உங்கள் மசோதா மீட்டுக் கொள்ளப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் காரணமா ? யார் பேசுவது பார்த்தீர்களா ?

“பிஎன், எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புக்கள் ஆகியவை உட்பட நாங்களும் அதில் சம்பந்தப்பட்டுள்ளோம். ஏன் அது குறித்து அனைவருடனும் அல்லது யாருடனும் முன் கூட்டியே ஆலோசனை நடத்தப்படவில்லை?”

இசி: எங்கள் மசோதா மீட்டுக் கொள்ளப்பட்டதற்கு பெர்சே-யும் எதிர்க்கட்சிகளுமே காரணம்

பீரங்கி: தேர்தல் ஆணையம் தனது சொந்த நன்மைக்காக மிகவும் கெட்டிக்காரத்தனமாகப் பேசக் கூடாது. அடுத்த முறை மாற்றம் செய்ய முயலுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் ஆலோசனை நடத்துங்கள். பொது மக்களுடைய கருத்துக்களையும் பெறும் வகையில் அதனை வெளிப்படையாகச் செய்யுங்கள்.

நீங்கள் இருண்ட ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்வதும் நள்ளிரவு வேளையில் அவசரம் அவசரமாக சட்டத்தை நிறைவேற்ற முயலுவதும் சந்தேகத்தையே அதிகரிக்கும்.

அடையாளம் இல்லாதவன்#02382443: யார் பேசுவது பார்த்தீர்களா ? இசி முன் மொழிந்த அந்த மசோதா பட்டப் பகலில் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஏன் அந்த மசோதாவை இரவோடு இரவாக அவசரம் அவசரமாக நிறைவேற்ற வேண்டும்.

பிஎன், எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புக்கள் ஆகியவை உட்பட நாங்களும் அதில் சம்பந்தப்பட்டுள்ளோம். ஏன் அது குறித்து அனைவருடனும் அல்லது யாருடனும் முன் கூட்டியே ஆலோசனை நடத்தப்படவில்லை ? தனது விருப்பம் போல் எந்த நேரத்திலும் மாற்றங்களைச் செய்யும் அதிகாரத்தை இசி-க்கு கொடுத்தது யார் ?

அட்டையாளம் இல்லாதவன்#88568176: இசி துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார்  எவ்வளவு அபத்தமாக பேசுகிறார் பார்த்தீர்களா ? தேர்தல் குற்றங்கள் சட்டத்திற்கு முன்மொழியப்பட்ட அந்தத் திருத்தங்கள் இவையே:

1) வாக்குச் சாவடிக்குள் இசி-க்கு தனியுரிமை வழங்குவது. அது, இசி தனது விருப்பம் போல் யாரும் பார்க்காத சூழ்நிலையில் மோசடி செய்ய உதவும்.

2) சட்டத்தைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் அம்னோ வலைப்பதிவாளர்களும் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களும் நாடு முழுவதும் ‘fitnah’ குற்றச்சாட்டுக்களையும் ஆபாசப் படங்களையும் வெளியிடுவதற்கு முழு சுதந்திரம் அளிப்பது

தாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது என அப்போது போலீசார் கூறுவர். அம்னோ விரும்புவதும் அது தான்.

இதில் திரிப்பதற்கு என்ன இருக்கிறது இசி ? மலேசியர்கள் முட்டாள்கள் அல்ல. 2008 தேர்தலுக்குப் பின்னர் அம்னோ நோக்கம் என்ன என்பதை அவர்கள் அறிவர்.

அம்னோவுக்காக இசி மேற்கொள்ளும் நடவடிக்கை அது என்பது வெள்ளிடைமலை.

2லாங்: வாக்குச் சாவடிகளில் எதிர்க்கட்சிகளின் ஏஜண்டுகள் இருப்பதை அவர் விரும்பவில்லை. எந்த ஒரு சாட்சியும் இல்லாமல் தேர்தலைத் திருடுவதே அதன் எண்ணமாகும். அந்த ஏஜண்டுகள் எந்தக் காலத்தில் தகராறு செய்தார்கள் ? நான் ஏற்கனவே ஏஜண்டாக இருந்துள்ளேன். வாக்காளர்களுடைய விவரங்கள் துல்லிதமாக இருப்பதை உறுதி செய்யவே ஏஜண்டுகள் அங்கு உள்ளனர்.

கதை திரிக்காதவன்: வான் அகமட்டுக்கு பொய்க்கும் உண்மைக்கும் இடையில் உள்ள வேறுபாடு தெரியவில்லை. அதற்கு சில எடுத்துக்காட்டுக்கள்:

1) ஒரே முகவரியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை ஒருவர் சுட்டிக்காட்டினால் அவர் உண்மையைத் தான் சொல்கிறார்.

அந்த வாக்காளர்கள் முகவரிகளில் அல்லாமல் இடங்கள் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என நீங்கள் சொல்வது தான் பொய்.

2) பல அந்நியர்களுக்கு  உடனடியாக குடியுரிமை அல்லது நீல நிற மை கார்டுகள் (அதுவும் காலாவதியாகும் தேதியுடன்) கொடுக்கப்பட்டுள்ளதை ஒருவர் சுட்டிக்காட்டினால் அது உண்மை.

அந்த முரண்பாட்டுக்கு தேசியப் பதிவுத் துறையின் புள்ளி விவரக் களஞ்சியமும் கணினி முறையும் காரணம் என நீங்கள் சொல்வது தான் பொய்.

3) நாடாளுமன்றத்தில் தேர்தல் குற்றங்கள் சட்டத் திருத்த மசோதா விவாதம் ஏதுமின்றி அகால நேரத்தில் அவசரம் அவசரமாக கொண்டு வரப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது சந்தேகத்துக்குரியது எனபதை ஒருவர் சுட்டிக் காட்டினால் அது உண்மை.

பெர்சே-யும் எதிர்க்கட்சிகளும் கதைகளை ஜோடித்து பொய்களைக் கூறியதாக நீங்கள் குற்றம் சாட்டுவது எல்லா ஜோடனைக் கதைகளுக்கும் மகுடம் வைத்ததாகும்.

பால் வாரென்: இசி துணைத் தலைவர் மிகவும் அபத்தமாகப் பேசுகிறார். அவருக்கு நேர்மை, நம்பிக்கை என்றால் என்னவென்றே தெரியவில்லை.

பயனுள்ள மேம்படுத்தப்பட்ட மாற்றங்களை இசி முன் வைக்கும் என அரசாங்கம் நம்பியது என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறியுள்ளார். அதற்குப் பதில் இசி தன்னை ஏமாற்றி விட்டதாக அரசாங்கம் இப்போது உணருகிறது.

நீல ஆப்பிள்: அந்த மசோதா மீது வான் அகமட் கருத்துச் சொல்லக் கூடாது. ஏனெனில் அவரும் இசி-யும் சட்டங்களை இயற்றுகின்றவர்கள் அல்ல. தாம் அம்னோ உறுப்பினர் இல்லை என்பதை மறுத்துள்ள வான் அகமட் அரசியல்வாதியைப் போல நடந்து கொண்டுள்ளார்.

Telestai!: அவர் அம்னோவின் கைக்கூலியைப் போலப் பேசுகிறார். பெருத்த அவமானம்.

TruthSansBorders: அம்னோ “குதி ” என்று சொன்னால் “எவ்வளவு உயரத்திலிருந்து” என அவர் கேட்பார் போலும்.

 

TAGS: