ஹிண்ட்ராப், விழித்துக் கொள், பிரதமரை நம்பவே கூடாது

“பகல் கனவு காண்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் எத்தனை தர்பூசணிகளை உடைத்தாலும் உங்கள் மாடுகள் வீடு திரும்பப் போவதில்லை.”

ஹிண்ட்ராப்: நஜிப் இந்தியர்களுடைய நம்பிக்கையை சிதறடித்து விட்டார்

குவிக்னோபாண்ட்: இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஹிண்ட்ராப் கடைப்பிடிக்கும் இனவாத அணுகு முறையை நான் எப்போதும் அங்கீகரித்தது இல்லை. காரணம் ஏழை இந்தியர்களும் இருக்கின்றனர். பணக்கார இந்தியர்களும் இருக்கின்றனர். இனவாதம் என்பது சரும நிறம் சம்பந்தப்பட்டதாகும்.  சமூக- பொருளாதார, மக்கள் பிரச்னைகளாக அவை கருதப்பட வேண்டும்.

ஏழ்மையிலுள்ளவர்களை மேம்படுத்துவதற்கு அவர் உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் எடுப்பதற்கு முன்னரே தம்மை ‘நம்புமாறு’ மற்றவர்களை ஒரு தலைவர் கேட்டுக் கொள்வது வினோதமாக இருக்கிறது.  இப்போது அந்த நம்பிக்கையை சிதறடித்து விட்டதாக ஹிண்ட்ராப் சொல்வதுதான் அதை விட வேடிக்கையாக இருக்கிறது.

முதலாவதாக நம்பிக்கை என ஏதாவது இருந்ததா? அம்னோ/பிஎன்-னிடமிருந்து குறுகிய கால ஆதாயம் எதனையும் அடைய முடியும் என்ற நம்பிக்கையில் ஹிண்ட்ராப், பக்காத்தானை உதைக்கிறதா?

ஹிண்ட்ராப் தனது குறுகிய இனவாத அணுகுமுறையிலிருந்து விலகி சிறந்த மலேசியாவை அடைய பக்காத்தானுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

ஒன்மு-இத்னா: “நீங்கள் எனக்கு உதவுங்கள், நான் உங்களுக்கு உதவ வேண்டிய அவசியமில்லை, தம்பி!” இதுதான் வளைந்த நாக்கைக் கொண்ட பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது அம்னோ தலைவர்களும் சொல்கின்றனர்.

பிரதமர் என்ன சொல்கிறார் என்பதன் அர்த்தத்தை ஹிண்ட்ராப் புரிந்து கொள்ளத் தவறியதே இங்கு பிரச்னையாகும். அது இது தான்: “முதலில் நீங்கள் எனக்கு உதவுங்கள் (எந்த அளவுக்கு அந்த உதவி காட்டப்படுகிறது என்பதைப் பொறுத்து) உங்களுக்கு உதவுவதா இல்லையா என்பதை நான் முடிவு செய்வேன்.”

பிரதமருடைய உள்ளத்தில் பதிந்துள்ள உண்மை அதுவே. ஆகவே ‘பகல் கனவு காண்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் எத்தனை தர்பூசணிகளை உடைத்தாலும் உங்கள் மாடுகள் வீடு திரும்பப் போவதில்லை.

மலேசியா ஸ்டீவன்: நீங்கள் குறைந்தது 10,000 பேரைக் கொண்டு வந்தால் மட்டுமே உங்களைச் சந்திக்க அம்னோபுத்ராக்கள் தயாராக இருப்பார்கள்.

நஜிப் வார்த்தைகளில் மயங்கி விட வேண்டாம். அவர் சொல்வதைச் செய்வதில்லை. சீன மொழிக் கல்வியை எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த 50 ஆண்டுகளாக அந்தத் தலைவர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கத்தை மாற்றுவதுதான் ஒரே வழி.

ஆத்திரமடைந்தவன்: அந்த தீய நோக்கம் கொண்ட மோசடிக்காரர்கள் மீது ஹிண்ட்ராப் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளதா? அரசாங்கத்தை மாற்றுவதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். மற்றவற்றை மறந்து  விடுங்கள்.

அடையாளம் இல்லாதவன்: நஜிப்பை சீன சமூகம் வெகு காலத்துக்கு முன்பே கைகழுவி விட்ட வேளையில் இந்திய சமூகம் ஏன் இன்னும் அவரைச் சந்திக்க விரும்புகிறது என்பது எனக்குப் புரியவில்லை.

அடுத்த அரசாங்கத்தை பக்காத்தான் அமைத்தால் உங்களுடைய 18 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்  சாத்தியங்கள் நிறைய உள்ளன.

பிக் அ பு: இந்தியரான நான் சீன வாசகர்கள் சொல்வதை முற்றாக ஏற்றுக் கொள்கிறேன். நாம் இந்தியர்கள் ஏன் பிரதமரைச் சந்திக்க வேண்டும்?

நாம் பக்காத்தானுக்கு வாக்குகளை முழு மனதாக வழங்குவோம். அதுவும் நமது நம்பிக்கையை சிதறடித்து விட்டால் அதனையும் ஒதுக்கி விடுவோம்.  அவ்வளவு தான். ஹிண்ட்ராப் தலைவர் பி உதயகுமாருக்கு வேறு நோக்கங்கள் இருந்தால் தவிர.

பெர்ட் தான்: உதயகுமார் வழி நடத்தும் ஹிண்ட்ராப் பிஎன் பக்கம் சாய்வதா அல்லது பக்காத்தான் பக்கம் சாய்வதா என்பதை இது வரை முடிவு செய்யவில்லை.

ஏதாவது ஒர் இலக்கை தாக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவர்கள் வானத்தை நோக்கி சுட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் பிஎன் -னையும் நம்பவில்லை. பக்காத்தானையும் நம்பவில்லை.

ஹிண்ட்ராப் இனி எங்கு செல்லும் ? நீங்கள் பிஎன்-னுடனும் பக்காத்தானுடனும் வேலை செய்ய விரும்பவில்லை. அதே வேளையில் நீங்கள் தனியாகவும் செல்ல முடியாது. எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. இந்தியர்களும் அது போன்ற நிலையில்தான் இருக்கின்றனரா?

இது இந்தியர்களுடைய இக்கட்டான சூழ்நிலையா அல்லது உதயகுமாருடைய இக்கட்டான சூழ்நிலையா?

உண்மை ஒளி: இந்த நாட்டில் உள்ள இந்தியர்கள் பிளவுபட்டு ஒற்றுமையாக இல்லாததால் அவர்கள் தொடர்ந்து ஒரங்கட்டப்படுவர்.  அவர்களை யாரும் பொருட்படுத்தவும் போவதில்லை.

இந்தியர்கள் அரசியல் ரீதியில் உயிர் வாழ வேண்டுமானால் அவர்கள் ஒரே ஒரு அரசியல் வாகனத்தின் கீழ் ஐக்கியமான ஒரே குரலாக ஒலிக்க வேண்டும். அப்போதுதான் அந்த சமூகத்தை பிரதிநிதிக்கும் அமைப்பு மதிக்கப்படும். அதன் கோரிக்கைகள் கேள்வியின்றி ஏற்றுக் கொள்ளப்படும்.

TAGS: