தேசியநித்தனைச் சட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என்று அறிவித்துள்ள பிரதமர் நஜிப்பின் நேர்மையை நிருபீக்க தமக்கு எதிரான தேசநிந்தனை குற்றச்சாட்டை கை விடுமாறு இண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் சவால் விட்டுள்ளார்.
ஏப்ரல் 17 ஆம் தேதி இட்டுள்ள இது சம்பந்தமான கடிதம் ஒன்றை பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தின் நகல் பிரதமர்துறை அமைச்சர் முகமட் நஸ்ரிக்கும் சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேயிலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
உதயகுமாரின் சார்பில் அவரது வழக்குரைஞர்கள் பிரதமர் அறிவித்துள்ள சட்ட மறு ஆய்வு (தேசநிந்தனைச் சட்டம்) அடிப்படையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கை விடப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், இசா சட்டத்தின் கீழ் உதயகுமார் தடுப்புக்காவலில் ஒன்றரை ஆண்டுகாலத்திற்கு வைக்கப்பட்டதன் மூலம் தண்டிக்கப்பட்டு விட்டார் என்றும் வழக்கறிஞர்கள் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.