இந்தியாவுக்கான நிதியுதவியை நிறுத்திக்கொள்ள பிரிட்டன் முடிவு

இந்தியப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், இதுவரை அளித்து வரும் நிதியுதவியை நிறுத்த, பிரிட்டன் முடிவு செய்துள்ளது. 2015-ம் ஆண்டுக்குப் பின், இந்நிதியுதவி இந்தியாவுக்கு கிடைக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனின் அனைத்துலக மேம்பாட்டுத் துறை, பல நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, நிதியுதவி செய்து வருகிறது. பிரிட்டனின் மற்ற துறைகளைப் போல் அல்லாமல், இத்துறை, 2015 வரை 35 சதவீதம் அளவிற்கு அதிக நிதியைப் பெறும் வகையில், வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில், 66 சதவீதம் பேர் பிரிட்டன் பிற நாடுகளுக்காக செலவு செய்வது மிக அதிகம் எனவும் 69 சதவீதம் பேர் இந்தியாவுக்கு பிரிட்டன் நிதியளிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். அதேநேரம், அண்மையில் போர் வானூர்தி வாங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதில், பிரிட்டனின் இராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனம் ஒன்று தோல்வி கண்டது. அதையடுத்து, இந்தியாவுக்கு அளித்து வரும் நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

TAGS: