தேசியப் பதிவுத்துறையின் புள்ளிவிவரக் களஞ்சியம் ஏன் மூன்று ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை?

 “இசி என்ற தேர்தல் ஆணையம் என்ஆர்டி என்ற தேசியப் பதிவுத் துறையின் புள்ளி விவரங்களை  நம்பியிருக்கும் வேளையில் என்ஆர்டி பதிவுகளிலிருந்து இசி விவரங்கள் எப்படி மாறுபட்டன?”

 

 

 

என்ஆர்டி தன்னை தற்காத்துக் கொள்கிறது. காலம் தாழ்த்திய புள்ளி விவரக் களஞ்சியம் மீது பழி போடுகிறது

டிகேசி: அடையாளக் கார்டுகள் பச்சையாக, சிவப்பாக அல்லது நீலமாக இருந்தாலும் அவை குறித்து சவால் எழுப்பப்பட்டால் சில பொத்தான்களை தட்டுவதின் மூலம் விண்ணப்பதாரர்களுடைய தகுதியை மாற்றி விட முடியும்.

ஆனால் ஒர் ஆவணத்தை மட்டும் போலியாகத் தயாரிக்க முடியாது. அது தான் இரட்டைக் குடியுரிமை. மலேசியா இரட்டைக் குடியுரிமையை அங்கீகரிக்கவில்லை என்பதால் மலேசியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நிரந்தரவாசி ஒருவருக்கு குடியுரிமை வழங்கப்படுவதற்கு முன்னர் தமது நாட்டின் குடியுரிமையை கைவிட வேண்டும்.

அவ்வாறு குடியுரிமையை ரத்துச் செய்யும் போது சம்பந்தப்பட்ட அந்நிய நாட்டின் அரசாங்கத்திடமிருந்து பத்திர ஆதாரம் தேவைப்படும். ஆகவே என்ஆர்டி சொல்லும் ஒரு வார்த்தையைக் கூட நம்மில் பெரும்பாலோர் நம்புவதில்லை. அதனால் நாங்கள் எண்ணுவது தவறு என மெய்பிப்பதற்கு யூஸ்னாத்தி ஹாரிஸ் லக்மணா தனது இந்தோனிசியக் குடியுரிமையை ரத்துச் செய்து விட்டார் என்பதற்கு ஆதாரமான ஆவணத்தை அது காட்ட வேண்டும்.

நீங்கள், மலேசியாகினியில் தகவல் வெளியிடப்பட்ட மிஸ்மா மற்றும் இதர அனைத்தும் “திடீர் குடிமக்கள்” மீதும் அதே ஆவணங்களை காட்ட வேண்டும். தயவு செய்து அந்த ஆவணங்களை உங்கள் நாய்கள் தின்று விட்டதாக மட்டும் சொல்ல வேண்டாம்.

கோமாளி: 2008ம் ஆண்டு யூஸ்னாத்திக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டது. அதாவது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு. என்ஆர்டி-யின் தகவல் தொழில் நுட்பத் துறை கடந்த மூன்று ஆண்டுகளாக அது குறித்து எதுவும் செய்யவே இல்லையா ?

இசி, என்ஆர்டி என்ற தேசியப் பதிவுத் துறையின் புள்ளி விவரங்களை  நம்பியிருக்கும் வேளையில் என்ஆர்டி பதிவுகளிலிருந்து இசி விவரங்கள் எப்படி மாறுபட்டன ?

அடையாளம் இல்லாதவன்_4196: இசி-யும் என்ஆர்டி-யும் காரணம் சொல்வதையும் ஒன்றின் மீது ஒன்று பழி போடுவதையும் முதலில் நிறுத்த வேண்டும். தேசியப் பதிவுத் துறைப் பதிவுகளும் வாக்காளர் பட்டியலும் தூய்மையாக, புதுப்பிக்கப்பட்டும் இருப்பதை உறுதி செய்வது உங்கள் கடமை இல்லையா ?

இது போன்ற குளறுபடிகள் நிகழாமல் தடுக்க உங்கள் ஊழியர்கள் சோதனை செய்ய மாட்டார்களா ?

வெறுப்படைந்தவன்: இசி-யும் என்ஆர்டி-யும் இந்தோனிசியர்கள், பிலிப்பினோக்கள், வங்காள தேசிகள் (குறிப்பாக முஸ்லிம்கள்) ஆகியோரை குடி மக்களாகவும் வாக்காளர்களாகவும் பதிவு செய்வதற்கு பிஎன்- -னுடன் கூட்டு சேர்ந்துள்ளன. அடுத்த தேர்தலில் பிஎன் வெற்றி பெற்று அரசாங்கத்தில் நிலைத்திருப்பதை உறுதி செய்வதே அதன் நோக்கமாகும்.

இது போன்ற விஷயம் கிளப்பப்படும் ஒவ்வொரு முறையும் என் ஆர் டி, அது தவறு என்றும் சம்பந்தப்பட்ட நபருக்கு குடியுரிமையும் மை கார்டும் வழங்கப்பட்டு விட்டதாகக் கூறுகிறது.

குடியுரிமை பெறுவது இந்தோனிசியர்களுக்குக் குறிப்பாக தொழில் தேர்ச்சி ஏதும் இல்லாத தொழிலாளர்களுக்கு மிக எளிதாக இருக்கிறது. ஆனால் அதே வேளையில் அறியாமை காரணமாக பிறப்பைப் பதிவு செய்யத் தவறி விட்ட, இந்த நாட்டில் பிறந்த ஆயிரக்கணக்கான மலேசியர்களுக்குக் குடியுரிமை கிடைக்கவில்லை.

மலாய்க்காரர் அல்லாத அந்நிய மனைவி/கணவருக்கு ( உயர்ந்த தேர்ச்சி பெற்றவர்கள் உட்பட) அவர்களுடைய துணைவர்கள்/துணைவியர் மற்றும் குழந்தைகள் குடி மக்களாகவும்  இருக்கும் போதும் குடியுரிமை மறுக்கப்படுகிறது.

TAGS: