தேர்தல் சீர்திருத்தங்களா? இப்போதுள்ள தேர்தல் ஆணையத்தில் அவை நிச்சயம் நடக்காது

“வாக்காளர் பட்டியலை தூய்மை செய்வது ஒன்றும் மிகப் பெரிய பெரிய வேலை அல்ல. ஆனால் அதனைச் செய்ய இசி என்ற தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறதா?”

‘போலி வாக்காளர்கள்’ 13வது பொதுத் தேர்தல் முடிவை நிர்ணயம் செய்வர்

திறந்த உள்ளம்: தேர்தல் சீர்திருத்தங்கள் உண்மையில் மேலோட்டமாக மேற்கோள்ளப்படுகின்றன. இசி ‘ஆசீர்வாதத்துடன்’ வாக்குப் பேட்டிகளில் சேர்க்கப்படவிருக்கும் போலி வாக்குகள், அதிகாரப்பற்றற்ற வாக்குகளை அனுமதிக்கும் ஒட்டைகளை மூடுவதற்கு உருப்படியாக எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. 

அதனால் அடுத்த தேர்தல் இது வரை இல்லாத அளவுக்கு கறை படிந்ததாக இருக்கப் போகிறது. காரணம் ஆளும் கூட்டணி என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள  முயலுகிறது.

தேர்தல் ஆணையத் தலைவருடைய கருத்துக்களை வாசிக்கும் போது அவர் தனிப்பட்ட நோக்கத்துக்கு கீழ்ப்படியும் அரசாங்க ஊழியரைப் போன்று தோற்றமளிக்கிறார். பாகுபாடு காட்டாதவர் என்ற எண்ணமே நமக்கு வரவில்லை. கால ஒட்டத்தில் உண்மையும் நீதியும் வெளிச்சத்துக்கு வரும் என நாம் நம்புவோம்.

வேட்டைக்காரன்: சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் அரசாங்கத்தை நிர்ணயம் செய்யும் ஒரே நாடு நமது நாடாக மட்டுமே இருக்க முடியும்.

அடையாளம் இல்லாதவன்#90800716: ஒங் கியான் மிங், அது நன்கு எழுதப்பட்ட தெளிவான கட்டுரை.  சாதாரண மனிதருக்குக் கூட அது புரியும்.  வாக்காளர் பட்டியலை தூய்மை செய்வது ஒன்றும் மிகப் பெரிய பெரிய வேலை அல்ல. ஆனால் அதனைச் செய்ய இசி என்ற தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறதா ?

உங்கள் பின்னால்: தேர்தல் சீர்திருத்தம் மீது நமக்கு ஏன் பிஎஸ்சி (நாடாளுமன்றத் தேர்வுக் குழு) தேவை. நமக்கு ஒங் கியான் மிங் மட்டுமே தேவை.

பக்காத்தானும் மக்களுக்கு ஏதாவது ஒரு வழியில் அவருக்கு செலவுத் தொகையைக் கொடுக்க வேண்டும்.

அதே வேளையில் வாக்காளர் பட்டியலை சரி செய்வதற்கு ஒங் தலைமையில் பணிக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என பக்காத்தான் அரசாங்கத்துக்கு மனுக் கொடுக்க வேண்டும். அப்கோவுக்கு அரசாங்கம் பணம் செலுத்துவது போல அவருக்கும் அவரது ஆய்வுக் குழுவுக்கும் பணம் கொடுக்க வேண்டும்.

ஜீன் பியாரே: பெயர், பிறந்த நாள் தொடர்பில் போலி நுழைவுகளைக் கண்டு பிடிக்க 12 மில்லியன் பதிவுகளை அலசுவது   சிலர் எண்ணுவது போல பெரிய வேலையல்ல.

ஆய்வாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அது தெரியாது. தகவல் தொழில்நுட்பர்களை வேலைக்கு அமர்த்தினால் போதும்.

அர்மெகடோன்: அஞ்சல் வாக்குகளை ரத்துச் செய்வது தான் ஒரே வழி. ஆனால் அதனை பிஎன் அனுமதிக்கப் போவதில்லை. காரணம் அவை இல்லாவிட்டால் அது தோற்றுப் போகும். சரியானதைச் செய்வதற்கு இசி-க்கும் துணிச்சல் இல்லை.

பெர்ட் தான்: தங்களது பெயரை பயன்படுத்துவதற்கு அனுமதித்த அந்த மோசடிக்காரர்களை பக்காத்தான் வேட்டையாட வேண்டும்.

அவர்களுடைய சித்து வேலைகளுக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக பக்காத்தான் மருட்ட வேண்டும். அதனால் அவர்கள் மட்டுமின்றி அது போன்ற சிந்தனைகளைக் கொண்ட மற்றவர்களும் அஞ்சுவார்கள்.

TAGS: