“தங்கள் சொந்த மக்களுக்கு அவர்கள் இவ்வளவு செய்த பின்னரும் அவர்கள் தங்களைப் பற்றியே இன்னும் நினைத்துக் கொண்டிருப்பது அவர்களுடைய மன நிலையைக் காட்டுகிறது.”
சாமிவேலு: டாக்டர் மகாதீர் என்னைத் தோல்வி காணச் செய்தார்
கோபாலன்: “அது அவரைக் காயப்படுத்தியிருந்தாலும் தாம் இன்னும் மகாதீரை மதிப்பதாகவும் அவருடன் பணியாற்றிய 22 ஆண்டுகள் தமக்கு “மிகுந்த அனுபவத்தை” தந்ததாகவும் அந்த முன்னாள் மஇகா தலைவர் சாமிவேலு கூறுகிறார்”
அவருடைய இரட்டை வேடத்தை நம்புகின்றீர்களா? சாமிவேலு டாக்டர் மகாதீருக்கு எதிராகப் போக முடியாது. காரணம் அந்த மனிதருடைய குளறுபடிகள் மீது தடித்த கோப்புக்களை டாக்டர் வைத்திருக்க வேண்டும். ஐபிஎப் என்ற இந்தியர் முன்னேற்றக் கட்சி தொடர்பான கருத்து வேறுபாடு காரணம் என்பதை நான் நம்பவில்லை.
சாங் கஞ்சில்: கடந்த தேர்தலில் சாமிவேலு வீழ்ச்சி கண்டதற்கு அவரது ஆணவமே காரணம். இராணுவமே வந்தாலும் தம்மைத் தோற்கடிக்க முடியாது என சாமிவேலு சொன்னது உங்களுக்கு நினைவில் உள்ளதா? மகாதீர் வேண்டுமானால் சிறிய பங்கை ஆற்றியிருக்கலாம். ஆனால் சாமிவேலு மக்கள் சக்தியை மறந்து விட்டார்.
அவர் ஹிண்ட்ராப்பின் பங்கை அங்கீகரிக்க மறுக்கிறார். இப்போது நஜிப் பெர்சே சக்தியை குறைவாக மதிப்பிடுகிறார்.
கேஎஸ்என்: சாமிவேலு தமது வாழ்நாளில் பல அபத்தமான விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். ஆனால் இது பொருத்தமானதாகத் தெரிகிறது.
என்றாலும் அவர் சொல்லும் காரணம் முட்டாள்தனமாக இருக்கிறது. அந்த 100 பில்லியன் ரிங்கிட் மனிதருடன் மஇகா தலைவர் என்ற முறையிலும் அமைச்சர் என்ற முறையிலும் அவர் பொதி தூக்கிய ஆண்டுகளில் அவர் இந்தியர்களுக்கு செய்த துரோகமே தேர்தலில் அவருடைய வீழ்ச்சிக்கும் மஇகா-வின் சரிவுக்கும் வித்திட்டு விட்டது.
நமது வரலாற்றில் தாம் நீண்ட காலத்துக்கு இந்தியர்களுக்குத் துரோகம் இழைத்ததை ஒப்புக் கொள்வதற்கு அவருக்குச் சிரமமாக இருக்கிறது.
அந்த 100 பில்லியன் ரிங்கிட் மனிதர் சொன்னதால் மலாய்க்காரரகள் அவரை கை விட்டு விட்டதாகச் சொல்வது உண்மையாக இருக்க முடியாது. இந்தியர்களுக்கு சாமிவேலு செய்த குற்றங்கள் பற்றி இந்தியர்கள் மட்டுமின்றி மலாய்க்காரர்களும் அறியச் செய்தது ஹிண்ட்ராப் ஆகும்.
செல்லாத வாக்குகளும் மலாய்க்காரர்கள் அவருக்கு அவருக்கு வாக்களிக்காததும் காரணம் எனச் சொல்வது முற்றிலும் அபத்தமானது. சுங்கை சிப்புட்டில் அவரை இனியும் சகித்துக் கொள்ள முடியாத அவருடைய ஆதரவாளர்கள் அந்த செல்லாத வாக்குகளை போட்டிருக்க வேண்டும்.
நடப்பு மஇகா பற்றிய அவருடைய கருத்துக்கள் பற்றி, அது “காலமான’ நடப்பு நிலையில் அதனை விட்டுச் சென்றது அவரே.
டாக்டர் சுரேஷ் குமார்: சுங்கை சிப்புட்டில் அவர் தோல்வி கண்டதற்கு மகாதீர் பொறுப்பு என வைத்துக் கொண்டால் 2008ல் மற்ற மஇகா வேட்பாளர்களும் படு தோல்வி அடைந்தததை சாமிவேலு எப்படி விளக்கப் போகிறார்?
சாமிவேலு அவர்களே, தயவு செய்து உங்களையே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். ஹிண்ட்ராப் அம்சம் இல்லை என்றால் உங்களை வெளியேற்றியிருக்கவே முடியாது. இணைய, கைத் தொலைபேசி தொடர்புகள் பரவலாக இருந்தாலும் ஒரங்கட்டப்பட்ட இந்தியர்களுடைய அவலம் குறித்து இன்னும் பலர் அறியாமல் இருக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் முக்கிய நாளேடுகளையும் தமிழ் அச்சு ஊடகங்களையும் பயன்படுத்தி இந்தியர்களை ஏமாற்றுவதற்கு இந்திய சமூகத்தில் எல்லாம் நன்றாக உள்ளது என்ற பொய்களைப் பரப்பினீர்கள்.
ஹிண்ட்ராப்புக்குள் நிலவும் உட்பூசலைப் பயன்படுத்தி அதனை உடைக்கலாம் என நீங்கள் எண்ணினால் அது முட்டாள்தனமாகவே இருக்கும். ஹிண்ட்ராப்பும் உதயகுமாரும் முற்றிலும் வேறு வகையான வளர்ப்புக்கள்.
பூன்பாவ்: அந்த இன/வம்சாவளித் தரகர்கள்- அல்லது நீங்கள் அவர்களை இன/வம்சாவளித் தொழில் முனவைர்கள் என்று கூட அழைக்கலாம்- தங்கள் சொந்தத் தவறுகளை ஒரு போதும் உணருவதே இல்லை.
இன அட்டையைப் பயன்படுத்தி மிகுந்த செல்வத்தை சேர்த்து விட்ட அவர்கள் தங்கள் சொந்த இனம் என அழைத்துக் கொள்ளும் இனத்தின் தியாகிகள் என இன்னும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். தங்கள் சொந்த மக்களுக்கு அவர்கள் இவ்வளவு செய்த பின்னரும் அவர்கள் தங்களைப் பற்றியே இன்னும் நினைத்துக் கொண்டிருப்பது அவர்களுடைய மன நிலையைக் காட்டுகிறது.