறிய அவர், அடுத்தப் பொதுத் தேர்தலுக்கு முன்பு அரசாங்கம் இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று மேலும் கூறினார்.