நஜிப்- ஒரு பில்லியன் டாலர் மனிதர்

“இதனை ஒப்பு நோக்கினால் 250 மில்லியன் ரிங்கிட் மாட்டு ஊழலில் ஒன்றுமே இல்லை. நஜிப் ஏன் ஷாரிஸாட்டை மன்னிக்கிறார் என்பது இப்போது தான் தெரிகிறது.”

பிரஞ்சு வழக்குரைஞர்கள்: நஜிப் பெரிமெக்காருக்காக ஒரு பில்லியன் டாலர் கோரினார்

ஜோ லீ: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு பில்லியன் டாலர் மனிதர். அம்னோவில் ஒட்டிக் கொண்டிருக்கும் மக்கள் பற்றி பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறும் வருணனைக்கு இது புது அர்த்தத்தைக் கொடுத்துள்ளது.

இதனை ஒப்பு நோக்கினால் 250 மில்லியன் ரிங்கிட் மாட்டு ஊழலில் ஒன்றுமே இல்லை. நஜிப் ஏன் ஷாரிஸாட்டை மன்னிக்கிறார் என்பது இப்போது தான் தெரிகிறது. மற்றவர்களும் அதனைச் செய்வதால்

தமக்கு இது சரிதான் என அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் கூறியதின் பொருள் இப்போதுதான் விளங்குகிறது.

இப்போதும் கூட பல ஊமை மலேசியர்கள் 500 ரிங்கிட் கொடுத்ததற்காக நஜிப்புக்கு வாக்களிக்கப் போகின்றனர். அவர்களுக்கு புத்தி சொல்ல பெர்சே 3.1 நமக்குத் தேவை?

அம்னோவில் ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த அரசியல்வாதிகளை ஜெயிலில் போடுங்கள். அவர்கள் இல்லாமல் ஒரே மலேசியாவைச் சாதித்து விட முடியும்.

கைரோஸ்: நஜிப்பின் வேடம் கலைகிறது. பிரஞ்சு நீதிமன்றங்களில் தில்லுமுல்லு ஏதும் நிகழாவிட்டால் நமது அப்போதைய தற்காப்பு அமைச்சருக்கும் ஸ்கார்ப்பியோன் ரக நீர்மூழ்கிகள் வாங்கப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட ஊழலுக்கும் நிச்சயம் தொடர்பு இருக்க வேண்டும்.

எங்காவது ஒர் இடத்தில் பிரதமருக்கும் மங்கோலிய மாதுவுக்கும் இடையில் பிணைப்பு இருக்க வேண்டும்.

நஜிப் என்ன சொன்னாலும் உண்மை வெளிச்சத்துக்கு வந்து விடும். இதுதான் சரியான தருணம். இறைவனுக்கும் கண்கள் உண்டு.

லவர் பாய்: இரண்டு ரசாக்குகளும்- நஜிப்பும் பகிந்தாவும் தேசியப் பள்ளிவாசலுக்குச் சென்று தாங்கள் ஸ்கார்ப்பியோன் ஊழலில் சம்பந்தப்படவில்லை என திருக்குர் ஆன் மீது சத்தியம் செய்வதற்கான நேரம் வந்து விட்டது.

இந்த முறை சத்தியம் செய்யும் போது அந்தச் சடங்கைப் பார்வையிட தயவு செய்து பிரஞ்சுத் தூதரை    அழையுங்கள். அவர் அந்த இரண்டு ரசாக்குகளும் கடவுளுக்கு பயந்த கௌரவமும் நேர்மையும் நிறைந்த மனிதர்கள் என அவர் அப்போதுதான் பிரஞ்சு நீதிமன்றத்துக்குத் தகவல் கொடுக்க முடியும்.

திமோத்தி: ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்! அனைத்து ஊழல்களுக்கும் அன்னையாக திகழக் கூடிய விஷயம் அம்பலமாகியுள்ளது.

மக்களுக்கு 100 ரிங்கிட், 300 ரிங்கிட் அல்லது 500 ரிங்கிட் அதுவும் நீங்கள் அவருக்கு உதவினால் மட்டுமே கிடைக்கும்.

ஜிம்மி இங்: சுவாராமின் சிந்தியா கேப்ரியல், மலேசிய மக்கள் உங்களுக்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளனர். அதனைத் திருப்பிச் செலுத்துவது என்பது முடியாது.

நீங்கள் உண்மையில் நாட்டுப் பற்றுடையவர். நமது வரலாற்றில் நீங்கள் நிச்சயம் இடம் பெறுவீர்கள். காரணம் ஸ்கார்ப்பியோன் பேரத்துக்கு பின்னணியில் உள்ள உண்மைகளை  வெளிச்சத்துக்குக் கொண்டு வர அரசாங்கத்தையே நீங்கள் எதிர்த்துப் போராடுகின்றீர்கள்.

 

TAGS: