“பல முதுநிலை போலீஸ் அதிகாரிகள் கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் வேளையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படா விட்டால் மக்கள் என்ன முடிவுக்கு வருவார்கள்?”
போலீஸ்காரர் இட மாற்றங்களிலும் பதவி உயர்வுகளிலும் இரகசியக் கும்பல் தலைவன் கரங்கள்
பெண்டர்: அந்த விவகாரம் மீது பிரதமர் நஜிப் ரசாக் மௌனமாக இருப்பதும் பஞ்சாயத்து மன்றத்தை அமைக்க மறுப்பதும் அந்த போலீஸ் ஊழலில் அவரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.
தெங்கு கோ அத்தியாயத்தில் அவர் நேரடியாக சம்பந்தப்படாமல் இருக்கலாம். ஆனால் அவரிடமும் மறைப்பதற்கு நிறைய கறைகள் இருக்கின்றன என நான் பந்தயம் கட்ட முடியும்.
கனி, மூசா ஆகியோருக்கு எதிராக பஞ்சாயத்து மன்றம் அமைக்கப்பட்டால் அல்தான்துயா ஷாரிபு ஆவி உட்பட பல குப்பைகள் வெளியாகும்.
இந்த விவகாரத்தில் அவர் நடவடிக்கை எடுக்காதது அவரது செயல்களைக் காட்டிலும் பெரிதாகத் தோன்றுகிறது. நஜிப்புக்கு அனுதாபங்கள். வரும் தேர்தலில் நீங்கள் தோல்வி காண வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். அப்போது உங்கள் கறைகள் எல்லாம் வெளிச்சத்துக்கு வரும்.
அடையாளம் இல்லாதவன் _3f4a: மலேசியாகினி செய்தி யாருக்கும் வியப்பைத் தரவில்லை. காரணம் போலீஸ் திறமையான சட்ட அமலாக்க அமைப்பு அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்.
எதிர்க்கட்சிகள் அந்த போலீஸ் படை, நீதித் துறை, சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் , மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆகியவற்றை முழுமையாக சீரமைப்பதை தங்கள் தேர்தல் கொள்கை அறிக்கைகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அந்த அமைப்புக்கள் அம்னோவின் அரசியல் நலன்களுக்காக பல தசாப்தங்களாக சீரழிக்கப்பட்டு விட்டன. அதனால் மக்கள் நலன்களும் தேசிய நலன்களும் பாதிக்கப்பட்டன
நாம் அந்தச் செய்தியில் படித்த விஷயங்கள் அனைத்தும் அந்த சீரழிவின் விளைவே ஆகும். அதற்கு ஆளுமையின் தவறே காரணம்.
வேட்டைக்காரன்: “அந்தக் குற்றச்சாட்டுக்கலுக்கு ஆதாரம் தேவை,” என நஜிப் சொல்கிறார்.
பஞ்சாயத்து மன்றம் அதைத் தானே செய்ய வேண்டும். பஞ்சாயத்து மன்றம் அமைக்கப்பட்டால் பல குப்பைகள் வெளியாகி தமது கதவுக்கு அருகில் வந்து விடும் என்பது நஜிப்புக்கு நன்கு தெரியும். அதனால் அந்த மன்றம் அவரது ஆட்சியில் அமைக்கப்படப் போவதில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அரசாங்க மாற்றத்துக்காக காத்திருக்க வேண்டும். அப்போதுதான் நீதி கிடைக்கும். “எல்லோருக்கும் காலம் வரும்” என்ற முதுமொழியை நினைவில் கொள்ளுங்கள்.
விவேகமான வாக்காளர்கள்: நஜிப், அந்த விவகாரம் மீது நீங்கள் உடனடியாக பஞ்சாயத்து மன்றத்தை அமைக்கா விட்டால் நீங்கள் பயனற்ற பிரதமர்.
மூசாவுக்கும் கனிக்கும் தெரிந்த ஏதோ ஒன்றை நீங்கள் மறைக்க விரும்புவதாகவே பொது மக்கள் எண்ணுகின்றனர். அதனால்தான் பஞ்சாயத்து மன்றத்தை அமைக்கும் துணிச்சல் உங்களுக்கு இல்லையோ?
அந்த இருவருக்கும் எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மிகவும் கடுமையானவை. முன்னாள், இன்னாள் போலீஸ் அதிகாரிகள் அந்தக் குற்றச்சாட்டுக்களை பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர்.
ஆனால் இது நாள் வரை அவர்களுக்கு எதிராக அவதூறு வழக்குப் போட அந்த இருவருக்கும் துணிச்சல் இல்லை.
சத்தியப் பிரமாண வாக்குமூலங்கள் வழியாக அந்தக் குற்றச்சாடுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பஞ்சாயத்து மன்றம் அமைக்கப்பட்டால் சாட்சியமளிக்க அவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆகவே மூசா, கனிக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நீங்கள் கூறுவது போல ஆதாரம் இல்லாதவை அல்ல.
எது எப்படி இருந்தாலும் பஞ்சாயத்து மன்றம் அமைக்கப்படுவதின் நோக்கமே அந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மையானவையா இல்லையா என்பதைக் கண்டு பிடிப்பதற்குத்தானே. மூசாவும் கனியும் அந்த மன்றத்தில் சாட்சியமளிப்பதுடன் தங்கள் சாட்சிகளையும் கொண்டு வந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளலாமே?
ரூமா பாஞ்சாக்: இப்போது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ஆதாரங்கள் மூசாவையும் கனியையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தையும் சுட்டிக் காட்டுகின்றன. நாட்டின் தலைவர்கள் சரியானதை செய்வதற்கு மாமன்னர் பிரகடனம் ஒன்றை வெளியிட்டு மேலும் தவறுகள் செய்யப்படுவதிலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.