சந்திக்கும் இடங்களில் காணப்படும் நிலவரங்கள்

வழக்குரைஞர் மன்றக் கட்டிடத்துக்கு முன்பு ஜாலான் லெபோ புசாரில் அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புக்கு முன்பு மஞ்சள் நிற உடை அணிந்திருந்த 40 பேர் முகாமிட்டுள்ளனர். அவர்கள் முள்வேலிகளிலும் சாலைத் தடுப்புக்களிலும் பெர்சே, லினாஸ் எதிர்ப்பு, டத்தாரானை ஆக்கிரமிப்போம் ஆகிய இயக்கங்களின் பதாதைகளைப் போர்த்தியுள்ளனர்.

ஜாலான் பார்லிமெண்ட்டுக்குச் செல்லும் ஜாலான் டூத்தா சாலையில் போலீசார் சாலைத் தடுப்புக்களை அமைத்துள்ளனர். ஜாலான் பார்லிமெண்ட்டுக்குள் நுழைவதற்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.

எம்ஆர்ஆர் 1 சுற்று வட்டச் சாலையிலும் ஜாலான் சுல்தான் சலாஹுடினிலும் போலீசார் சாலைத் தடுப்புக்களை அமைத்துள்ளனர்.

அந்த சாலை வழியாக எந்த வாகனமும் நகர மய்யத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

சோகோ கடைத் தொகுதிக்கு அருகில் சாலைச் சந்திப்பு மூடப்பட்டுள்ளது. டத்தாரான் மெர்தேக்காவுக்குச் செல்லும் முக்கியச் சாலையான ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் மூடப்பட்டுள்ளது. அது வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. அந்தப் பகுதியில் 150 போலீஸ்காரர்களும் இரண்டு போலீஸ் வாகனங்களும் காணப்படுகின்றனர்.

பாசார் செனியில் மஞ்சள் ஆடையுடன் பலர் காணப்படுகின்றனர்.  அங்குள்ள கடைத் தொகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள்  நிறுத்தப்பட்டுள்ளனர்.

கேஎல்சிசி-யில் நூற்றுக்கும் மேற்பட்ட ஹிம்புனான் ஹிஜாவ் 3.0 ஆதரவாளர்கள் காணப்படுகின்றனர். அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக மஸ்ஜித் ஜமெய்க்-கிற்கு செல்ல எண்ணியுள்ளனர். அங்கு சீருடை அணிந்த 150 போலீஸ்காரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சைனா டவுன் அமைந்துள்ள ஜாலான் பெட்டாலிங் பகுதியிலும் 300க்கும் மேற்பட்ட பெர்சே ஆதரவாளர்கள் காணப்படுகின்றனர்.