ஜோகூரில் 3,000க்கும் மேற்பட்டவர்கள் கூடினர்

ஜோகூர் பாருவில் உள்ள டத்தாரான் பண்டாராயாவில் குந்தியிருப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ள மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பெர்சே ஆதரவாளர்கள் திரண்டனர்.

கூட்டத்தினர் “Rakyat Melayu Rakyat Malaysia, Rakyat Cina Rakyat Malaysia, Rakyat India, Rakyat Malaysia,” என முழங்கினர்.

அதே வேளையில் டத்தாரான் பண்டாராயாவிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோகூர்பாரு Waterfront பகுதியில் உள்ள கடைத் தொகுதி ஒன்றில் சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்களும் பேரணியை நடத்தினர்.

சிங்கப்பூரில் குந்தியிருப்பு போராட்டத்தை நடத்துவதற்கு  அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் ஜோகூர் பாருவில் போராட்டத்தை நடத்தினர்.

கோத்தா கினாபாலுவிலும் பிறபகல் 2.00 மணியிலிருந்து தீவிரமான போலீஸ் கண்காணிப்புக்கு இடையில் பாடாங் மெர்தேக்காவில் 500க்கும் மேற்பட்டவர்கள் கூடியுள்ளனர்.

அப்போது போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று வானில் பறந்து கொண்டிருந்தது. சாலைத் தடுப்புக்களும் போடப்பட்டிருந்தன.