வங்கதேசத்தில் இராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட கலவர வழக்கில் 309 இராணுவ வீரர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வங்க தேசத்தில் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 25,26-ம் தேதிகளில் இராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. இதில் இராணுவ மேஜர் ஜெனரல் உள்பட 74 இராணு வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக 3 ஆயிரம் வீரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நான்கு நீதிபதிகள் கொண்ட வங்கதேச சிறப்பு பாதுகாப்பு நீதிமன்றத்தில் (பி.ஜி.பி.) விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று நடந்த விசாரணையில் இராணுவ விதிகளை மீறியது , ஒழுங்கு நடவடிக்கையை மீறியது உள்ளிட்ட பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்ட 309 இராணுவ வீரர்களுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.