மும்பைத் தாக்குதல் சம்பவத்தின்போது முக்கிய நபராக செயற்பட்டவரை நாடு கடத்தி கொண்டு வருவதற்கு இந்தியா ஆர்வம் காட்டவில்லை என இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடம், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முக்கிய நபராக செயல்பட்டதாக லஷ்கர்-இ- தொய்பா அமைப்பைச் சேர்ந்த டேவிட்கோல்மன் ஹெட்லி மீது அமெரிக்க நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் திகதியன்று இது குறித்து இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக இருந்த திமோதி ரோமர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நராயணனிடம் தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.