உங்கள் கருத்து: ‘ஒட்டுநரை மட்டுமல்ல, காரையும் மாற்றுங்கள்’

“ஓட்டுநர் அடிக்கடி திரும்பிக் கொண்டிருப்பதால் என் இலக்கை நான் அடையவே முடியாது. அதனால் புதியவரை சேர்ப்பது தான் நல்லது.”

பிரதமர்: பாதி வழியில் ஒட்டுநரை மாற்ற வேண்டாம்

பார்வையாளன்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சொல்கிறார்: “2011ம் ஆண்டு பதிவுகளின் படி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 852.7 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது. அதனால் அரசாங்கம் சுதந்திரத்துக்குப் பின்னர் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 185.4 பில்லியன் ரிங்கிட் அதிகமான வருமானத்தை அரசாங்கம் பெற முடிந்துள்ளது.”

இது எல்லா முதுநிலை அம்னோ புத்ராக்களுக்கும் அவர்களது சேவகர்களுக்கும் மிகவும் நல்ல செய்தியாகும். காரணம், மகாதீர் பாணியிலான சுயேச்சை மின் உற்பத்தி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட மோசடி ஒப்பந்தங்கள், என்எப்சி மாதிரியிலான கடன்கள், விலை உயர்த்தப்பட்ட பேச்சுக்கள் மூலம் பெறப்படும் குத்தகைகள், அதிக கையூட்டுக்களைக் கொண்ட கொள்முதல்கள், தேவையற்ற பெரிய தரகுப் பணத்துடன் கூடிய அதிக விலை கொண்ட இராணுவத் தளவாடங்கள் கொள்முதல் ஆகியவை போன்ற வழக்கமான வியூகங்கள் வழி இன்னும் அதிகமான பில்லியன் கணக்கான ரிங்கிட்டை உறிஞ்ச முடியும்.

கடந்த காலப் புள்ளி விவரங்களை கணக்கிட்டால் அந்த அம்னோ கொள்ளைக்காரர்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதியை விழுங்கியிருக்க வேண்டும். எனவே ஒர் ஆண்டில் மட்டும் 60 பில்லியன் ரிங்கிட்டை உறிஞ்சுவதற்கு அம்னோ புத்ராக்களும் அவர்களது சேவகர்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பிபி வின்: முன்னுக்குப் போகாமல் எப்போது பின்னுக்கு செல்லும் கியரையே போட்டுக் கொண்டிருக்கும் ஒட்டுநரால் எந்த நன்மையும் இல்லை.

முன்னாள் போலீஸ் படைத் தலைவரும் சட்டத் துறைத் தலைவரும் ரகசியக் கும்பல்களுடன் தொடர்பு வைத்திருந்தனர் எனக் கூறப்படுவதை, சாட்சியங்கள் கண் எதிரே இருந்தும் பார்க்க முடியாத ஒட்டுநரால் என்ன லாபம்?

கோமாளி: ஒட்டுநர் நான் செல்ல விரும்பும் இடத்துக்குக் கொண்டு செல்லா விட்டால் நான் உடனடியாக அவரை நீக்கி விடுவேன்.  ஓட்டுநர் அடிக்கடி திரும்பிக் கொண்டிருப்பதால் என் இலக்கை நான் அடையவே முடியாது. அதனால் புதியவரை சேர்ப்பதுதான் நல்லது.

புதிய ஒட்டுநர் தரகுப் பணமும் சம்பள உயர்வும் கேட்கப் போவதில்லை என்பதால் அவரை வைத்துக் கொள்வது மலிவாகவும் இருக்கும்.

அடையாளம் இல்லாதவன்_3f4a: நஜிப் அவர்களே, இப்போதைய பிரச்னை ஒட்டுநர் அல்ல. வாகனமே பிரச்னை. அந்த வாகனம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் சாலையில் ஒடிக் கொண்டிருக்கிறது. அது முன்னைக் காட்டிலும் மெதுவாகச் செல்கிறது.

அத்துடன் அந்த வாகனம் காலத்திற்கு ஒவ்வாத கடந்த காலத் தொழில் நுட்பத்தை பயன்படுத்துகிறது, அதன் எந்திரம் பாழடைந்து விட்டது. திறனும் குறைந்து விட்டது. ‘ஒட்டுநரை’ மாற்றுவதால் மட்டும் அந்த ‘வாகனத்தை’ நவீன மயமாக்கி விடாது, திறன் கூடாது.

மாப்பிள்சிராப்: அற்புதமான சொற்பொழிவுகள், உணர்வுகளைத் தூண்டும் சுலோகங்கள், திடீர் மீ திட்டங்கள் போன்றவற்றின் வழி நாட்டை நிர்வாகம் செய்ய முடியும் என்றால் அதற்கு நஜிப்பை விட நல்ல உதாரணம் இருக்க முடியாது.

உண்மையில் நாம் அலங்காரப் பேச்சுக்களுக்கு அப்பால் செல்ல வேண்டும். உண்மையான நடவடிக்கைகள் தேவை. எல்லாவற்றுக்கும் மேலாக மலேசியா ஊழலைத் துடைத்தொழிக்க வேண்டும்.

உயர்ந்த இடங்களிலும் கீழ் நிலைகளிலும் உள்ளவர்கள் பணத்தை உறிஞ்சும் போது அரசாங்கத்திற்கு வருமானம் கூடுவதால் எந்த நன்மையும் இல்லை.

கேஎஸ்டி: என்ன மாற்றம் இசா இன்னும் நடப்பில் இருக்கிறது அல்லது அது போன்ற புதிய சட்டம் கொண்டு வரப்படும். பேச்சுச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி முறை முழுக் குழப்பத்தில் மூழ்கியுள்ளது. சுதந்திரத்துக்குப் பின்னர் சமயப் பதற்ற நிலை மோசமடைந்துள்ளது. பொருளாதாரம் நிலை குலைந்துள்ளது. விலைகள் கட்டு மீறி உயர்ந்து கொண்டே இருக்கின்றன. பொதுப் போக்குவரத்து நகரவே இல்லை. மாடுகளில் கூட ஊழல் ஊடுருவி விட்டது. அந்த மாற்றங்கள் நமக்கு தேவையே இல்லை. அது இல்லாமல் நாம் வாழலாம்.

TAGS: