பெர்சே 3.0ல் பங்கு கொண்டது தொடர்பில் தியான் சுவா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

பத்து எம்பி சுவா தியான் சாங் மீது ஏப்ரல் 28ம் தேதி பெர்சே பேரணியில் சம்பந்தப்பட்டது தொடர்பில் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

தியான் சுவா என பரவலாக அறியப்படும் அவர் மீது தாம் தடுத்து வைக்கப்பட்டிருந்த போலீஸ் பயிற்சி மய்யத்திலிருந்து வெளியேறுமாறு டிஎஸ்பி ராஜகோபால் ஆறுமுகம் கூறிய போது அங்கிருந்து புறப்பட மறுத்ததாக குற்றசாட்டு சுமத்தப்பட்டது.

அவரது நடவடிக்கை 1959ம் ஆண்டுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதிகள், பாதுகாக்கப்பட்ட இடங்கள் சட்டத்தின் பிரிவு 4(2)ஐ மீறியதாகும் என குற்றப் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. பேரணியைத் தொடர்ந்து வந்த காலை மணி 2.30 வாக்கில் அந்தக் குற்றச்சாட்டு புரியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியான் சுவா உட்பட பல ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் அந்த மய்யத்திற்குக் கொண்டு சென்று அவர்களுடைய விவரங்களைப் பதிவு செய்தனர்.

தியான் சுவா அந்தக் குற்றச்சாட்டை மறுத்து  விசாரணை கோரினார். 500 ரிங்கிட் ஜாமீன் தொகை செலுத்துமாறு அவருக்கு ஆணையிடப்பட்டது.

ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த தேர்தல் சீர்திருத்த ஆதரவுப் பேரணி தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசியல் பிரமுகர் தியான் சுவா ஆவார்.

அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் ஈராண்டு சிறைத் தண்டனை, ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்