“எல்லா அரசு ஊழியர்களும் அம்னோ வேலைக்காரர்கள் என அம்னோ எண்ணுகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.அரசு ஊழியர்கள் தங்கள் பதவிகள் குறித்து என்ன நினைக்கின்றனர் என்பது எனக்குத் தெரியவில்லை.”
“பிஎன் மட்டும்” கூட்டம் மீது காலித் நஜிப்பைச் சாடுகிறார்
கேஎஸ்என்: தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் சுட்டிக் காட்டியுள்ளார். அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும் தங்களுடையில் ஒர் எல்லையை வகுத்துக் கொள்வது நல்லது.
அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தலைமைச் செயலாளர் முகமட் சிடிக் ஹசானுக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உத்தரவிட்டது தவறாகும். அதே வேளையில் அந்தக் கூட்டத்தில் பங்கு கொள்வதற்கு தமது தகுதி இல்லை என்பதை முகமட் சிடிக் உணர்ந்து கொண்டு அந்த அழைப்பை நிராகரித்திருக்க வேண்டும்.
எல்லா அரசு ஊழியர்களும் அம்னோ வேலைக்காரர்கள் என அம்னோ எண்ணுகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.அரசு ஊழியர்கள் தங்கள் பதவிகள் குறித்து என்ன நினைக்கின்றனர் என்பது எனக்குத் தெரியவில்லை.
அடையாளம் இல்லாதவன்_05: பக்காத்தான் ராக்யாட்டும் பிஎன் -னும் மாநில, கூட்டரசு நிலைகளில் மலேசிய அரசாங்கங்களாகும்.
நமது பிரதமர் பல ஆண்டுகளாக ஒரே மலேசியா கோட்பாட்டைத் தீவிரமாக வலியுறுத்தி வருகிறார். ஆனால் நடந்த விஷயம் (114வது மந்திரி புசார்கள் முதலமைச்சர்கள் கூட்டத்துக்கு பக்காத்தான் தலைவர்கள் அனுமதிக்கப்படாதது) மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
காலித் மற்றும் பக்காத்தான் மந்திரி புசார்களுடைய உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஜிம்மி இங்: காலித் தெளிவாக காட்டியுள்ளார். அந்தக் கூட்டம் பிஎன்-னுக்கு மட்டும் என்றால் அதற்கான செலவுகளை ( தேநீர், கோப்பி, பலகாரங்கள் ஆகியவை உட்பட) பிஎன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அரசாங்கம் அதற்கு செலவு செய்யக் கூடாது. அத்துடன் அரசு ஊழியரான தலைமைச் செயலாளரும் அதில் கலந்து கொண்டிருக்கக் கூடாது.
என்றாலும் எதுவும் தெரியாத அகங்காரம் பிடித்த அந்த பிஎன் மக்கள், தங்களது ஊழல் வழிகளை நியாயப்படுத்தவே முயலுவர். காரணம் இந்த நாடு அவர்களுக்குச் சொந்தமானது என அவர்கள் என்னுகின்றனர். அதனால் நாடு முழுவதும் அவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளதாக அவர்கள் நினைக்கின்றனர்.
ஜெரேமி இங்: அரசாங்க அத்துமீறல்களில் இது ஒரே ஒரு நிகழ்வாகும். பிஎன் அதனை இப்போது வெளிப்படையாகச் செய்து கொண்டிருப்பது தான் ஒரே ஒரு வேறுபாடு.
நீண்ட காலமாக இது தொடருகிறது. அரசு ஊழியர்களுடைய அந்தப் பொறுப்பற்ற போக்கை மாற்ற முடியாது. பிஎன் அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வதால் திறமை குறைந்து விட்டது. நல்ல ஆளுமை இல்லை.
விசுவாசமான மலேசியன்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், ஒரே மலேசியா பற்றி நிறையப் பேசிக் கொண்டு ஆனால் அம்னோபுத்ராக்களின் தலைவர் என்னும் தமது கடமைகளுக்கு மலேசிய அரசாங்கத் தலைவர் என்னும் முறையில் தங்களது கடமைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளவில்லை.
இரண்டு காசு: காலித் நஜிப்பை மன்னிக்க வேண்டும். காரணம் பல நேரங்களில் தாம் என்ன செய்கிறோம் என்பதே நஜிப்புக்கு தெரியவில்லை. அவருடைய ஒரே மலேசியா கோட்பாடும் “உலகில் தலை சிறந்த ஜனநாயகமும்” என்ற சுலோகங்கள் அதற்கு நல்ல எடுத்துக்காட்டுக்கள்.
.