“தூய்மையான மக்கள் துணிச்சலுடன் வெளியில் வந்து உண்மைகளை வெளிப்படுத்தினால் நம் நாட்டிலிருந்து ஊழலும் அதிகார அத்துமீறலும் ஒழிந்து விடும்.”
பஞ்சாயத்து மன்றத்தின் முன்பு சாட்சியமளிக்க சேவையில் உள்ள போலீஸ் அதிகாரிகள் முன் வருகின்றனர்.
நடுவணம்: ஏதோ ஒன்று கோளாறாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அழுத்தம் அதிகரிப்பது தெளிவாகத் தெரிகிறது. அலையின் வேகம் அதிகரிக்கிறது.
அந்த பஞ்சாயத்து மன்றத்தில் சாட்சியமளிக்க கௌரவமான ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளும் இன்னும் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளும் முன் வந்துள்ளனர். ஆகவே ஏதோ குளறுபடி இருப்பது-அதுவும் சேவையில் இருக்கும் அதிகாரிகள் தங்கள் வாழ்வதாரத்தைப் பணயம் வைத்து முன் வரும் போது- தெளிவாகிறது.
அது முன்னாள் தேசியத் தலைமை நீதிபதி சாலே அபாஸ் வழக்கைப் போன்று பெரிதாக அல்லது அதை விடப் பெரிதாகவும் இருக்கலாம்.
அதிகாரிகளே என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் ? அதனை எப்படிச் செய்வது என அறிந்துள்ள வழக்குரைஞர்களும் மற்றவர்களும் ஏதாவது செய்ய வேண்டும். உங்கள் மன்சாட்சி உங்களை உறுத்தவில்லையா ?
கலா: அந்த இருவருடைய நலன்களைக் காட்டிலும் வாக்காளர்களைக் கவருவதே பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு முக்கியமல்லவா ?
முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட கருமைக் கண் சம்பவத்தை புனாய்வு செய்த முன்னாள் குற்றப்புலன் விசாரணைத் துறை தலைவர் மாட் ஜைன் இப்ராஹிம் சாதாரண மனிதர் அல்ல.
தாம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு அவர் ஆதாரங்களைக் காட்டா விட்டால் ஆதாரங்களை ஜோடித்ததாக முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான், சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் மீது குற்றம் சாட்டியதற்காக அவர் பேராபத்தில் மாட்டிக் கொள்வார்.
அதே போன்று ஜோகூர் இரக்சிய கும்பல் தலைவன் தெங்கு கோ-வை மூசாவும் கனியும் பாதுகாத்ததாக குற்றம் சாட்டியுள்ள முன்னாள் வர்த்தக குற்ற புலனாய்வுத் துறையின் தலைவர் ராம்லி யூசோப்-பும் போதுமான ஆதாரங்களை வைத்திருக்க விட்டால் அவரும் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்வார்.
இப்போது சேவையில் உள்ள போலீஸ்காரர்களும் சாட்சியமளிக்க முன் வந்திருப்பது, நாட்டின் தலையாய நீதிபதியை 1988ம் ஆண்டு நீக்கிய போது நீதித் துறையுடன் மற்ற அமலாக்க அமைப்புக்களும் நசுக்கப்பட்டன என்ற கருத்துக்கு வலுவூட்டுகின்றன.
அந்த இருவருக்கும் எதிராக நஜிப் நடவடிக்கை எடுப்பாரா ? அவர்களுடைய நலன்கள் ஏதாவது ஒரு காரணத்துக்கு மிக முக்கியம் என நஜிப் கருதினால் பக்காத்தான் ராக்யாட் அந்த விஷயத்தை எடுத்துக் கொண்டு தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் இணைப்பது திண்ணம்.
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் முறையாக அமைக்கப்படும் பஞ்சாயத்து மன்றம் கடந்த காலத்தில் அந்த இருவரும் அவர்களது கூட்டாளிகளும் செய்த தவறுகளை விசாரிக்கும் என நம்புவோம்.
லிம் சொங் லியோங்: ஜோகூரைச் சேர்ந்த ஹிஷாமுடின் ஹுசேனும் விசாரிக்கப்படுவது அவசியமாகும். காரணம் அவர் அந்த விவகாரம் மீது விசாரணையைத் தொடங்க மறுக்கிறார். கடுமையான குற்றச்சாட்டுக்களை அவர் முழுமையாக நிராகரிக்கிறார். அதனால் அந்த ஊழலில் அவர் சந்தேகத்துக்குரிய முக்கியமான மனிதர் ஆவார்.
நியாயவாதி: ஹிஷாமுடின் கௌரவமான மனிதராக இருந்தால் ஆதாரங்களைப் பரிசீலிக்க புலனாய்வுக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும். அவர் அதற்குப் பதில் ஆதாரத்தை வழங்குமாறு குற்றம் சாட்டுகின்றவர்களுக்குச் சவால் விடுக்கிறார். இது குற்றம் சாட்டப்படுகின்றவர்களை அவர் பாதுகாப்பதைப் போலத் தோன்றுகிறது,
அவர் உண்மையில் அந்த இருவரும் குற்றவாளிகள் இல்லை என மெய்பிக்க விரும்பினால் பஞ்சாயத்து மன்றம் அமைக்கப்படுவதற்கு இணங்க வேண்டும்.
புளோம்: தூய்மையான மக்கள் துணிச்சலுடன் வெளியில் வந்து உண்மைகளை வெளிப்படுத்தினால் நம் நாட்டிலிருந்து ஊழலும் அதிகார அத்துமீறலும் ஒழிந்து விடும்
மலேசியாகினி செய்தி உண்மை என்றால் மலேசியாவுக்கு மீட்சி ஏற்படுவது திண்ணம். ஊழல் மலிந்தவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது.