ஈரான் மற்றும் சிரியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ள நிலையில், ரஷ்யா இருநாடுகளுக்கு ஆதரவு அளித்துள்ளது.
இந்நிலையில், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். இது தேவையற்ற செயல். ஈரான் நாட்டின் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் நாங்கள் அதை எதிர்ப்போம். அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என ரஷிய தலைமையமைச்சர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
அதேபோன்று சிரியாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சில அரபு நாடுகளும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஐக்கிய நாட்டு சபையின் அனுமதின்றி எந்த ஒரு நாடும் சிரியா மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று விளாடிமிர் புடின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.