“ஊழலுக்கு வித்திடுவது அச்சமே தவிர அதிகாரம் அல்ல. அதிகாரத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சம் அதிகார வர்க்கத்தை ஊழலில் ஈடுபட வைக்கிறது”
ஆசிரியர்கள் நிலை மீது கல்வித் துறை ஆய்வு
ஜிம்மி இங்: அம்னோ/பிஎன் மேற்கொள்ளும் இன்னொரு தீய சதி இதுவாகும் -அதாவது அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ/பிஎன் -னுக்கு வாக்களிக்குமாறு அரசாங்க ஊழியர்களை மருட்டுவது. (இந்த இடத்தில் சிலாங்கூரில் உள்ள பள்ளி ஆசிரியர்கள்)
விரக்தி அடைந்துள்ள அம்னோ/பிஎன் ஆட்களுடைய அச்சம் இறுதியில் வெளிச்சத்துக்கு வந்து விட்டது. தாங்கள் தோல்வி அடைவோம் என்ற அச்சம் அவர்களை வாட்டுகிறது.
பர்மிய ஜனநாயகப் போராட்டத் தலைவி ஆங் சான் சூ கீ இவ்வாறு சொல்கிறார்: (அதனை பெர்சே தலைவர் எஸ் அம்பிகாவும் ஒரு முறை மேற்கோள் காட்டினார். “ஊழலுக்கு வித்திடுவது அச்சமே தவிர அதிகாரம் அல்ல. அதிகாரத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சம் அதிகார வர்க்கத்தை ஊழலில் ஈடுபட வைக்கிறது.”
கேஎஸ்என்: வாக்காளர் பதிவு எப்போது கல்வித் துறையின் கடமைகளில் ஒன்றானது? வாக்காளர் பதிவு என்பது தேர்தல் ஆணையமும் வாக்காளர்களும் அரசியல் கட்சிகளும் சம்பந்தப்பட்ட விஷயமல்லவா ?
முதலில் அது சபா தாவா-வில் நடந்தது. இப்போது சிலாங்கூரில். கிறிஸ்துவர்களைக் குறியாகக் கொண்டு ஜோகூர் கருத்தரங்கு ஒன்றை நடத்தப் போகிறது.
அரசாங்கச் சேவைகளில் என்னதான் நடக்கிறது? எப்போது அவை அம்னோவின் கூலிகளாகின? கல்வி அமைச்சர் அது குறித்து என்ன சொல்கிறார்?
சிந்தனைக்கு: கடந்த 54 ஆண்டுகளாக அம்னோ/பிஎன் அரசு ஊழியர்களை மிரட்டி வருகிறது. மக்களிடம் அது ஜோடிக்கப்பட்ட இனப் பிரச்னைகளை முன் வைத்து விளையாடும்.
இரண்டு காசு: அந்த ஆய்வு பயனற்றது. ஆசிரியர்களுக்கு ‘அன்பளிப்புக்களை’ விநியோகம் செய்யுங்கள். அது பலன் தரக் கூடும். விரக்தி அடைந்தவர்களுக்கு அறிவே கிடையாது.
இனவாதம் இல்லை: ஆசிரியர்கள் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக இல்லையா என்பதையும் அவர்களுடைய வாக்களிப்பு மாவட்டங்களை சோதனை செய்வது கல்வி அமைச்சின் வேலை அல்ல என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.
அத்தகைய மருட்டலை எதிர்நோக்கும் ஆசிரியர்களுக்கு என் அனுதாபங்கள்.
ஹலோ: கல்வித் துறை கல்வி மேம்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இன்னொரு துறையின் வேலையில் மூக்கை நுழைக்கக் கூடாது.
நமது கல்வித் தரம் மோசமாக உள்ளது. அதனை மேம்படுத்தி தரமான பட்டதாரிகளை உருவக்குவதே கல்வித் துறையின் வேலை.
அதிகாரி: கல்வித் துறை வாக்காளர் பதிவு மீது குறிப்பை அனுப்பியது உண்மையே
குவிக்னோபாண்ட்: எல்லாம் வேடிக்கையாக இருக்கிறது. ஆசிரியர்கள் வாக்காளர்களாக பதிந்து கொள்ள வேண்டும் என கல்வித் துறை விரும்பினால் அது பள்ளிக்கூடங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பினால் போதும். அதனைத் தலைமையாசிரியர் அறிவிப்புப் பலகையில் போட்டு விட்டால் எல்லோரும் அதனை படித்து விடுவார்கள்.
இதற்கு அடுத்து என்ன நடக்கும்? இதோ….
1. தாம் பதிவு செய்துள்ளதாக அறிவித்த ஆசிரியரிடம் மேலும் பல கேள்விகள் எழுப்பப்படும்.
2. அவர் பதிவு செய்து கொள்ளவில்லை என்றால் ஆசிரியர் நலன்களை நடப்பு அரசாங்கம் கவனித்துக் கொள்வதால் அவர் பிஎன் -னுக்கு வாக்களிக்க வேண்டும் என மறைமுகமாகக் கூறும் அற்புதமான கடிதம் ஒன்று அந்த ஆசிரியருக்குக் கிடைக்கும்.
தேர்தல் ஆண்டில் அந்த முதல் நடவடிக்கை கூட தலையீடாகக் கருதப்படும். இரண்டாவது அதை விட மோசமானதாகும்.
ஒர் ஆசிரியரின் அரசியல் ஈடுபாடு பற்றி கல்வித் துறை அறிந்து கொண்டால் அவர் மாற்றப்படுவது திண்ணம்.
ஆசிரியர்கள் திறமையாகப் போதிக்க வேண்டும் என்பதை விட வாக்காளர்களாகப் பதிந்து கொண்டுள்ளனரா என்பதிலேயே கல்வித் துறை அக்கறை காட்டுவதாகத் தெரிகிறது.
பெரும்பாலான மாணவர்கள் டியூசன் வகுப்புக்களுக்கு செல்வதை கல்வித் துறை அறியவில்லை எனத் தோன்றுகிறது. அதற்கு என்ன காரணம் தெரியுமா? ஆசிரியர்களுடைய கற்பிக்கும் திறன் குறைந்து போனதே ஆகும்.
அடையாளம் இல்லாதவன்: நமது கல்வி முறை படு வீழ்ச்சி அடைந்துள்ளதற்கான காரணம் இப்போதுதான் தெரிகிறது. கல்வி முறையை மேம்படுத்துவதற்குப் பதில் கல்வித் துறை அதிகாரிகள் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.