வங்கதேசத்தில் எதிர்கட்சித் தலைவர் மாயம்!

வங்க தேசத்தில் எதிர்கட்சி தலைவர் மாயமானதை தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது.

வங்க தேசத்தின் வடமேற்கு பகுதியில் செல்வாக்கு மிகுந்த கட்சியாக உள்ளது வங்கதேச தேசியவாத கட்சி். இக்கட்சியின் தலைவராக இருப்பவர் இலியாஸ் அலி. இவர் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இலியாஸ்அலியை பல்வேறு பகுதிகளிலும் போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை டாக்கா அருகே அலியின் காரை கண்டுபிடித்தனர். மேலும் அவருடைய கார் டிரைவர் காணாமல் போயுள்ளது குறித்தும் கண்டறிந்தனர்.

இந்நிலையில் ஆளும் கட்சி அலியின் வழக்கில் மெத்தனமாக இருப்பதாக கூறி அலியின் கட்சி தொண்டர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தை கலைப்பதற்காக வங்க தேச போலீசார் ரப்பர் வெடிகுண்டு மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி முன்னதாக கூட்டத்தை கலைத்தனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.