பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு அள்ளித்தரப் போகிறார் நஜிப்

குளோபல் வென்சர்ஸ் ஹோல்டிங்ஸ் (FGVH) பங்குச் சந்தையில் இடம்பெறப் போவதால், பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு மே மாதத்தில் ஒரு குருட்டுயோகம் காத்திருக்கிறது என்று நஜிப் ரசாக் இன்று கூறினார்.

அவர் செய்யப்போகும் அறிவிப்பு குடியேற்றக்காரர்களை திகைக்க வைக்கும் என்று அவர் கூறினார்.

“எவ்வளவு? இன்று அதை அறிவிக்க மாட்டேன். பொறுத்திருங்கள், அந்த அறிவிப்பைப் பின்னர் செய்வோம்”, என்று பெல்டா டிரியாங் 3, பெராவுக்கு அருகில் குழுமியிருந்த மக்களிடையே இன்று பேசும் போது அவர் கூறினார்.

அக்கூட்டத்தில் 10,000 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பகாங் மந்திரி புசாரும் ஒருவர்.

TAGS: