ஐரின் பெர்னாண்டெஸ் எம்ஏசிசி-யிடம் வாக்குமூலம் கொடுத்தார்

தெனாகானித்தா நிர்வாக இயக்குநர் ஐரின் பெர்னாண்டெஸ், கடந்த திங்கட்கிழமையன்று இந்தோனிசிய நாளேடு ஒன்றுக்கு தாம் அளித்த பேட்டியில் மலேசியாவுக்குப் பாதகமான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுவது மீது புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்புஆணையத் தலைமையகத்தில் இன்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஐரின் பெர்னாண்டெஸ் தமது வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக இன்று எம்ஏசிசி-க்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார்.

இன்று காலை மணி 9.15 வாக்கில் தமது குடும்ப உறுப்பினர்களுடனும் வழக்குரைஞர் ஒருவருடனும் அவர் எம்ஏசிசி வளாகத்தைச் சென்றடைந்தார். அங்கு அவர் கிட்டத்தட்ட 90 நிமிடங்களுக்கு இருந்தார்.

மலேசியா குடிநுழைவுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு வகை செய்யும் சிறப்புச் சட்டம் அல்லது சட்ட வடிவம் எதனையும் கொண்டிராததால் இந்தோனிசியத் தொழிலாளர்களுக்கு இந்த நாடு பாதுகாப்பானது இல்லை என இதர பல விஷயங்களுடன் ஐரின் பெர்னாண்டெஸ் சொன்னதாக ஜகார்த்தா போஸ்ட் என்ற நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

ஐரின் பெர்னாண்டெஸ் விசாரணைக்காக அழைக்கப்படவில்லை என நேற்று எம்ஏசிசி-யின் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் முஸ்தாபார் அலி கூறியிருந்தார்.

பெர்னாமா

TAGS: