“அனுமதி கொடுப்பது உங்களைப் பொறுத்தது அல்ல. உங்கள் அனுமதி எங்களுக்குத் தேவை இல்லை. மக்கள் என்ன செய்ய வேண்டும் செய்யக் கூடாது என்பதைச் சொல்வதற்கு நீங்கள் யார் ?”
பெர்சே 3.0க்கு உள்துறை அமைச்சர் ஒப்புதல் அளிக்கிறார் ஆனால்…
குவிக்னோபாண்ட்: இது தான் அடிப்படை- அவர்கள் மெர்தேக்கா சதுக்கத்தில் பெர்சே 3.0ஐ அனுமதிக்கப் போவதில்லை. மலேசியர்கள் அதனை மீறினால் இன்னொரு பலப் பரீட்சை.
உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் எப்போது தான் பாடம் கற்றுக் கொள்வார் ? அமைதியாக ஒன்று கூடும் சட்டத்துக்கு முன்பு தான் நாம் கூட்டம் போடுவதற்கு போலீஸ் சட்டத்தின் கீழ் போலீசாரிடமிருந்து அனுமதி பெற வேண்டியிருந்தது என்பதே இங்குள்ள பிரச்னை.
எந்த அனுமதியையும் கொடுக்கப் போவதில்லை என்பதில் போலீஸ் உறுதியாக இருந்தது. அதனால் சிவில் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது. இப்போது ஏன் அது வேறு விதமாக இருக்க வேண்டும் ?
அமைதியாக ஒன்று கூடும் சட்டமே அரசமைப்புக்கு முரணானது. ஏனெனில் அது ஊர்வலங்களைச் சட்ட விரோதமாக்குகிறது. பிஎன்-னுக்குப் பாதகமாக இருக்கும் எனக் கருதப்படுவதால் சட்டப்பூர்வமான இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
அரசமைப்புக்கு முரணான சட்டத்துக்கு மலேசியர்கள் அடிபணியப் போவதில்லை. அதுவும் நியாயமான, தூய்மையான தேர்தல்கள் என்ற முக்கியமான விஷயத்தில் அவர்கள் விட்டுக் கொடுக்கப் போவதில்லை.
நாங்கள் பிஎன் வீழ்ச்சி அடைய வேண்டும் என தேவை இல்லாமல் விரும்பவில்லை. சமமான ஆட்டக் களத்தில் பிஎன் வெற்றி பெறுவதை உறுதி செய்யவே நாங்கள் விரும்புகிறோம். இல்லை என்றால் ஆள்வதற்கு பிஎன்-னுக்கு பூஜ்யம் சட்டப்பூர்வத் தகுதி கூடக் கிடையாது.
நாங்கள் சொல்வது அதிகமாக இல்லை என நான் நம்புகிறேன்.
மூன்றாம் படை: பெர்சே 3.0 அரசாங்கத்தை இக்கட்டான சூழ்நிலையில் வைத்துள்ளது. அவர்கள் எளிதாக அதனை அதுவும் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தும் பிரச்சாரம், பில்லியன் கணக்கான ரிங்கிட் செலவு ஆகியவற்றுக்குப் பின்னர் நிச்சயம் விடப் போவதில்லை என நீங்கள் உறுதியாக நம்பலாம்.
மாட் மலேசியா: ஹிஷாம் உங்களுக்கு இன்னும் விளங்கவே இல்லை. அனுமதி கொடுப்பது உங்களைப் பொறுத்தது அல்ல. உங்கள் அனுமதி எங்களுக்குத் தேவை இல்லை. மக்கள் என்ன செய்ய வேண்டும் செய்யக் கூடாது என்பதைச் சொல்வதற்கு நீங்கள் யார் ?
நீங்கள் மக்களுடைய ஊழியர். மெர்தேக்கா சதுக்கம் பொது இடம். அது அம்னோவின் கொல்லையல்ல. (backyard) அது மக்களுக்குச் சொந்தமானது. உங்களுடையது அல்ல. உங்களது முட்டாள்தனமான கருத்துக்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
கைரோ: அரசாங்கம் பெர்சே 2.0 விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி விட்டது. தங்களது தன்மூப்பான தந்திரங்கள் வழி அதனை அவர்கள் அதனை மீண்டும் செய்ய மாட்டார்கள் என நம்புவோம்.
பெர்சே 3.0 பொருத்தமான நேரத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது. காரணம் இது தேர்தல் நேரம். ஏப்ரல் 28 பேரணியில் எல்லா இனங்களையும் சமயங்களையும் சார்ந்த மலேசியர்கள் முழுமையாகக் கலந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதை உலகம் கவனித்துக் கொண்டிருக்கிறது.
அவர்கள் இந்த முறையும் குழப்பத்தை ஏற்படுத்தினால் இங்கிலாந்து அரசியார் பச்சை நிற ஆடையை அணிந்திருப்பார்.
அப்பும்: ஹிஷாமுடின், பெர்சே 3.0க்கு தடைகள் விதிக்காமால் பெர்சே 3.0 ஆர்ப்பாட்டக்காரர்கள் மெர்தேக்கா சதுக்கத்தை பயன்படுத்துவதை மறுக்காமல் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
தேர்தல் சீர்திருத்தங்களை அந்தப் பேரணி நோக்கமாகக் கொண்டுள்ளது. வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவது அதில் மிகவும் முக்கியமானது.
அந்தப் பேரணியோடு எல்லாம் முடியப் போவதில்லை. இன்னும் எஞ்சியுள்ள தேர்தல் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
பெர்ட் தான்: எச்சரிக்கை தேவை. பெர்சே 3.0க்கு ஹிஷாமுடின் அனுமதி கொடுக்கிறார். ஏனெனில் பெர்சே 2.0ஐ அவர்கள் கையாண்ட விதம் அவர்களுடைய தோற்றத்தைப் பாதித்து விட்டது. அதனால் இந்த முறை அவர்கள் எதுவும் செய்ய முடியாது.
போலீசார் கோலாலம்பூரில் உள்ள மெர்தேக்கா சதுக்கத்துக்குப் பதில் மூடப்பட்ட உள் அரங்கில் தான் அது நிகழ வேண்டும் என கூறுவர்.
போலீசார் கொடுக்க முன் வரும் வேறு இடத்தை பெர்சே நிராகரிக்கும். அதனால் பெர்சே பிடிவாதமாக இருப்பதாக முக்கிய நாளேடுகளில் செய்திகளை வெளியிட்டு பெர்சே-க்கு அவப்பெயரை ஏற்படுத்த அவர்கள் முயலுவர்.
மெர்தேக்கா சதுக்கம். அதில் விட்டுக் கொடுக்கக் கூடாது. போலீசார் தந்திரங்கள் ஏதும் செய்யாமல் இருந்தால் அவர்களுக்கு முன் கூட்டியே நன்றி கூறுகிறேன். அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை காண நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்.
அடையாளம் இல்லாதவன்#58458950: ஏப்ரல் 28ம் தேதி மலேசியர்களுக்கு எந்த இடமும் தேவை இல்லை. அன்றைய தினம் தூய்மையான சுதந்திரமான தேர்தல்களை விரும்பும் அனைவரும் பச்சை அல்லது மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து தங்களது அன்றாட வேலைகளைச் செய்ய வேண்டும். அவர்கள் பேரங்காடிகளுக்கு சந்தைக் கூடங்களுக்கு அல்லது கடைத் தொகுதிகளுக்குச் செல்லலாம்.
பின்னர் அவர்கள் பூமலை, தித்தி வாங்சா, மெர்தேக்கா சதுக்கம் போன்ற பூங்காங்களுக்குப் போகலாம். அங்குள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். தூய்மையான காற்றையும் சுவாசிக்கலாம்.
நாம் அன்றைய தினம் அலுவலகங்களிலிருந்தும் வீடுகளிலிருந்தும் வெளியில் சென்றால் போதும்.
ஆர்ப்பாட்டங்களோ ஊர்வலங்களோ தேவை இல்லை. அமைதியான எதிர்ப்பு நமது விருப்பதை வெளிப்படுத்தி விடும்.
அனோன்xyz: என் வார்த்தைகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்- ஏப்ரல் 28ம் தேதி மெர்தேக்கா சதுக்கத்தில் பெர்க்காசா அற நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அரச மலேசியப் போலீஸ் படை அனுமதி கொடுக்கும்.