அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் மிச்செல்லியை திருமணம் செய்தபிறகு கடின உழைப்பால் பல மடங்கு முன்னேற்றம் அடைந்தார்.
கடந்த 2000-ஆம் ஆண்டு ஒபாமா தீவிர அரசியலில் குதித்தார். அப்போது நடந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். இதற்கு மிச்செல் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மனைவியின் பேச்சை மீறி தேர்தல் களத்தில் குதித்தார். அப்போது தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் தன்னிடம் இருந்த பணம் முழுவதையும் இழந்தார். இதனால் குடும்பம் வறுமையில் தள்ளாடியது.
ஆனாலும் ஒபாமா ஓயவில்லை. நம்பிக்கையுடன் அரசியல் வானில் தொடர்ந்து பயணம் செய்தார். அவரது விடாமுயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. கடந்த அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அமெரிக்க குடியரசுத் தலைவரான பிறகு அவர் எழுதிய ‘ட்ரீம்ஸ் பிரம் மை பாதர்’, ‘ஆப் தீ ஐசிங்’, ‘தி அடாசிட்டி ஆப் ஹோப்’ போன்ற புத்தங்கள் உலகம் முழுவதிலும் அதிக அளவில் விற்பனையாயின. இதன் மூலம் அவரது வருமானம் பல மடங்கு அதிகரித்தது.