ஜப்பானில் நேற்று, 6.8 ரிக்டர் புள்ளி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடலில் மிகச் சிறியளவில் சுனாமியும் உருவானது. நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
கடந்தாண்டு மார்ச் 11-ம் தேதி ஜப்பானில், 9 ரிக்டர் புள்ளி அளவிலான பயங்கர நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியும் பேரழிவை ஏற்படுத்தின. அதன் முதலாமாண்டு நினைவு நாள் முடிந்து இருநாட்கள் முடிந்த நிலையில், நேற்று நாட்டின் வடபகுதியில் உள்ள, ஹொக்காய்டோ தீவின் கடற்கரை நகரான, குஷிரோ நகருக்குத் தென்பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டரில், 6.8 புள்ளிகள் பதிவான இந்நிலநடுக்கத்தை அடுத்து, அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. தொடர்ந்து கடலில், 50 செ.மீ., உயரத்தில் மிகச் சிறிய அளவில் சுனாமி உருவானது.