தவறுகளுக்குத் தேவை பரிகாரங்கள்;மன்னிப்பு அல்ல

“மன்னிப்பு கேட்கப்படுவதில் உண்மையில்லை,அது மக்களை ஏமாற்றும் தந்திரம்.அதில் பணிவில்லை,தவற்றுக்கு வருத்தப்படுவதாகவும் தெரியவில்லை.”

 

நஜிப்பின் மன்னிப்பின்மீது பிகேஆர் பாய்ச்சல்

விழிப்பானவன்: மன்னிப்பு உண்மையிலேயே வருத்தப்பட்டுச் சொல்லப்படுவதாக இருக்க வேண்டும். செய்த தவறுகளும் நோக்கமில்லாமல் செய்யப்பட்டனவாக இருத்தல் வேண்டும்.

ஆனால், பிஎன்-அம்னோ நடந்துகொள்வதைப் பார்த்தால், செய்த தவறுகளுக்கு வருத்தப்படுவதுபோலவா இருக்கிறது? திமிரும் ஆணவமும்தானே தென்படுகிறது.

இன்னமும் குழப்பம் விளைவித்துக் கொண்டும் மற்றவர்களை அச்சுறுத்திக் கொண்டும்தான் திரிகிறார்கள்.அத்துடன் தெரியாமலா, ஊழல் செய்தார்கள், அத்துமீறி நடந்துகொண்டார்கள், விரயப்படுத்தினார்கள்?என்னைக் கேட்டால் மன்னிப்பு கேட்கப்படுவதில் உண்மையில்லை,அது மக்களை ஏமாற்றும் தந்திரம்.அதில் பணிவில்லை,தவற்றுக்கு வருத்தப்படுவதாகவும் தெரியவில்லை.

அவர்கள் சொல்வதைக் கவனிக்காதீர்கள்; செய்வதைக் கவனியுங்கள்.

ஜேம்ஸ்1067: மன்னிப்பு என்று சொல்வது எளிது.ஆனால், அதைச் செயலில் காண்பிக்க துணிச்சல் வேண்டும், அடக்கம் வேண்டும்.

பிரதமர் நஜிப் ரசாக் அவர்களே, நீங்கள் சொல்லியதைச் செய்துகாட்ட கிட்டத்தட்ட ஓராண்டு அவகாசம் இருக்கிறது. கயவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து ஊழலுக்கு முடிவு கட்டுங்கள்.துரோகிகளை ஒதுக்கிவைத்து இன,சமய அத்துமீறல்களைத் தடுத்துநிறுத்துங்கள்.

சாலைக்கட்டணத்தை அகற்றி மில்லியன்கணக்கான வாகனமோட்டிகளுக்கு மனமகிழ்ச்சியைக் கொடுங்கள்.நீதித்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதியுங்கள்.

மக்களுக்குச் சேவை செய்யாமல் அரசியல்வாதிகளுக்குச் சேவை செய்யும் அரசு ஊழியர்களைப் பதவிநீக்கம் செய்யுங்கள்.பணத்தைத் தேவையற்ற ஆயுதங்கள் வாங்குவதில் செலவிடாமல் உயிரைக் காப்பதற்குச் செலவிடுங்கள்.

அம்னோ தானைத்தலைவர்களை எதிர்த்து நின்று தம்மை சுய முடிவெடுக்கும் மனிதர் என்று நஜிப்பால் நிரூபிக்க முடியுமா?முதலில் உங்கள் வீட்டைச்  சுத்தப்படுத்துங்கள்.

சோசலிஸ்ட்007: எதிர்காலத்தை உருவாக்கிகொள்ளும் மக்களின் வாய்ப்பெல்லாம் பறிக்கப்பட்டிருக்கிறது. பில்லியன் கணக்கான வரிப்பணம் சுருட்டிக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இனி, இந்நாட்டில் மலேசியர்களுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?இப்படி ஒரு எதிர்காலத்தை உருவாக்கத்தான் 55 ஆண்டுகளாக பாடுபட்டோமா?இதற்கு எப்படி மன்னிப்புக் கேட்கப்போகிறது அம்னோ-பிஎன்?

ரோக்காபில்லி:நஜிப் மன்னிப்பு கேட்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.கூட்டத்தினரைத் திருப்திப்படுத்த எதை வேண்டுமானாலும் சொல்வார் நஜிப்.ஆனால், சொல்வதைச் செய்யும் துணிச்சல் கிடையாது.

அவரிடம் நேர்மை இல்லை.இப்போது என்ன கேட்டாலும் கிடைக்கும்.ஆனால், தேர்தல் முடிந்ததும் பாருங்கள், மன்னிப்பு என்ற பேச்சே இருக்காது, இலவசப் பணம், சாலைக்கட்டணரத்து எல்லாம் இருக்காது.

எல்லாமே மேல்நோக்கி உயரும்-வரிகள் உயரும், விலைகள் உயரும்,உதவித்தொகைகள் குறையும்.பார்த்துக்கொண்டே இருங்கள்.

கிட் சியாங்: பேராக் ஆட்சிக்கவிழ்ப்புக்கு வருத்தப்படுகிறாரா, நஜிப்?

லூ சூன் பாட்: 55 ஆண்டுகளாக நாட்டைக் கொள்ளையிட்டு மக்களைத் தவிக்க விட்டார்கள்.இப்போது அதையெல்லாம் மன்னித்து, மறந்து அவருக்குப் பெரிய வெற்றியைத் தர வேண்டும் என்று கேட்கிறார். 

நஜிப், எதற்காக மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மைக்குக் கோரிக்கை விடுக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.சிறிய பெரும்பான்மை அரசும் வலுவான எதிர்த்தரப்பும் இருந்தால்தான் நாடு சிறப்பாக இருக்கும்.அங்குதான் நல்ல நிர்வாகம் இருக்கும், பொறுப்புடைமை இருக்கும், வெளிப்படைத்தன்மை இருக்கும்.

அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுவது இன்னும் நன்றாக இருக்கும்.அது,அப்போது புதிய பழைய தலைமைத்துவத்தை ஒப்பிட ஒரு வாய்ப்பைத் தரும்.

பெயரிலி_3எப்4ஏ: பேராக்கியர்கள் இன்னும் மறக்கவில்லை.

நஜிப் பதவியேற்றபோது அரசமைப்பை நிலைநிறுத்தவும் நாட்டின் நலனைப் பாதுகாக்கவும் உறுதி எடுத்துக்கொண்டார்.

ஆனால், பேராக்கில் அரசமைப்பு அதிகாரத்தைக் கையிலெடுத்துக்கொண்டு செயல்பட்டார்.பேராக் மக்களின் விருப்பத்துக்கு மாறாக நடந்துகொண்டார்.

கைரோஸ்:ஆம்.அது சரிதான்.செய்த தவறுகளை ஒவ்வொன்றாக சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும்.அப்போதுதான் அவர் நேர்மையானரா இல்லையா என்பது தெரியும்.

தவறுகளைச் சீராக்கம் செய்ய நடவடிக்கை எடுக்காமல் மன்னிப்பு கேட்பதால் ஆகப் போவது என்ன? எல்லாம் வெறும் பேச்சு.

பிகேஆர்: ஜேபி நெடுஞ்சாலைக்கு ஆன செலவு மிகவும் அதிகம்

அனாக் ஜேபி: அதற்கான சாலைக்கட்டணம்,சிங்கப்பூரிலிருந்து மில்லியன் கணக்கான அந்நிய செலாவணியைக் கொண்டுவரும் மக்களுக்கும் பிஎன்னுக்கு வலுவான ஆதரவைக் காட்டிவரும் மக்களுக்கும் விதிக்கப்பட்ட தண்டனை.

அது,பொது டெண்டர்கள் அழைக்கப்படாமல் வேண்டியவர்களுக்கு வழங்கப்பட்ட மறுஉருவாக்கத் திட்டங்களில் ஒன்று.

சிந்தாயி நெகரா: 8.1கிலோ மீட்டர் சாலை அமைக்க ரிம1பில்லியன் செலவிடப்பட்டுள்ளது.அதாவது ஒரு மீட்டருக்கு ரிம123,000. அது,தங்கத்தால் செய்யப்பட்ட சாலையாகத்தான் இருக்க வேண்டும்.ஓர் உண்மையான குத்தகையாளர் ரிம200மில்லியனில் அந்த நெடுஞ்சாலையைக் கட்டி முடித்துவிடுவார்.அதில் பெரிய ஆதாயத்தையும் கண்டிருப்பார்.

பெயரிலி_40சி3: நிறைய கேள்விகள் கேட்கக்கூடாது.மக்களுக்கு எது நல்லது என்பது ஆளும் அரசாங்கத்துக்கு மட்டுமே தெரியும்.

சோசலிஸ்007: ஜோகூர் மக்கள் அம்னோ-பிஎன்னுக்கு வற்றாத ஆதரவை வாரி வழங்குகிறார்கள் அல்லவா. இப்போது அனுபவிக்கிறார்கள்.

TAGS: