உங்கள் கருத்து: 2008 ஒரு தவறா, யார் பேசுவது பார்த்தீர்களா?

“ஒரே தப்பை இரண்டு முறை செய்யாதீர்கள்! நல்லது அதே தவறை 13வது பொதுத் தேர்தல் வரும் போது 13வது முறையாக நாம் செய்யக் கூடாது என நான் சொல்வேன்.”

2008 தவறை திரும்பச் செய்ய வேண்டாம் என்கிறார் ஷாரிஸாட்

புத்திசாலி வாக்காளர்: அந்த வெட்கமில்லாத பெண்மணி, வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும் என சொல்வதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்.  கொள்கைகளும் அடிப்படை தார்மீகப் பண்புகளும் இல்லாத தமது சகாக்களிலிருந்து அவர் வேறுபடவே இல்லை. வாக்காளர்களை முட்டாள்களாகவும்  எது சரி எது தவறு என்பதைப் பகுத்தறிய முடியாதவர்களாலவும்  கருதும் மோசடிக்காரர்களைப் போன்றுதான் அவரும் இருக்கிறார்.

அவர் குடி மக்களை பார்வையற்றவர்கள் என்றும் வாய் பேச முடியாதவர்கள் என்றும் எண்ணுகிறார். நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய உலகளாவிய அடிப்படைக் கோட்பாடுகள் இருக்கின்றன. ஆனால் அவரது நடத்தை நாம் கற்பனை செய்வதை விட மோசமாக உள்ளது.

தங்கள் கண்களை மூடிக் கொள்ள விரும்பும் எந்த வாக்காளரும் அத்தகைய ஏற்கத் தகாத நடத்தையைக் கொண்டவர்களே.

அபாஸிர்: உண்மையில் ஷாரிஸாட் அப்துல் ஜலில் ஆண்டைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். மக்கள் முதன் முறையாகத் தவறு செய்தது 2008ல் அல்ல.

நாம் 1980ம் ஆண்டுகள் தொடக்கம் தவறுகளையே செய்து வருகிறோம். அப்போது அரசமைப்பு ரீதியில் மலாய்க்காரரான ஒருவர், அரசு சேவையில் தொடங்கி அனைத்து அமைப்புக்களை திட்டமிட்டு அழிப்பதற்கு நாம் அனுமதித்து விட்டோம். அதனால் இறுதியில் ஷாரிஸாட்டும் அவரது குடும்பமும் 250 மில்லியன் ரிங்கிட் மக்கள் பணத்தை எடுத்துக் கொண்டது. அதில் பெரும்பகுதி சிங்கப்பூரில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பெயரளவுக்கு மட்டுமே பங்சாரில் உள்ளது.

உறங்கிக் கொண்டிருந்த மக்கள் முதலில் விழித்துக் கொண்டடது 2008ல் ஆகும். மக்கள் மீண்டும் உறங்கக் கூடாது என இறைவனை வேண்டிக் கொள்வோம். அவ்வாறு மக்கள் உறங்கினால் கொள்ளையடிப்பது தொடரும். பின்னர் அது சரி செய்ய முடியாத பெரும் தவறாகி விடும்.

சில்: ஷாரிஸாட் எல்லா பொது நிகழ்வுகளிலும் தம்மைத் துணிச்சலானவர் எனக் காட்டிக் கொள்கிறார். ஏதும் அறியாதவர்கள் போல காட்டிக் கொள்ளும் தமது சகாக்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகின்றார். ( அம்னோவில் யார் தான் தவறு செய்யவில்லை என ஷாரிஸாட் சொல்லும் சொற்றொடர் )

மக்கள் அவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் எந்தக் கட்சியும் தானியக் கிடங்கிற்குள் கை விட மாட்டா.

சாடிரா: பிஎன் -னுக்கு வாக்களித்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து அடுத்த தேர்தலில் அதே தவறைச் செய்ய வேண்டாம். இல்லை என்றால் அடுத்த பிஎன் தலைவர் 500 மில்லியன் ரிங்கிட்டுடன் ஒடி விடுவார்.

நீங்கள் பிஎன்- னுக்கு வாக்களித்து தவறு செய்திருந்தால் முட்டாள்களைப் போல மீண்டும் அதே தவறைச் செய்ய வேண்டாம். பிஎன்- னுக்கு 50 ஆண்டுகள் வழங்கப்பட்டு விட்டன. அதனைப் பற்றி நமக்கு நன்கு தெரியும். ஆகவே எதிர்த்தரப்புக்கும் ஒரு வாய்ப்புக் கொடுக்காலாமே ?

கைரோஸ்: ஷாரிஸாட் இரண்டு நிலைகளில் முரண்படுகிறார். முதலாவதாக 2008ம் ஆண்டு நிகழ்ந்தது தவறல்ல. அது மக்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக அமைந்து விட்டது. காரணம் பின் கட்டுக்குள் உள்ள மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பிகேஆர் ஆட்சி புரியும் பினாங்கு, சிலாங்கூர் மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு மக்களுக்கு இப்போது கிடைத்துள்ளது.

2008ல் என்ன நிகழ்ந்தாலும் அது தவறு அல்ல. உண்மையில் இன்னும் அதிகமான மாநிலங்கள் பிகேஆர் பக்கம் சாய்வதற்கான தொடக்கம் ஆகும்.

இரண்டாவதாக ஷாரிஸாட் மலேசிய அரசியலில் தமது செல்வாக்கை இழந்து விட்டார். அவருடைய கருத்துக்கு எந்த மதிப்பும் இல்லை. அது எதிர்மறையான விளைவுகளைக் கொண்டு வரும். என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழலில்  அவரது குடும்பம் சம்பந்தப்பட்டதைப் போல. பெரும்பான்மை மலேசியர்கள் தம்மை வெறுப்பதை அவர் இன்னும் உணரவில்லை. வெட்கக் கேடானது.

எச்ஒய்எல்: “தரமான வாழ்க்கைத் தரம் குறித்து நாம் பெருமை கொள்ளலாம். வறுமை நிலை இன்னும் காணப்பட்டாலும் மக்களுக்கு உணவு கிடைக்கிறது. வாழ்வதாரத்தைத் தேடிக் கொள்ள முடிகிறது,” என்கிறார் ஷாரிஸாட்.

நிச்சயமாக உங்களுடைய தரமான வாழ்க்கை குறித்து நீங்கள் பெருமை கொள்ளலாம். காரணம் நீங்கள் எங்களிடமிருந்து திருடி வீட்டீர்கள். சாதாரண மக்களாகிய நாங்கள் ஏழையாக இருக்கிறோம்.

எங்கள் வாழ்க்கைத் தரம் குறித்து பெருமை கொள்ளுமாறு எங்களுக்குச் சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ? அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு உங்கள் கணவரிடமும் பிள்ளைகளிடமும் சொல்லுங்கள். அடுத்து அனைத்து மலேசியர்களும் நல்ல தரமான வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.

ஜெரோனிமோ: ஒரே தப்பை இரண்டு முறை செய்யாதீர்கள் ! நல்லது அதே தவறை 13வது பொதுத் தேர்தல் வரும் போது 13வது முறையாக நாம் செய்யக் கூடாது என நான் சொல்வேன். எல்லாம் போதும். போதும்.

TAGS: