இசி: எங்கள் மசோதா மீட்டுக் கொள்ளப்பட்டதற்கு பெர்சேயும் எதிர்க்கட்சிகளுமே காரணம்

பெர்சேயும் எதிர்க்கட்சிகளும் திரித்த கதைகளுக்கும் பொய்களுக்கும் அரசாங்கம் செவி சாய்த்ததின் விளைவாகவே தேர்தல் குற்றங்கள் திருத்த மசோதா மீட்டுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் கூறுகிறார்.

“அவை அந்தத் திருத்தம் பற்றிய கதைகளை ஜோடித்தன. அபத்தமான கதைகளை உருவாக்கின. அதனால் அந்த மசோதா மோசமானது என்னும் தோற்றம் உருவாக்கப்பட்டது.”

“அது மோசடியானது என மக்கள் சொல்லாமல் இருப்பதற்கும் எல்லாத் தரப்புக்களையும் திருப்திபடுத்தும் பொருட்டும் அரசாங்கம் சிறந்த வழியைத் தேர்வு செய்தது. அதாவது பிஎன், எதிர்க்கட்சிகள், இசி ஆகியவற்றுடன் அதனை விவாதித்தது.

“நாடாளுமன்றம் விரும்பும் சரியான வழி அது என்றால் இசி-யும் அவ்வாறே செய்யும்,” என அவர் கோலாலம்பூரில் நண்பகல் விருந்து நிகழ்ச்சியின் போது கூறினார்.

தேர்தல் முறையை சீர்குலைக்கும் எந்த மசோதாவையும் இசி அறிமுகம் செய்யாது என்றும் வான் அகமட் வலியுறுத்தினார்.

“அவைநெருக்குதல் தொடுப்பதற்காக  கதைகளை ஜோடித்தனர். பொய்களை அடுக்கடுக்காக அவிழ்த்து விட்டன. அதனால் இறுதியில் நாங்கள் அதனை மீட்டுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டோம்.”

“பெர்சே 3.0: உங்களுக்கு வேறு என்ன வேண்டும் ? என்னும் தலைப்பைக் கொண்ட அந்த நிகழ்வை தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சில் இயங்கும் ஜாசா ஏனும் சிறப்பு விவகாரப் பிரிவும்  Inmind என்னும் மன வளர்ச்சிக் கழகமும் கூட்டாக  ஏற்பாடு செய்திருந்தன. அதில் பல ஜாசா அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

TAGS: