ஹிண்ட்ராப் மாநாட்டில் வேதமூர்த்தி கலந்துகொள்கிறார்

மூன்றாவது ஹிண்ட்ராப் தேசிய பேராளர்கள் மாநாட்டில் அவ்வியக்கத்தின் தலைவர் திரு பொ.வேதமூர்த்தி கலந்துகொள்ள்ளவிருப்பது பேராளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் வருகையால் பல ஐயங்களுக்கு தெளிவு கிடைத்து மீண்டும் புத்துணர்ச்சியோடு ஹிண்ட்ராப் மக்கள் சக்தி செயல்படும் என்பது திண்ணம். ஹிண்ட்ராப் துவங்கிய மலேசிய இந்தியர்களுக்கான உரிமை போராட்டம் அதன் இலக்கை அடையும் வரை ஓயாது என்ற கருப்பொருளுடன் இவ்வாண்டு மாநாடு நடைபெறும்.

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஈப்போவில் கூடிய மாதாந்திர ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் உயர் நிலை தேசிய ஒருங்கினைப்பாளர்கள கூட்டத்தில் அவ்வியக்கத்தின் மாநில மற்றும் தேசிய பேராளர் மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகள் குறித்து முடிவெடுக்கப்பட்டது.

ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின்  2ஆவது தேசிய பேராளர் மாநாட்டில் எடுக்கப்பட்ட ஒருமித்த கருத்தின் படி  மூன்றாவது பேராளர் மாநாடு ஜொகூர் மாநிலத்தில் செப்டம்பர் மாதத்தில் நடை பெரும் . அதற்க்கான பொறுப்பை அம்மாநில ஒருங்கிணைப்பாளர் திரு மோகன் மற்றும் அவர் செயலவையிடம் ஒப்படைப்பதாக அணைத்து உயர் நிலை பொறுப்பாளர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது தேசிய பேராளர்கள் மாநாட்டிற்கு , பேராளர்களை தயார் படுத்தும் வகையில் மாநில அளவிலான மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் முதலாவது மாநில ஹிண்ட்ராப் மாநாடு சிலாங்கூரில் எதிர்வரும் ஜூலை 7 ஆம்  திகதியும், தொடர்ந்து நெகிரி செம்பிலானில் ஜூலை 21 ஆம் திகதியும் நடைபெறும். பினாங்கு , பேராக், கெடா ஆகிய மாநிலங்களில் ஆகஸ்ட் மாதம் அந்தந்த மாநில பேராளர்கள் ஒன்று கூடுவர். இறுதியாக ஜொகூரில் நடைபெறும் தேசிய மாநாட்டிற்கு நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளார்கள் ஒன்று திரள்வார்கள்.

மாநில பேராளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ் கண்ட தொலைபேசி எண்களில் ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் மாநில ஒருங்க்கினைப்பளர்களை தொடர்பு கொள்ளலாம்.

கெடா – திரு ராமு (0124442755 ) மற்றும் திரு முனியான்டி  ( 0124292817).  பினாங்கு திரு கலை ( 0125637614), பேராக் திரு ரமேஷ் (0176154951). சிலாங்கூர் திரு செல்வம் (0163137840) , நெகிரி செம்பிலான் திரு சிவா (0196944693) ,ஜொகூர் திரு மோகன் (0197102895)

TAGS: