முதலில் அந்த 250 மில்லியன் ரிங்கிட் கடனில் ஒவ்வொரு சென்-னையும் மீட்கவும்

“ஆர்வமுள்ள நிறுவனங்கள் அதனை ஏற்றுக் கொள்வதற்கு டெண்டர்களை அழைக்கும் முன்னர் நீங்கள் பதில் அளிக்க வேண்டிய பல கேள்விகள் உள்ளன.”

என்எப்சி திட்டத்தை எடுத்துக் கொள்ள அரசாங்கம் புதிய நிறுவனத்தை தேடுகிறது

நமது நாணயத்தைக் காப்பாற்றுங்கள்: முழு விஷயத்தையும் மறைப்பதற்கான தொடக்கமே அது. “நீங்கள் இழப்புக்களைச் சரிக்கட்டுவதற்கு வேறு எங்காவது நான் உங்களுக்கு இன்னொரு குத்தகை கொடுக்கிறேன்” என்ற அடிப்படையில் அமைந்த அரசாங்க-தனியார்துறை ஒத்துழைப்பு வழி புதிய நிறுவனம் அந்தப் பிரச்னையை எடுத்துக் கொள்ள அனுமதிப்போம் என்பதுதான் அது.

பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டதாக மக்களிடம் சொல்லுங்கள். எல்லாம் முடிந்து விட்டது- நாங்கள் எங்கள் வேலையைச் செய்து விட்டோம்.

ஆனால் மாட்டு ஊழலில் சொத்துக்கள் முடக்கப்பட்டனவா? உயர் நீதிமன்றத்தின் பிரகடனம் எங்கே? தேசிய விலங்குக் கூட நிறுவன இயக்குநர்களின் தனிப்பட்ட சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளனவா?

அது பற்றிப் பேசுங்கள். பிர்சனையை மற்றவர்களுக்கு மாற்றி விடுவது பற்றிப் பேச வேண்டாம்.  உண்மையில் மூளையை குழப்ப அரசாங்கம் எடுத்துள்ள இன்னொரு முடிவாகும்.

என்எப்சி தலைவர் முகமட் சாலே இஸ்மாயிலுக்கு எதிரான வழக்கு குறித்து நீதிமன்றங்கள் இன்னும் எந்த முடிவும் செய்யவில்லை. நிதி முறைகேடுகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முக்கியமான நபர்கள் அனைவரும் இன்னும் விசாரிக்கப்படவில்லை. என்றாலும் அரசாங்கம் என்எப்சி-க்குப் புத்துயிரூட்ட விரும்புகிறது.

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தங்களது சேவகர்களில் ஒருவரிடம் பணத்தை கொடுக்க அம்னோ அவசரப்படுவதாகத் தோன்றுகிறது.

கோமாளி: இது வரையில் ஒரே ஒருவர் அதாவது என்எப்சி தலைவர் மீது மட்டுமே நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  மற்ற இயக்குநர்களை பற்றி ஒரு தகவலும் இல்லையே?

அந்தத் திட்டத்தை அங்கீகரித்த அப்போதைய விவசாய அமைச்சரையும் அவரது குழுவினரையும் அந்த நிதிகள் விநியோகம் செய்யப்படுவதையும் பயன்படுத்தப்படுவதையும் கண்காணிக்க நியமிக்கப்பட்ட குழுவையும் பற்றி என்ன சொல்வது?

இப்போது என்எப்சி திட்டத்தை எடுத்துக் கொள்ள அரசாங்கம் இப்போது புதிய நிறுவனத்தைத் தேடுகிறது. அந்தத் திட்டம் தோல்வி அடைந்து விட்டதை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என்பதே அதன் அர்த்தமாகும். எப்போது அந்த ஆடம்பர அடுக்குமாடி வீடுகளும் விற்கப்பட்டு அந்தப் பணம் வரி செலுத்துவோரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்?

முறைகேடுகள் ஏதும் நிகழவில்லை என போலீஸும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதினும் அறிவித்த பின்னர் அந்தத் திட்டத்துக்கான நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதை அரசாங்கம் இறுதியில் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

அந்த விஷயத்தை பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் விடாப் பிடியாக தொடர்ந்திருக்கா விட்டால் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பம் அந்தப் பணத்தை இன்னும் பையில் போட்டுக் கொண்டே இருக்கும். அந்தத் திட்டமும் தரை மட்டமாகி இருக்கும்.

உண்மையில் இந்த ஆட்சி முழுக்க முழுக்க ஊழல் மலிந்தது. இந்த விவகாரம் பெரிய பனிப்பறையின் நுனியாக இருக்கக் கூடும் என்ற கவலையும் உருவாகியுள்ளது.

கைரோஸ்: என்எப்சி திட்டத்துக்கு அரசாங்கம் புதிய டெண்டர்களைக் கோரும் வேளையில் பழையதுக்கு என்ன நடக்கும்?

ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளுக்கும் நிலத்துக்கும் செலவு செய்யப்பட்ட மக்கள் பணத்தை மீட்காமலேயே அரசாங்கம் அந்த இழப்புக்களை வராத கணக்கில் எழுதப் போகிறதா? அப்படி என்றால் ஏன்?

ஷாரிஸாட் அதற்கு பின்னணியில் இருப்பது காரணமா? அதனால் அவரைத் தொட முடியாதா? அல்லது அந்தத் திட்டத்தில் உயர் நிலையில் உள்ள வேறு யாருக்காவது பங்கு உள்ளதா? அதனால் யார் மீதும் குற்றம் சாட்டப்படாமல் அவர் தப்பிக்க முடியுமா?

எது எப்படி இருந்தாலும் ஒன்று மட்டும் நிச்சயம். மக்கள் எளிதாக ஏமாறப் போவதில்லை. நீதி கிடைக்கும் வரை நாங்கள் ஒயப் போவதில்லை. மறைப்பதற்கு அனுமதிக்கவே கூடாது.

அடையாளம் இல்லாதவன்: 250 மில்லியன் ரிங்கிட் மக்கள் வரிப்பணம் சம்பந்தப்பட்டுள்ள வேளையில் பிஎன் அரசாங்கம் தீவிரமாக இருக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது.

ஆர்வமுள்ள நிறுவனங்கள் அதனை ஏற்றுக் கொள்வதற்கு டெண்டர்களை அழைக்கும் முன்னர் நீங்கள் பதில் அளிக்க வேண்டிய பல கேள்விகள் உள்ளன. அந்த 250 மில்லியன் ரிங்கிட் கடனில் எவ்வளவு பணம் எடுக்கப்பட்டுள்ளது?

கடன் வழங்கப்பட்டதற்கான நோக்கத்துக்கு முரண்பாடான காரணங்களுக்கு எவ்வளவு மாற்றப்பட்டது, திசை திருப்பி விடப்பட்டது? பணத்தை தவறாக நிர்வாகம் செய்ததாக ஏன் மற்ற இயக்குநர்கள் மீது குற்றம் செய்யப்படவில்லை?

நமது அரசாங்கம் அந்த விவகாரத்தை அலட்சியம் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ள அம்னோ உறுப்பினர் ஒருவருடைய குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட அந்த விவகாரத்தை மறைப்பதாக அதன் மீது பழி சுமத்தப்படும்.

TAGS: