மத்திய கிழக்கு நாடான லிபியாவின் மேற்கு நகரமான ஸூவாராவில் நேற்று அரபு மற்றும் பழங்குடியினர் பிரிவுக்கு இடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 22 பேர் பலியானதாக லிபியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் போராட்டக்காரர்கள் 17 பேரும், பெண்கள் இருவர் உள்பட 22 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2011ம் வருடம் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக அந்நாட்டுத் தலைவர் கர்ணல் கடாபி கொல்லப்பட்டார். இந்நிலையில் மிக நீண்ட இடைவேளிக்கு பின்பு மீண்டும் கலவரம் வெடிக்கத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.