குறைந்தபட்சச் சம்பளம்: தொழிலாளர்கள் அடிமைகள் அல்ல

குறைந்தபட்ச சம்பள திட்டத்தை ஏற்றுக் கொள்ள உங்கள் ஆதாய விகிதத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் சக மனிதர்களுடன் நியாயமாக நடந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களுடைய அடிமைத் தொழிலாளர்கள் அல்ல.”

சம்பளம் திடீரெனக் கூடுவது தொழில்களை “காயப்படுத்தும்” என்கின்றன சில அமைப்புக்கள்

நியாயமானவன்: 900 ரிங்கிட் குறைந்த பட்ச சம்பளம் குறித்து புகார் செய்யும் வணிகர்கள் அல்லது தயாரிப்பாளர்கள் தங்களைக் கண்டே வெட்கப்பட வேண்டும்.

நீங்கள் இவ்வளவு காலமாக அந்த ஏழை மக்களைச் சுரண்டி வந்துள்ளீர்கள். இப்போது அவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் நீங்கள் புகார் செய்கின்றீர்கள்.

கெட்டிக்கார வாக்காளர்: குறைவான தொழிலாளர் செலவுகள் என்பதை இனிமேலும் நிலை நிறுத்த முடியாது. முதலாளித்துவாதிகள் பேராசை பிடித்தவர்கள். அவர்கள் தங்கள் ஊழியர்களை சுரண்டிப் பிழிய விரும்புகின்றனர். அது இன்னும் தொடர அனுமதிக்கக் கூடாது.

பிச்சைக் காசுக்கு மக்களை வேலைக்கு அமர்த்த முடியும் என அவர்கள் எண்ணினால் அவர்கள் கடையை மூடிக் கொள்ள வேண்டும். பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் மக்களைக் கவனித்தால் அவர்கள் உங்களுக்கு நன்மை செய்வார்கள்.

மாற்றத்துக்கான வாக்கு: குறைந்தபட்ச சம்பளம் என்ற முறையை நான் ஏற்கவில்லை. இறுதியில் தொழிலாளர் செலவுகள் கூடும் போது நாம்தான் சிரமப்படுவோம். காரணம் அந்தக் கூடுதல் செலவுகள் பயனீட்டுப் பொருட்களின் விலைகளை உயர்த்தி விடும்.

அடையாளம் இல்லாதவன்_3f6d: இது நாள் வரை நிறுவனங்கள் தொழிலாளர்களைச் சுரண்டி வருகின்றன. குறைந்தபட்ச சம்பள திட்டத்தை ஏற்றுக் கொள்ள உங்கள் ஆதாய விகிதத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் சக மனிதர்களுடன் நியாயமாக நடந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களுடைய அடிமைத் தொழிலாளர்கள் அல்ல.

நம்பிக்கை 7: அவர்கள் தங்கள் வீட்டுப் பணிப் பெண்களுக்கு 900 ரிங்கிட் சம்பளம் கொடுக்க முடியும். ஆனால் தங்கள் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சச் சம்பளத்தைக் கொடுக்க முடியாது. அவர்களுக்கு ஆதாயம் கிடைக்காது என்றால் கோப்பிக் கடைகளைத் திறக்கலாம். அவர்கள் தானியங்கி முறைக்கு மாற வேண்டும். அதனால் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும். தொழிலாளர்களைப் பயிற்சிக்கு அனுப்புங்கள்.

அடையாளம் இல்லாதவன்: அந்த நிறுவனங்கள் போட்டி ஆற்றலுடன் இயங்க முடியவில்லை  என்றால் கடையை மூடிக் கொள்ளுங்கள். ஏழைத் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

TAGS: