கண்ணுக்கு கண் என்றால் மலேசியர்கள் இறுதியில் குருடர்களாகி விடுவர்

ஒருவருடைய குடும்பத்தையும் அதன் தனிமையையும் நாம் மதிக்க வேண்டும். நாட்டுக்கு நன்மையானதையே நாம் கோருகிறோம். ஆகவே உயர்ந்த தார்மீகப் பண்புகளுடன் நடந்து கொள்வோம்.”

துணை ஐஜிபி வீட்டுக்குமுன் இலவச தோசை

பீரங்கி: நாம் தேர்தல் சீர்திருத்தம் பற்றிக் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த தரப்பின் நிலைக்கு நாம் தாழ்ந்து விடக் கூடாது.

ஒருவருடைய குடும்பத்தையும் அதன் தனிமையையும் நாம் மதிக்க வேண்டும். நாட்டுக்கு நன்மையானதையே நாம் கோருகிறோம். ஆகவே உயர்ந்த தார்மீகப் பண்புகளுடன் நடந்து கொள்வோம். நல்ல எடுத்துக்காட்டுக்களாகத் திகழ்வோம். சரியான சிந்தனைகளே சரியான நடவடிக்கைகளுக்கு வழிகோலும்.

நசுக்கப்பட்டவன்: ஞாயிற்றுக்கிழமை அந்த தோசையைக் கடையைப் போட விரும்பும் அந்த அரசு சாரா அமைப்புக்கு என் பாராட்டுக்கள். அது மிக மிக நல்ல யோசனை. தமது வீட்டுக்கு முன்னால் கடையை அமைத்தால் போக்குவரத்துப் பாதிக்கப்படும் என்பதை அந்த துணைத் தேசியப் போலீஸ் படைத் தலைவர் இப்போதுதான் உணருகிறார்.

ஆனால் மற்றவர்களுடைய வீட்டுக்கு முன்னாள் அதனைச் செய்தால் தவறு இல்லை என்கிறார். எஸ் அம்பிகா வீட்டுக்கு முன்னால் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதன் வழி மற்ற கோமாளிக் கும்பல்கள் அதே போன்று செய்வதற்கும் ஊக்கமளித்ததின் மூலம் அம்பிகாவைத் தண்டிக்க முயன்ற அவருடைய சின்னப் புத்தியைத்தான் அது காட்டுகிறது.

ஜேம்ஸ்1067: அந்த அபத்தங்களை நிறுத்த வேண்டும். ஒருவர் முட்டாள்தனமாக ஏதாவது செய்தால் நாம் பதிலடி கொடுப்பதற்காக அவ்வாறு செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. அப்படிச் செய்தால் நமக்கும் அந்த மனிதருக்கும் எந்த வேறுபாடும் இல்லை என அர்த்தம்.

நமக்கு எதிரில் குறிப்பாக அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு அந்நியர்களுக்கு நீல நிற அடையாளக் கார்டுகள் வழங்கப்பட்டது தொடர்பில் பெரிய போராட்டம் காத்திருக்கிறது.

நாம் ஒத்துழைத்து நாட்டின் துரோகிகளை அம்பலப்படுத்த வேண்டும். அவர்கள் மலேசியர்களுக்கு மட்டுமே உள்ள உரிமையை விற்று விட்டனர்.

அடையாளம் இல்லாதவன்_3f51: தயவு செய்து அந்த அபத்தங்களை நிறுத்துங்கள். கண்ணுக்கு கண் என்றால் எல்லாருமே இறுதியில் குருடர்களாகி விடுவர்-மகாத்மா காந்தி.

அடையாளம் இல்லாதவன் #70867328: இலவசமாக தோசை வழங்கப்படுவதை எதிர்க்கின்றவர்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவருடைய வீட்டுக்குள் நடத்தாத வரையில் அவ்வாறு செய்வதில் எந்தத் தவறும் இல்லை என துணை ஐஜிபி-யே கூறி விட்டார்.

அது ஞாயிற்றுக்கிழமை காலையில் இலவசமாக காலை உணவு வழங்கப்படும் கேளிக்கை நிகழ்வாகக் கூட இருக்கலாம். சிலர் அங்கு உடற்பயிற்சிகளில் கூட ஈடுபடலாம். அது ஆரோக்கியமான நடவடிக்கை தானே? 

வேட்டைக்காரன்: தாம் ஏற்கனவே விடுத்த தர்மசங்கடமான அறிக்கைக்கு முரணாக இருக்கக் கூடாது என்பதற்காக காலித் தமக்கு பிரச்னை ஏதுமில்லை எனச் சொல்லியிருக்கிறார். அம்பிகா விவகாரம் இல்லாவிட்டால் போலீசார் துப்பாக்கிகளுடனும் கறுப்பு நிற கார்களுடனும் அங்கு காத்துக் கொண்டிருப்பர்.

பிஎன் -னுக்கு ஆதரவாக அந்த மனிதர் ஏற்கனவே பல மடத்தனமான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

இனவாத எதிர்ப்பாளன்: அதனைச் செய்ய வேண்டாம் என நான் அறிவுரை கூறுகிறேன். ஏனெனில் குழப்பத்தை மூட்டுவதற்கு அம்னோ விரும்புவதும் அதுவே.

 

TAGS: