‘உடற்பயிற்சி’: அரசு அங்கீகரித்த அச்சுறுத்தல்

“அவர்கள் தங்கள் மூளை இருக்கும் இடத்தைக் காட்டுகின்றனர். அது அவர்கள் மூளை வழங்கும் செய்தி.”

அம்பிகா வீட்டுக்கு முன்பு முன்னாள் இராணுவ அதிகாரிகள் ‘உடற்பயிற்சி’ (‘butt exercises’) செய்கின்றனர்

டேவிட் தாஸ்: தாங்கள் நம்பும் எந்த ஒரு காரணத்துக்கும் பொது இடம் ஒன்றில் ஆர்ப்பாட்டம் செய்ய எந்தக் குழுவுக்கும் உரிமை உண்டு.

ஜனநாயக அரசமைப்பு ரீதியில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அந்த உரிமையைப் பயன்படுத்தும் போது மக்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம். நாம் இப்போது அனுபவிக்கின்ற ஜனநாயகத்தை நிலை நிறுத்தவும் பராமரிக்கவும் நாம் கொடுக்க வேண்டிய விலையே அதுவாகும்.

தனிப்பட்ட வீடு ஒன்றை நோக்கி தங்களது பின்பறத்தைக் காட்டி அந்த வீட்டுக்காரருக்கு மருட்டலை விடுப்பது ஜனநாயக உரிமையை பயன்படுத்துவதாக அர்த்தம் கொள்ளக் கூடாது.

பின்புறத்தைக் காட்டிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அந்த வீட்டுக்காரர் பெரு மனதுடன் டின் சுவை பானத்தை வழங்கிய போது அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘மலாய் முஸ்லிம்கள் சுடு நீரை மட்டுமே அருந்துவர்,” எனக் கூறி அதனை ஏற்க மறுத்துள்ளனர்.

அது அச்சுறுத்தல் அல்ல என போலீஸ் கூறுகிறது. மிதமான போக்குடைய முன்னேற்றகரமான நாடு நமது நாடு என்பதில் சந்தேகமே இல்லை.

At234l: அம்பிகா வீட்டுக்கு முன்பு கூடிய அந்த முட்டாள்களை நான் குறை சொல்ல மாட்டேன். அவர்களைப் போன்ற மக்கள் இருக்கத் தான் செய்வார்கள். அது நிகழ்வதற்கு அனுமதித்த அரசையும் போலீசையுமே நான் குறை சொல்வேன்.

அம்பிகா மீது வெறுப்புணர்வைத் தூண்ட அவர்கள் முயலுகின்றனர். பின்னர் யாராவது ஒருவர் உணர்வுகளுக்கு அடிமையாகி அவரைத் தாக்கினால் அரசாங்கமும் போலீஸுமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

அதிகாரத்துவ ஆசீர்வாதத்துடன் அமைதியைக் குலைப்பதற்கு அது நடத்தப்பட்டது என்பது ஊரறிந்த விஷயம். போலீசார் தொலைவில் நின்று கொண்டிருந்தனர். அம்பிகாவின் மெய்க்காவலர்களுக்கும் ஊடுருவல்காரர்களுக்கும் இடையில் தகராறு மூண்டால் ஊடுருவியவர்கள் நிச்சயம் கைது செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்.

உயர்ந்த நிலையிலும் சீருடையிலும் உள்ள மோசடிக்காரர்கள் நமது நாட்டை வழி நடத்திகின்றனரா ? அந்த நடவடிக்கையை கண்டித்த மலேசியர்களுக்கு மிக்க நன்றி.

லின்: இது எல்லா வகையிலும் அரசு அங்கீகரித்த அச்சுறுத்தல். ஒர் அமைச்சரது வீட்டுக்கு முன்னால் இது நடத்தப்பட்டிருந்தால் அவர்கள் உடனடியாக உதைக்கப்பட்டு துரத்தப்பட்டிருப்பார்கள்.

இது போன்ற குடியிருப்புப் பகுதிகளில் ஒரு வீட்டுக்கு முன்னால் அடையாளம் தெரியாத கார் நிறுத்தப்பட்டிருந்தால் தொலைபேசியில் அழைத்தால் போது அது அகற்றப்பட்டு விடும்.

இது போன்ற நடவடிக்கைகள் அதிகாரிகளுடைய அநீதியான போக்கைக் காட்டும் என்பதையும் அதனால் ஆத்திரம் அதிகமாகும் என்பதையும் அதிகாரிகள் ஏன் உணர மறுக்கின்றனர் ?

நான் கடந்த தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போய் விட்டது. ஆனால் இந்த முறை நிச்சயம் வாக்களிக்கச் செல்வேன். அவர்களுக்கு எப்போது தான் ஞானம் பிறக்கும் ?

குழப்பம் இல்லாதவன்: பிஎன் அரசுக்காக அவர்கள் நடத்தும் நாடகங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது.

சுதந்திரமான நேர்மையான தேர்தல்களுக்குப் போராடுவது அவர்களைப் பொறுத்த வரையில் நாட்டை களங்கப்படுத்துவதாகும். அதே வேளையில் தெளிவான சமமான சூழ்நிலையில் நமது தேர்தல்கள் நடத்தப்பட்டு நேர்மையுடன் ஆட்சி புரிய தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அனுமதிக்கப்பட வேண்டும் என பெரும்பான்மை மக்கள் விரும்புகின்றனர்.

அவர்கள் தவறாக வழி நடத்தப்பட்டதால் பெர்சே நோக்கங்களுக்கு எதிராக ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். ஆனால் ஊழல், மோசடி, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவுவது, அதிகார அத்துமீறல், நம்பிக்கை மோசடி ஆகியவற்றுக்கு பிஎன் அரசாங்கம் ஆதரவு அளிப்பதாகச் சொல்லப்படுவதை அவர்கள் புறக்கணித்துள்ளது மிகவும் வருத்தத்தைத் தருகிறது.

தாய்லெக்: இதுதான் மலாய் பாணியா ? இது மலாய் பண்பாட்டுக்கு அவமானத்தைத் தந்துள்ளது. அவர்கள் முட்டாள்கள்.

தங்களை முன்னாள் இராணுவ அதிகாரிகள் எனக் கூறிக் கொள்கின்ற அவர்கள் செய்ததை அவர்களுடைய அன்னையர்கள் பார்த்திருந்தால் மலாய் இனத்துக்கும் பண்பாட்டுக்கும் அவமானத்தைக் கொண்டு வந்த அவர்களுக்கு கன்னத்தில் அறை கொடுத்திருப்பார்கள்.

மலாய் பண்புகள் பண்பாடு ஆகியவற்றின் பாதுகாவலர் எனத் தன்னை கூறிக் கொள்ளும் அமைச்சர் ராயிஸ் யாத்திம் அவர்களே, தயவு செய்து ஏதாவது சொல்லுங்கள்.

டோக்: நடப்பு பிஎன் அரசாங்கம் உங்களுக்கு ஒய்வூதியம் கொடுப்பதால் நீங்கள் அதன் நாய்களாக இயங்க வேண்டிய அவசியமில்லை.

நீங்கள் நாட்டுக்காக சண்டை போட்டீர்கள். இப்போது நாங்கள் ஜனநாயகத்துக்காக, தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்காக சண்டை போடுகிறோம். நாம் இருவரும் நாட்டு நன்மை என்ற ஒரே காரணத்துக்காக சண்டை போடுகிறோம்.

ஒஎம்ஜி: அவர்கள் தங்கள் மூளை இருக்கும் இடத்தைக் காட்டுகின்றனர். அது அவர்கள் மூளை வழங்கும் செய்தி.

முகமட்: பினாஸ் என்ற தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் நகைச்சுவை நடிகர்களுக்கான பூங்கா ஒன்றை அமைப்பது பற்றி தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.

நீண்ட காலம் தேடியும் தரமான நடிகர்களும் நடிகைகளும் கிடைக்காத இவ்வேளையில் நமக்கு அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்பது தெரிந்து விட்டது. நம்மிடைய ஆற்றல் மிக்க பிறவி நகைச்சுவை நடிகர்கள் நிறைய இருக்கின்றனர்.

 

TAGS: