இசி: எல்லைத் திருத்தம் தேர்தல் சட்டங்களின் கீழ் சட்டப்பூர்வமானது

தேர்தல் தொகுதி எல்லைகள் திருத்தப்படும் போது ஒருவர், வாக்களிக்கும் தொகுதி மாறுவதற்கு தேர்தல் சட்டங்களில் வகை செய்யப்பட்டுள்ளது.

1958ம் ஆண்டுக்கான தேர்தல் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள மாற்றங்களில் “வாக்காளர் இருக்கும் இடத்தை நகர்த்தாமல் தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்துவதும்” அடங்கும் என இசி என்ற தேர்தல் ஆணையத்தின் இணையத் தளம் கூறியது.

அந்தச் சட்டத்தின் 7வது பிரிவு தொகுதிகளைப் பிரிப்பது சம்பந்தப்பட்டதாகும்.

அந்த  விஷயம் தான் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிமை இப்போது பாதித்துள்ளது.

அவர் ஏற்கனவே பெட்டாலிங் ஜெயா செலத்தான் வாக்காளாராக இருந்தார். அவர் இப்போது எல்லை திருத்த நடவடிக்கைக்குப் பின்னர் அருகில் உள்ள லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியில் தான் அவர் வாக்களிக்க முடியும்.

மந்திரி புசார் பதிவு செய்யப்பட்ட ஜாலான் 16/2 தவறுதலாக பெட்டாலிங் ஜெயா செலத்தான் தொகுதியின் ஒரு பகுதியாக குறிக்கப்பட்டு விட்டது என இசி வியாழக் கிழமை விளக்கியது.

அதே வேளையில் அதிகாரத்துவ மாநில எல்லைகள், லெம்பா பந்தாய், கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்துக்குள் இருப்பதைக் காட்டுகின்றன.

தேர்தல் எல்லைகளை “ஒருமுகப்படுத்தும்” பணிகள் தள்ளி வைக்கப்பட்டன

ஆனால் இது மந்திரி புசார் என்னும் முறையில் காலித்-தின் நிலையை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. காரணம் அவரது வீட்டு முகவரி பாசிர் துந்துங், கோலா சிலாங்கூர் என்பதாகும். ஏனெனில் அந்தச் சட்டப்பூர்வத் தேவை அடையாளக் கார்டை அடிப்படையாகக் கொண்டதாகும்.

அதிகாரத்துவ மாநில எல்லைகளுடன் தேர்தல் தொகுதி எல்லைகளை ஒருமுகப்படுத்தும் முயற்சிகளை 2011ம் ஆண்டு வரையில் இசி தொடர்ந்தது. ஆனால் பொது மக்களிடையே குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அதனை மேற்கொள்வது என அது முடிவு செய்தது.

எல்லை திருத்த நடவடிக்கை மற்ற பல விஷயங்களுடன், “வாக்குச் சாவடிகள் அருகில் இருப்பது வாக்காளர்களுக்குச் சௌகரியமாக இருப்பதுடன் வாக்களிப்பு தினத்தின் போது நெரிசல் ஏற்படுவதும் குறையும்,” என அந்த இணையத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TAGS: