டைம் கண்ணோட்டம் விரிவான தேர்தல் மோசடியைப் பார்க்கத் தவறி விட்டது

“‘நஜிப் வீரர்கள் இல்லாத ஜெனரல்’ என தாங்கள் வருணித்துள்ளது மிகவும் பொருத்தமானது. மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் உள்ள எலிகளைப் போன்று நஜிப்-பை விட்டு ஒடுவது தான் அவரது சேவகர்களுக்கு உள்ள ஒரே வழியாகும்.”

டைம்: பிஎன்-னுக்கு  13வது பொதுத் தேர்தலில் மூன்று மாநிலங்கள் மட்டுமே பாதுகாப்பானவை

ருபீ ஸ்டார்_4037: மிக்க நன்றி முன்னாள் நிதி அமைச்சர் டைம் ஜைனுடின் அவர்களே, உங்கள் ஆரூடம் உண்மையாகும் என பெரிதும் நம்புகிறேன்.

பிஎன் அதிகார வர்க்கம் இப்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான ஜெனரல்களுக்கு களத்தில் உள்ள மக்களுடன் தொடர்பே இல்லை. தேசியக் கருவூலம் கொள்ளையடிக்கப்படுவதால் தங்களுக்கு ஏதுமில்லை என்பதை வீரர்கள் உணருகின்றனர்.

500 ரிங்கிட் உதவி வெறும் கோழித் தீவனமாகும். பெரும்பாலான மக்கள் அந்தப் பணத்தை வாங்கிக் கொள்வர். ஆனால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு நன்றி கூறவில்லை.

கெரக்கான் முற்றாக ஒழிக்கப்பட்டு விடும். மசீச ஒரு சில இடங்களை தக்க வைத்துக் கொள்ளக் கூடும். ஆனால் நடப்பு சூழ்நிலையில் மசீச-வுக்குப் பாதுகாப்பான இடங்களை அம்னோ வழங்கப் போவதில்லை. காரணம் பாதுகாப்பான இடங்களே போதுமான அளவுக்கு இல்லை.

என்றாலும் விரிவான தேர்தல் மோசடிகளினால் பிஎன் தொடர்ந்து ஆளும் கட்சியாக இருக்கும்.

உண்மை ஒளி: டைம் ஆரூடம் கூறுவதற்கு முன்னர் அடுத்த பொதுத் தேர்தலில் ஆளும் கூட்டணியை பக்காத்தான் ராக்யாட் தோற்கடித்து அரசாங்கம் மாறும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

நஜிப் ‘வீரர்கள் இல்லாத ஜெனரல் என்னும் டைம் கருத்து பொருத்தமானது. மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் உள்ள எலிகளைப் போன்று நஜிப்-பை விட்டு ஒடுவது அல்லது தங்கள் உழைப்புக்கு வெகுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஒட்டிக் கொண்டிருப்பது தான் அவரது சேவகர்களுக்கு உள்ள ஒரே வழியாகும்.

டைம் தந்திரமான வியூகவாதி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்த்தரப்பில் மந்த நிலையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அவர் அந்த ஆரூடங்களைத் தந்திரமாகச் சொல்லியிருக்கலாம். 

லிம் சொங் லியோங்: டைம் நஜிப்பையும் அவரது குழுவையும் “வீரர்கள் இல்லாத ஜெனரல்கள்” என வருணித்துள்ளார். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் மடிந்து கொண்டிருக்கும் ஒரே மலேசியா என்ற உடலைக் கொத்தித் தின்பதற்கு காத்திருக்கும் ஈவிரக்கமற்ற புலிகளாகவே கருதுகிறேன்.

நான் மலேசியன்: நாட்டின் பிரச்னைகளுக்கு வழி வகுத்தவர்கள் டைமும் டாக்டர் மகாதீர் முகமட்டும் ஆவர். நீங்களும் மகாதீரும் இருந்த காலத்தில் தான் பிஎன் ஊழல் நடைமுறைகள் தலைதூக்கின.

பிஎன் -னை குணப்படுத்துவதற்கு வழியே இல்லை. அரசாங்க மாற்றமே ஒரே வழி.

சாடிரா: மகாதீர் காலத்தில் அவர் விடுக்கும் ஒவ்வொரு அறிக்கையையும் கட்சித் தலைவர்கள் பலர் ஆதரிப்பார்கள். அப்துல்லா அகமட் படாவி காலத்தில் அது குறைந்து விட்டது. இப்போது நஜிப் மட்டுமே ஓரே குரலாக ஒலிக்கின்றது. துணைப் பிரதமர் கூட பேசினாலும் எதையோ பேசுகிறார்.

சில சமயங்களில் அகமட் மஸ்லான், நஸ்ரி அப்துல் அஜிஸ் தவிர வேறு யாரும் பேசுவதே இல்லை. அம்னோ, பிஎன் தலைவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் ?

நஜிப் மட்டும் தனித்து நிற்கிறார். மூன்று மாநிலங்களில் மட்டுமே பிஎன் வலுவாக இருப்பதாகத் தோன்றினால் எதிர்காலம் சிறப்பாக இல்லை.

அது மோசமாகத் தோல்வி கண்டு பல இன நாட்டை எப்படி வழி நடத்துவது என்பதை அது கற்றுக் கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்.

லவர் பாய்: டைம், உங்கள் ஆரூடம் சரியா என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஜோகூர், பாகாங், மலாக்கா ஆகியவற்றில் பிஎன் எளிதாக வெற்றி பெறுமா ?

முதலாவதாக அம்னோ உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பாஸ், பாகாங்கிலும் ஜோகூரிலும் உள்ள பெல்டா திட்டங்களில் ஊடுருவி விட்டது.

அங்குள்ள மக்கள் பிரச்னைகள் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளன. அவர்கள் பாஸ் கட்சியை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். மலாக்கா மட்டுமே பிஎன் -னுக்கு பாதுகாப்பான மாநிலமாகும்.

சுற்றுலாத் தொழில் மூலம் பணம் பண்ணுவதிலேயே மலாக்கா மக்கள் குறியாக இருக்கின்றனர். வரும் பொதுத் தேர்தல் அம்னோவுக்கும் பிஎன் -னுக்கும் மரண அடியாக இருக்கும் என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம்.

குவிக்னோபாண்ட்: பாகாங், ஜோகூர், மலாக்கா ஆகியவற்றுடன் சபா, சரவாக்கிலும் பிஎன் வென்றால் அது கூட்டரசு அரசாங்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

TAGS: