“பெர்சே 2.0 பேரணியில் பங்கு கொள்ளாதவர்கள் வரலாற்று திருப்பு முனையாக அமையப் போகும் இந்தப் பேரணியில் கலந்து கொள்வர் என நம்புவோம்.”
சனிக்கிழமை பெர்சே போராட்டத்தை போலீஸ் “அனுமதிக்காது”
வெறுப்படைந்தவன்: ஆகவே பெர்சே 2.0க்கு நிகழ்ந்ததைப் போல மீண்டும் கோலாலம்பூரை சுற்றிலும் தடுப்புக்களைப் போடுங்கள். நீரைப் பாய்ச்சும் கருவிகளையும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசும் கருவிகளையும் கொண்டு வாருங்கள். பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட இழப்புக்கு பெர்சே மீது பழி போடுங்கள். கோலாலம்பூர் வர்த்தகர்களுக்குச் சிரமங்களை ஏற்படுத்தியதாகச் சொல்லுங்கள். எல்லா மருட்டல்களையும் முடுக்கி விடுங்கள்.
இனிமேல் மக்களை மருட்டவும் முடியாது. அச்சுறுத்தவும் முடியாது என்பதை பிஎன் ஒரு போதும் உணராது எனத் தோன்றுகிறது.
மக்கள் சக்தியைக் காட்ட நாம் கோலாலம்பூரில் வெள்ளம் போல ஒன்று கூடுவோம். நாம் சொல்வதைச் செய்வோம் என்பதை அதற்கு உணர்த்துவோம். பெர்சே 2.0 பேரணியில் பங்கு கொள்ளாதவர்கள் வரலாற்று திருப்பு முனையாக அமையப் போகும் இந்தப் பேரணியில் கலந்து கொள்வர் என நம்புவோம்.
பெர்சே மாமி போன்ற மூத்த குடி மக்களும் அதில் கலந்து கொண்டு பிஎன் ஆட்சி மீது அவர்களும் வெறுப்படைந்து விட்டனர் என்பதை அதற்கு தெரிவிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் இளைய தலைமுறையினரை மூளைச் சலவை செய்து விட்டதாக பிஎன் எப்போதும் கூறி வந்துள்ளது.
இந்த முறை மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், சுதேசிகள், ஏழைகள், பணக்காரர்கள் என அனைத்து மக்களும் பேரணியில் பங்கு கொள்ள வேண்டும்.
அடையாளம் இல்லாதவன்_VV: மெர்தேக்கா சதுக்கத்தில் பெர்சே 3.0 நடைபெற அனுமதிக்காததற்கு டிபிகேஎல் தெரிவிக்கும் காரணங்கள் அபத்தமானது. அது அதற்கு மாறாக அதனை ஏற்றுக் கொண்டு உதவி செய்திருக்க வேண்டும்.
அது போக்குவரத்தை கட்டுப்படுத்தலாம். மக்கள் சீராக நடந்து செல்வதை உறுதி செய்யலாம். உணவுப் பொருட்களையும் சுவைபானங்களையும் விற்குமாறு வணிகர்களுக்கு ஊக்கமூட்டி அந்த நிகழ்வை ஒரு விழாவாக மாற்றலாம்.
மாமி தஞ்சோங்: மலேசியா போலீஸ் நாடாகி விட்டது. பொம்மை நீதி மன்றங்களும் கடைசி நேரத்தில் சட்டங்களை நிறைவேற்றும் அரை வேக்காடு நாடாளுமன்றமும் இங்கே இயங்குகின்றன.
பெர்சே 3.0ஐ இந்த ஆட்சி ஏன் சுற்றலில் விடுகிறது என்பதற்கான காரணங்கள் வெள்ளிடைமலை.
நாம் நாகரிகமான முறையில் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளோம். ஆனால் மறுக்கப்பட்டுள்ளது.
ஆகவே மெர்தேக்கா சதுக்கத்தில் அமைதியாக ஒன்று கூட பெர்சே 3.0 உறுதி பூண வேண்டும்.
500,000 ஆர்ப்பாட்டக்காரர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க போலீஸ் எண்ணியுள்ளதா? மக்களைக் கண்டு அஞ்சுவதால்தான் அவர்கள் அமைதியான பேரணியைக் கூடக் கட்டுப்படுத்த விரும்புகின்றனர்.
அவதார்: தடையைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அவ்வாறு செய்யாவிட்டால் நாடகக் காட்சிகள் அரங்கேற மாட்டா. நாடகக் காட்சிகள் இருந்தால் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்வர்.
அடையாளம் இல்லாதவன் #58458950: சனிக்கிழமையன்று எல்லா மலேசியர்களும் மஞ்சள் நிற ஆடையை அணிய வேண்டும். மெர்தேக்கா சதுக்கத்தில் மட்டும் அல்ல. சந்தைக் கூடங்கள், பேரங்காடிகள், சினிமா அரங்குகள் ஆகிய எல்லா இடங்களுக்கு மஞ்சள் ஆடையை அணிந்து செல்ல வேண்டும். பெர்சே போராட்டத்துக்கு ஒருமைப்பாட்டைக் காட்டுவதாக அது அமையும்.