“ஆக, பினாங்கு முதலமைச்சரையும் குறை சொல்ல வேண்டுமா?”

“கை தட்டுவதற்கு இரண்டு கரங்கள் தேவை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரு கை மடங்கியுள்ள வேளையில் அது எப்படி தட்ட  முடியும்?”

பினாங்கு வன்முறையில் சம்பந்தப்பட்ட பிஎன் இளைஞர்கள் நீக்கப்படுவர்

கொதிக்கும் மண்: பினாங்கில் லினாஸ் எதிர்ப்பு பேரணி நிகழ்ந்தது முதல் முதலைமைச்சர் மீது பழி போடுவதற்கு மறைமுகமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மாநில அரசாங்கத் தலைவர் என்ற முறையில் தமது தரத்தை அந்த ரௌடிகள் அளவுக்கு தாழ்த்திக் கொள்ள மாட்டார் என்பது மட்டும் நிச்சயம்.

ஹலோ: மசீச, கெரக்கான், பார்ட்டி சிந்தா மலேசியா ஆகியவை ஒன்றுமே இல்லை. பிஎன் பல இனக் கட்சி என்ற தோற்றத்தைப் பெயரளவில் கொடுப்பதற்காக உயிர்வாழும் கொசுறுக் கட்சிகள். அம்னோவை அதன் இளைஞர்களை நீக்குமாறு அம்னோவைக் கேட்டுக் கொள்வது, சூரியனை மேற்கே உதிக்குமாறு கேட்டுக் கொள்வதற்கு ஒப்பாகும்.

ஜேம்ஸ் டீன்: கை தட்டுவதற்கு இரண்டு கரங்கள் தேவை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரு கை மடங்கியுள்ள வேளையில் அது எப்படி தட்ட  முடியும் ?

லூஸியா: பினாங்கு மசீச இளைஞர் பிரிவுத் தலைவர் தான் ஹிங் தெய்க் அவர்களே, ஒரு கை  ஒசை எழுப்பாது. அவரும் தமது அம்னோ சகாவைப் போல முதலமைச்சர் மீது பழி போட முயலுகிறார்.

அம்னோ/பெர்க்காசாவில் உள்ள குண்டர்களுடைய பல கைகள் தான் அதனைத் தொடங்கின. அம்னோ/பெர்க்காசா கூட்டத்திற்கு ஆத்திரமூட்டினால் அது பரவாயில்லை. ஆனால் அம்னோ/பெர்க்காசா ‘திருப்பித் தாக்கும் போது” முதலமைச்சர் அல்லது லினாஸ் எதிர்ப்பு  ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களைத் தூண்டியதாக அவை கூறும். உண்மையிலேயே இரட்டை வேடம் தான்.

சரவாக்டயாக்: அந்தக் கூட்டம் லினாஸ் எதிர்ப்பு உறுப்பினர்களுக்கும் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அது அம்னோவுக்கு அல்ல. ஆகவே அம்னோ ஏன் அங்கு போக வேண்டும் ? அத்துடன் நில்லாமல் அது ஆத்திரத்தை மூட்டியுள்ளது, மிரட்டியுமுள்ளது.

பிடிஎன்: மீண்டும் நிகழ்ந்துள்ளது. அம்னோவும் அதன் குண்டர்களும் நாகரீகமற்ற முறையில் நடந்து கொள்ளலாம். ஆனால் மற்றவர்கள் அதனைக் குறை சொல்லக்  கூடாது. அவை குறை கூறப்பட்டால் அது ஆத்திரமூட்டுவதாக கருதப்படும். யாரையும் தாக்கும் உரிமை அவற்றுக்கு உண்டு

TAGS: