சாதாரண உப்பு, தண்ணீர் போத்தல்களைக் கொண்டு ஒரு புரட்சியா?

“எதிர்பார்க்கப்பட்ட கண்ணீர்ப் புகைக் குண்டுகள், இரசாயனம் கலந்த நீர், கொளுத்தும் வெயில் ஆகியவற்றை சமாளிப்பதற்குத் தேவையானதை மட்டுமே அவர்கள் கொண்டு வந்தனர்.”

‘புரட்சி முயற்சிக்கு’ எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று முன்னாள் ஐஜிபி-க்கள் விருப்பம்

விசுவாசமான மலேசியன்: நான் இங்கு ஒர் உள் நோக்கத்தைக் காண்கிறேன். இன்னும் உயிருடன் இருக்கும் முன்னாள் சர்வாதிகாரி ஒருவர் நடத்திய லாலாங் நடவடிக்கைக்கு முன்னோடியாக இருந்ததை நினைத்துப் பாருங்கள்.

தங்களது முறைகேடான ஆட்சியை எதிர்க்கின்றவர்களை ஜெயிலில் அடைப்பதற்கு அம்னோ புத்ராக்கள் தங்களது அதிகாரங்களைப் பயன்படுத்த முயலுகின்றனர்.

நிச்சயம் அதில் பெர்சே கூட்டுத் தலைவர்களான அம்பிகா ஸ்ரீனிவாசனும் ஏ சமாட் சையட்டும் மற்ற பெர்சே நடவடிக்கை குழு உறுப்பினர்களும் இருப்பார்கள்.

உண்மையில் பெர்சே 3.0 அவர்களுடைய நாடி நரம்புகளை உலுக்கி விட்டது. அவர்களுடைய தேர்தல் தில்லுமுல்லுகளில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வெறுப்படைந்து விட்டனர்.

தேர்தல் சீர்திருத்தங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தெளிவான வலுவான குரலுக்கு செவி சாய்ப்பது அவர்களது ஆட்சிக்கு மரண ஒலையில் கையெழுத்திடுவதற்கு ஒப்பாகும்.

பக்காத்தான் தலைவர்கள் அவசரத் திட்டங்களை தயாரித்திருப்பர் என நான் நம்புகிறேன்.

பெர்ட் தான்: “பிரதமர் எதனையும் சாதாரணமாக சொல்ல முடியாது என்பதால் ஒர் அடிப்படை இருக்க வேண்டும்” என அந்த மூன்று முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர்களும் அறிக்கை விடுத்துள்ளனர்.

மக்களிடமிருந்து அனுதாபத்தைப் பெறுவதற்கான அன்வார் இப்ராஹிம் தனது கண்ணைத் தானே குத்திக் கொண்டு கருமையாக்கிக் கொண்டதாக டாக்டர் மகாதீர் முகமட் நிருபர்கள் கூட்டத்தில் சொன்னதை அவர்கள் மறந்து விட்டார்களா ?

Anonyxyz: அந்த முன்னாள் போலீஸ் தலைவர்களில் ஒருவர் கெந்திங் (மலேசியாவில் மிகப் பெரிய சூதாட்ட மய்யம்) இயக்குநர்கள் வாரியத்தில் ஒர் உறுப்பினர். இன்னொருவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த அன்வார் இப்ராஹிமின் கண்ணைக் குத்தி கருமையாக்கியவர். மூன்றாவது நபர் இந்த நாட்டில் குண்டர் கும்பல்களுடன் தொடர்பு உடையவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை விட வேறு என்ன வேண்டும் ?

கறுப்பு மம்பா: என்ன புரட்சி ? எதிர்பார்க்கப்பட்ட கண்ணீர்ப் புகைக் குண்டுகள், இரசாயனம் கலந்த நீர், கொளுத்தும் வெயில் ஆகியவற்றை சமாளிப்பதற்குத் தேவையான உப்பு, கைக்குட்டைகள், தொப்பிகள், தண்ணீர் போத்தல்கள் ஆகியவற்றை மட்டுமே அவர்கள் கொண்டு வந்தனர்.

IloveBN: எனக்கு வயது 52. நான் என் வாழ்க்கையில் எத்தனையோ அபத்தமான விஷயங்களைக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அந்த மூன்று முன்னாள் ஐஜிபி-க்களும் கூறியுள்ள கருத்துக்கள் அவற்றை மிஞ்சி விட்டன.

அவர்கள் ஏன் பிரதமருக்கு ஆதரவாகப் பேச வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ஏதோ தவறு செய்திருக்க வேண்டும். தங்களது இறுதி மூச்சு வரை பாதுகாப்பு கிடைக்கப் பிரதமர் பதவியில் இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புவதாகவே நான் எண்ணுகிறேன்.

மலேசியா ஜனநாயக நாடு. தங்கள் தலைவராக யார் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது மக்களைச் சார்ந்ததாகும்.

பெர்சே பங்கேற்பாளன்: எல்லாத் துண்டுகளும் ஒன்றோடு ஒன்று சேரத் தொடங்கியுள்ளன. ஏப்ரல் 28 பெர்சே 3.0 பேரணியில் மக்கள் பங்கு கொள்ளாமல் தடுக்க முக்கிய நாளேடுகளைப் பயன்படுத்தியது.

கூட்டம் எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் அதிகமாக இருந்த போது அரசாங்கக் கைக்கூலிகளை அனுப்பி கலவரத்தை மூட்டி பெர்சே மீது பழி போட்டது,  அடுத்து அரசாங்க சார்பு என்ஜிஒ-க்களையும் ஒய்வு பெற்ற “கிரிமினல்களையும்” பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் மீது எல்லா வகையான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக் கொணது.

திறமையான தலைவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துமாறு போலீசாருக்கு ஆணையிடுவது, அடுத்து மோசடி செய்யப்பட்ட தேர்தல்களை ஏற்றுக் கொள்ளுமாறு அடி பணிந்த மக்களை வலியுறுத்துவது, இறுதியில் வெற்றிக்கு உத்தரவாதம் கிடைத்து விடும். அவ்வளவுதான்.

 

 

TAGS: