இசி பெர்சே-யின் மஞ்சள் நிறத்திலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள விரும்புகிறது

 அடுத்த பொதுத் தேர்தலுக்கு இசி என்ற தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்துவ நிறமான மஞ்சளை மாற்றிக் கொள்ளும். அதே நிறத்தை ஏற்றுக் கொண்டுள்ள பெர்சே-யிடமிருந்து தன்னை விலக்கிக் கொள்ளும் பொருட்டு அது அவ்வாறு செய்கிறது.

அந்தத் தகவலை இசி துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் இன்று அறிவித்தார். அவர் நண்பகல் விருந்து நிகழ்ச்சியின் போது பேசினார். அந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர் இசி தனது அதிகாரத்துவ நிறத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட பின்னர் அந்த அறிவிப்பை அவர் செய்தார்.

 

“நாங்கள் நடுநிலையான நிறத்தைத் தேர்வு செய்வோம். பெர்சே மஞ்சள் நிறத்துடன் நாட்டை குழப்பத்தில் மூழ்கடித்து விட்டது ( huru harakan negara),” என்றார் அவர்.

 

TAGS: